உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவெண்‌ மாற்றி 499

characteristic) மிகைப்பி பயன்படுத்தப்பட வேண்டும். கலக்கப்படும் இரு குறிப்பலைகளில் ஒன்று, நேரிலாச் சிறப்பியல்புடைய பகுதியிலேயே அடங்கி முழுதும் அலைந்து கொள்ளும் அளவுக்கு அலைவீச்சு உடைய தாக இருக்கவேண்டும். எனினும் அகஅலைவியற்றி யிலேயே (local oscillator) இச்செயலைச் செய்தல் சிறந்தது. உணர்சட்டத்திலிருந்து (antenna) வரும் வானொலி அலைகளின் (r. f.) அல்லது வானொலி அலைவெண் பகுதியிலிருந்து வரும் மற்றொருகுறிப்ப லையின் வீச்சு, உய்யமற்றதாக(noncritical) இருக்கும். எனவே, இவ்வகை அலைவெண் மாற்றிகளில் அலை வியற்றியும் நேரிலாக் கலப்புப் பகுதியும் உள்ளன இப்பகுதிகள் வெவ்வேறு குழல்களை (valve) அல்லது திரிதடையங்களை (transistors) இணைத்தோ, தனிப் பகுதியாலோ உருவாக்கப்படலாம். அலைவியற்றியை மட்டுமே பயன்படுத்தி வானொலி அலைவெண் ணுள்ள குறிப்பலைகளை உட்செலுத்தி, இடைநிலை அலைவெண்ணுள்ள அலைகளைப் பெறலாம். . அலைவியற்றி உள்ளடங்கிய அலைகலப்பிகள். இவை c வகுப்பைச் சார்ந்த அலைவியற்றிகள். எதிர்முனை மின்னோட்டத்தின் துண்டிப்பு நிலைக்கு (cut off) அருகிலுள்ள நேரிலாச் சிறப்பியல்புகளைப் பயன் படுத்தி அலைவுகள் உருவாக்கப்படுவதால் கலத்தல் (mixing) சிறந்த முறையில் நிகழ்கிறது. வானொலி அலைவெண் மாற்றி 469 ஊறு அலை உள் தருகையும் இடைநிலை அலைவெண் ணுள்ள அலை வெளியீடும் அலைவாக்கத்திற்கு ஊ விளைவிக்காத வகையில் இணைப்பு வடிவமைக்கப் பட்டு விட்டால் அப்படிப்பட்ட அலைவியற்றி உள்ள டங்கிய அலைகலப்பிகள் சிறந்த அலைகலப்பிகளாகச் செயலாற்றுகின்றன. அலைவியற்றியும் அலைகலப் பியும் தனித்தனியாக அமைந்த இணைப்பை ஒப்பி டும்போது இலை குறைந்த மாற்றும் திறன் கொண் டவையாகும். படம் 1 இல் அலைவெண் குறிப்பேற்ற வானொலி வாங்கிக்காகப் பயன்படுத்தப்படும் அலைவியற்றி உள்ளடங்கிய அலைவெண்மாற்றியின் இணைப்பு காட்டப்பட்டுள்ளது. இதில் திரிதடையத்தில் Ris R, என்ற மின்னிலைப் பகுப்பியையும் (potential divider) R, என்ற உமிழ்வித் தடையையும் (emitter resistance) பயன்படுத்தி நேர்மின்னோட்டம் (d.c) நிலைப்படுத்தப்படுகிறது. இது கால்ப்பிட்ஸ் அலை வியற்றி (Calpitt's oscillator) இயங்கும் அடிப்படை யில் செயல்படுகிறது. C, C, என்பவை அடிப்படைக் கொண்மிகளாகவும், C, என்பது வானொலி அலைப் பகுதியை இசைக்கும் கொண்மியாகவும் (tuning) பயன்படும். C ஏனைய தகஅமைப்புக் கொண்மி களுடன் (variable capacitor) தொகுத்து (ganged) இயக்கப்படுகின்ற தகஅமைப்புக் கொண்மியாக C3 C₂ Cs C4 வானொலி அலைவெண் உள்தருகை R₁ R2 Ca R3 13 படம் 1, அலைவியற்றி உள்ளடங்கிய அலைவெண்மாற்றி -0+V இடைநிலை அலைவெண். வெளியீடு 0