அல்ப்பர் நோய் 267
தோன்றுகின்றன. அத்துடன் நரம்பு நுண்நார் மாற் றங்களும் (neurofibrillary) சேர்ந்து வரும். இது அல் சீமர் நரம்பு நுண்நார் மாற்றங்கள் என வழங்கப் படும். இந்த மாற்றங்கள் சற்றே இளைய வயதின ரிடத்தில் முதியவர்களை விட அதிகக் கடுமையாகத் தோன்றுகின்றன. இந்த நோய் எந்த வயதிலும் தொடங்கலாம். ஆனால் பொதுவாக வாழ்வின் பிற்பாதியில் நேர் வதற்கு அதிக வாய்ப்பு உண்டு. மெல்ல மெல்லத் தோன்றும் இந்நோய் சீராக வளர்ந்து கொண்டே செல்லும்; பேசும் திறனும் பாதிக்கப்படும். வழக்கமாக அண்மைக்கால நினைவாற்றல் முதலில் பாதிக்கப்படுகிறது. பின், சீர்தூக்கிப் பார்க் கும் திறன் அற்றுப் போகிறது. நோயாளி கை கால்களை அசைக்கும்போது, அவ்வகை அசைவுகள் மெதுவாகவும் இறுக்கமாகவும் காணப்படும். நோயாளி குறுகிய அடிகள் இட்டுக் கலைந்த நடை (short shuffling gait) போட்டு நடப்பார். இந்நோய் ஒரு சீராகத் தானாகவே வளரக் கூடியது. ஏறத்தாழ ஒன்றிலிருந்து பத்து வருடங்கள் து தன் போக்கில் வளரலாம். காலப்போக்கில் அறிவுத் திறனழிவு, பேச இய லாமை, அறிய இயலாமை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். நோயின் கடைசிக் காலகட்டத்தில் வலிப்பும் வரக் கூடும். நோயாளியால் ஒன்றும் செய்ய முடியாமல் போகும். அப்போது இடையே ஏற்படும் வேறு நோய்களால் இறுதி உண்டாகலாம். நோயாளி தன் மனமழுக்கத்தைச் சமாளிக்க முயலும்போது முன்கூட்டியே இருந்த உள்நோய்க் குறிகளை அதிகப்படுத்தி ஆழங்காண வைக்கும். சோர்வோ, எண்ணத் தளர்ச்சியோ,ஐயமனப்பான் மையோ பெருகும். இந்த நோய்க் குறிகள்தாம் பெரும்பாலும் நோயாளியை மருத்துவக் கவனிப் புக்கு இட்டுச் செல்கின்றன. நோயாளி தனது மனமழுக்கத்திலும் புரிந்து சமாளித்தல் சில சமயங்களில் இயல்பாக நடந்தேறும். அதனால்தான் முதுமையடைவதால் நிகழ்கிற மருத் துவப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவை நோயாளியை எதிர் கொள்ளும். இந்த மூளை வியாதி, இந்தப் பிரச்சினைகளை நோயாளி தானே எதிர்கொண்டு செயல்படவிடாமல் தடுக்கிறது. அல்ப்பர் நோய் 267 தனக்கு அறிவாலும் உணர்வாலும் துணையா யிருந்த நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர் ளின் மரணம் அல்சீமர் நோயாளியை மேலும் பலவீனமாக்கி மருத்துவ மனையில் சேர்த்துச் சிகிச்சை பெறத் தூண்டும். வாழ்க்கையின் நடுவில் அல்லது பிற்பகுதியில் தானே தோன்றித் தொடர்ந்து அதிகமாகி வரும் நோய் மனமழுக்கம்தான் என்று கொள்ளலாம். பெரு மூளை, 'சிதைவுற்ற நிலையைக் கம்ப்யூட்டர் சேர்ந்த டோமோகிராம் (tomogram) என்ற கருவியின் வாயி லாகக் கண்டு எவ்வளவு தூரம் சிதைவு ஏற்பட் டுள்ளது என அறிந்து கொள்ளலாம். இந்நோயைக் கண்டுபிடிக்கும் முன், தைராய்டு குறை இயக்க நோய் (myxodema), கிரந்தி (syphilis) என்னும் பால்வினைநோய், மூளை முன்பகுதியில் இருக்கக்கூடிய கட்டி ஆகிய நிலைமைகள் இல்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். தவிரவும் குறிப்பிட்ட காரணங்களால் பீடிக்கும் மனமழுக்கத் தைப் பிரித்தறிதல் தலையாய கடமை ஆகும். தற்சமயம் இந்நோய்க்குச் சரியான மருந்து கிடை யாது. மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்தும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நூலோதி ஐ.அ. 1. Lawrence, C.Kolb, M.D., H. Keith, Brodie, M.D., Modern Clinical Psychiatry, W.E. Saunders Company. London, Tokyo, 1982. 2. Busse, E.W, and Blazer, D., (eds), Hand book of Geriotric Psychiatry. New york, Van Nostrand, 1980. 3. Deboai U. Maclachlan, D.R.C. Senile Dementia and Alzemer's Disease; A Current View. Life Science, 1973. அல்ப்பர் நோய் அல்ப்பர் நோய்(Alper's disease) ஒருவகை மூளைப் பாதிப்பினை அடிப்படையாகக் கொண்ட து. இந் நோய் பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு நிலைக்கக் கூடியது. வாழ்வின் தொடக்க நாட்களிலோ பிள்ளைப் பருவத்திலோ இந்நோயின் தொடக்கம் தென்படுகிறது. மனத்திறனிலும் மனச்செயலிலும் வளர்ச்சி குன்றுதல் இந்நோயின் முக்கிய அறிகுறி யாகும். பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காடு கை