உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்கு வளர்த்திகள்‌ 145

நூலோதி 1. Essig, E.O. College Entomology, Asia Playing Cards. Co., Agra, 1982. 2. Mani, M.S., General Entomology, Oxford & IBH Publishing Co., New Delhi, 1973. and 3. Nayar, K.K., Ananthakrishnan, T.N. David, BV., General and Applied Entomology, Tata McGraw-Hill Publishing Co., Ltd. New Delhi 1981. அரக்கு வளர்த்திகள் அரக்கு என்பது அரக்குப் பூச்சிகளினால் தற்காப்புப் பொருளாகக் கசிந்து உலர்ந்து உண்டாகின்றது. இது ஏராளமான தாவரங்களின் உறுப்புகளின் மேற் பரப்பில் சுரக்கப்படுகிறது. அரக்குப் பூச்சிகளினா லுண்டாக்கப்பட்ட போதிலும், இது சம்பந்தப்பட்ட தாவரங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பது புலனாகின்றது. அரக்கைச் சுரக்கும் பூச்சிகள் இலட் சக்கணக்கில் இளம் தாவரக்குச்சியின் மேற்பரப்பில் காணப்படுவதால் 'லட்சம்' என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறிக் கும் வகையில் "Lac'" என்ற சொல் உருவானதென்று கூறப்படுகின்றது. இவை தாவரச் சாற்றை உணவாக உறிஞ்சி உண்டு வாழ்பவை. அரக்குப் பூச்சிகளை வளர்க்கும் தாவரங்கள். அரக் குப் பூச்சிகள் (laccifer) சில குறிப்பிட்ட தாவரங் களின் மீது மட்டுமே அரக்கைச் சுரக்கின்றன.இந்தி யாவில் கீழ்க்கண்ட தாவரங்களில் அரக்குப் பூச்சிகள் சாதாரணமாக வளர்கின்றன :- பூட்டியா மோனோஸ்ப் பெர்மா (Butea monosperma) -ஃபாபேசி (Fabaceae), ஹிஹிஃபஸ் மௌரிந்தியானா (Zizyphus mauritiana) ராம்னேசி (Rhamnaceae). ஸ்கிலெய்கீரா ஒலியோசா (Schleichera Oleosa)-CG (Sapindaceae), அக்கேசியா நிலோட்டிகா (Acacia nilotica) - மிமோசேசி (Mimosaceae), Gaprun Grua (Shorea robusta)- டிப்டிரோகார்ப்பேசி ( Dipterocarpaceae), அல்பிசியா (Albizia) - மிமோசேசி (Mimosaceae). அரக்கினியல்பு அது உண்டாகும் மரவகைகளைப் பொறுத்து வேறு படுகின்றது. இந்தவகையில் பூவன்மா (Schleichera oleosa) அரக்கு மற்ற எல்லாவற்றையும்விட மிக உயர்ந்த வகையைச் சேர்ந்ததென்று கருதப்படு கின்றது. அரக்கு சேகரிக்கும் முறை. அரக்குக் கூடுகள் உள்ள தாவரக்குச்சிகளை வெட்டியெடுத்து அவற்றை அ.க-2 அரக்கு வளர்த்திகள் 145 நிழலில் உலர்த்துவார்கள். பின் அவற்றின் மேற்பரப் பிலுள்ள அரக்கை மட்டும் சுரண்டி எடுப்பார்கள். இதற்குக் கொம்பரக்கு (stick lac) என்று பெயர். இதை நீருடன் கலந்து, அதிலுள்ள அசுத்தங்களும், சாயமும் நீக்கப்படுகின்றன. நீரிலிருந்து அரக்கு பிரிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட அரக்கு மணி அரக்கு (seed lac) என்றழைக்கப்படுகின்றது. இந்தவகையில் பெறப் படும் அரக்கில் 70-80 விழுக்காடு ரெசினும், 1-2 விழுக்காடு சாயப் பொருள்களும், 4-6 விழுக்காடு மெழுகும் அடங்கியிருக்கின்றன. அவலரக்கு (shellac என்பது அரக்கிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகைப் பூச்சு .அது அரக்குத்தூளை உருக்கி, அதை அழுத்தத் தின் (pressure) மூலம் வடிகட்டிஉருக்குமுறையில் தயாரிக்கப்படுகிறது. சாராயத்தில் அரக்கைக் கரை யச் செய்து அதிலிருக்கும் அழுக்கை நீக்கிப் பிறகு ஆவியாக்கிக் கரைசல் முறையில் (solvent process) தூய்மையான அவலரக்கு தயாரிப்பது மற்றொரு முறையாகும். அரக்கின் தன்மைகளும் பயன்களும். அரக்கிற்குச் சில இயற்கையான தன்மைகளுண்டு. சுத்தமான அரக்கு பழுப்பு கலந்த மஞ்சள் நிறமுடையது. இது சாராயத்தில் அல்லது சிறிது காரத் தன்மையுள்ள திரவத்தில் எளிதில் கரையக்கூடியது. ஒரேசீரான மென்படலமாகப் படியும் தன்மையுள்ளது; நீரிலும் எண்ணெயிலும் கரையாதது; அரிக்கப்படாதது; ஒட்டிக்கொள்ளும் தன்மையும், நீளுந் தன்மையும் கொண்டது; தளத்தைச் சமமாகவும், வழவழப்பாக வும் ஆக்கும் தன்மை கொண்டது. அரக்கில் ரெசின் 70-80 விழுக்காடு அடங்கியுள்ளது. மேலும் சர்க்க ரைப் பொருள்கள், புரதங்கள், கரையக்கூடிய உப்புச் சத்துகள் 2-4 விழுக்காடும், மெழுகுப் பொருள் 4-6 விழுக்காடும்,மண், பூச்சியின் உறுப்புகள் போன்ற பிறபொருள்கள் 8-12 விழுக்காடும் இதில் அடங்கியிருக்கின்றன. அரக்கில் நீரில் கரையக்கூடிய சிவப்பு வண்ணப்பொருளும், காரத்திலும் (alkali) எரிசாராயத்திலும் (spirit) கரையக்கூடிய மஞ்சள் வண்ணப்பொருளும் அடங்கியிருக்கின்றன. இசைத் தட்டுகள் தயாரிக்கவும், மரச்சாமான்கள், காகித அட்டைகள், எண்ணெய்த் துணிகள், மின் தடைச் சாதனங்கள் ஆகியவற்றின் மீது பூசவும், நகச்சாயங் கள், கை வளையல்கள் ஆகிய பல்வேறு பொருள் களைச் செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். அரக்குச்சாயம், கம்பளி, பட்டு, தோல் ஆகியவற்றில் சாயம் ஏற்றுவதற்கு முற்காலத்தில் இது வெகுவாகப் பயன்பட்டது. மெருகெண்ணெய் (varnish), மெருகுப் பொருள்கள் (polish), வர்ணக்குச்சிகள் (lacquers). முத்திரை அரக்கு (sealing wax) ஆகியலை தயாரிப் பதற்கு அரக்கு பயன்படுத்தப்படுகிறது. எரிசாராய மெருகெண்ணெய் மரத்தரைகள் (wooden floors),