உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 அழற்சியும்‌ அரிப்பும்‌, அல்குல்‌

502 அழற்சியும் அரிப்பும், அல்குல் அல்குல் புற்றுக்கு முந்திய கட்டத்திலும் (pre cancerous state) புற்றின் சமயத்திலும் நீரிழிவு நோய், காமாலை போன்ற நோய்களின்போதும் உயிர்சத்துப் பற்றாக்குறை நிலைகளிலும் (hypovi- taminosis) எஸ்ட்ரோஜன் (estrogen) பற்றாக்குறை, பெண்களில் ஏற்படும் மாதவிலக்கு நின்றுபோன காலங்களிலும் மற்ற எந்தவிதமான காரணங்களும் இல்லாதபோது, மனநோய் காரணமாகவும், அல்குல் அரிப்பு உண்டாகின்றது. இதற்கான சிகிச்சைமுறை கள் அல்குல் அரிப்பின் காரணத்தைப் பொறுத்து வெவ்வேறுவிதமாக இருக்கும். சுய சுகாதார முறைகளும், (personal bygiene) அழற்சியை உண்டாக்க கூடிய பொருளைப் பயன் படுத்துவதைத்தவிர்ப்பதும் அரிப்பு தடுப்பதற்கான பொதுப்படையான நோய்த்தடுப்பு முன் நடவடிக்கை (prophylactic measure) ஆகும். நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதனைப் பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொண்டு அதற்கான சிசிச்சை பெறவேண் டும். அல்குல் வாய்அழற்சி, ஒட்டுண்ணிகள் தொற்று, காளான்கள் தொற்று முதலியன இருந்தால் அவற்றிற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும், ஒவ்வாமை (allergy) காரணமாக இருந்தால் எதிர் ஹிஸ்டமின்களும் (antihistamins) ஊக்கிகள் பற்றாக்குறையாக இருப்பின் எஸ்ட்ரோஜன் களிம்பும் மருந்தாகப் பயன்படுத்தினால் குணமடையும். புற்று இருப்பின் அறுவைச் சிகிச்சையின் காரணமாக மூலம் குணப்படுத்தலாம். அல்குல் அழற்சி காரணமாக வீக்கம் அல்குல் அழற்சியின் (swelling), செந்நிறமாதல் (redness), வலியும் கசிவும் (exudation) ஆகியன தோன்றுகின்றன. இந்நிலை யில் நோயாளிக்கு எரிச்சல், அரிப்பு ஏற்பட்டு, சொரிந்து கொள்வதனால் நகக்குறிக் கீறல்கள் (scratching), புண்கள் முதலியன உண்டாகின்றன. சீழ்க்கட்டிப் பாக்டீரியாக்கள் (pyogenic orga- insms), அதி நுண்ணுயிரிகள், காளான்கள் (fungi) ஒட்டுண்ணிகள் (parasites), ஒற்றை அணு உயிர்கள் (protozoa) முதலியன அல்குல் அழற்சியைத் தோற்று விக்கின்றன. சீழ்பிடிக்கும் அழற்சி நோய்கள் (Pyogenic diseases) ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் (staphylococcus aureus), ஸ்டிரப்டோகாக்கஸ் (streptococus) போன்ற நுண்ணுயிரிகள் தோல் சீழ்க் கொப்புளங்களை (pustular infection) ஏற்படுத்தி இம்பெட்டிகோ (impetigo) என்ற தேகச் சிரங்கு நோய்க்குக் காரண மாகின்றன. இந்நோய் அல்குல் புற இதழ்களில் முக்கியமாகக் காணப்படினும் சில சமயங்களில் முகம், கை போன்ற உடலின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. குழந்தைப் பருவத்தில் இது மிகுதியாகக் காணப்படுகிறது. இந்த நுண்சிறு கீழ்க்கொப்புளங் களைக் கிழித்துவிடுவதின் மூலம் சீழ் வெளிப்பட்டு நோய் குணமாகிறது. மேற்புறம் தடவுகின்ற நுண் ணுயிர் எதிர் மருந்துகள் (antibiotics) விரைவாகக் குணமளிக்கின்றன. கொந்தளிப்பு புண்கள் தன்மை. (Ulcerative impetigo or Eczema). மேற்கூறிய நோயினை ஒத் திருந்தாலும், கொந்தளிப்புப் புண்கள் ஏற்படும் போது அவை தோலின் ஆழ்பகுதிவரை ஊடுருவிச் சென்று, பரந்த, தட்டையான பல்வேறு நிறங் களுடன் காணப்படும் புண்களை உண்டாக்கு கின்றன. அல்குல் புறஇதழ், அல்குல்மேடு போன்ற பகுதிகளில் காணப்படும் இப்புண்கள், தழும்பு களுடன் குணமாகின்றன. மயிர்க்கால் அழற்சி (Folliculitis). மயிர்க்கால்கள் நுண்ணுயிரிகளினால் மேலெழுந்தவாரியாகத் தாக் கப்படும்போது (superficial infection) மயிர்க்கால் அழற்சி ஏற்பட்டுச் சில சமயங்களில் சிறுகீழ்க் கழலை கள் (furunculosis) ஆக மாறுகின்றன. சிறு சீழ்க்கழலைகள் (furunculosis, subcutaneus). கெட்டியான ஒரு சிறுமுண்டு (hard nodule) போன்று ஆரம்பித்து பிறகு தோலின் வழியாக வெடித்து, சீழ், உதிரம் முதலியன வெளியாகின்றன. இந்நோய் கர்ப்பிணிகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலானோருக்கு அதிக அளவில் வருகிறது. செந்தோல் (erysipeals). பீட்டா ஹீமோலைடிக் ஸ்டிரப்டோ காகக்ஸ் (beta haemolytic streptococcus) என்ற நுண்ணுயிரி தாக்கும் போது, விரைந்து பர வக்கூடிய செந்தோல் நோய் ஏற்படுகிறது. ஆனால் இது அரிய நோயாகும். இந்நோய்க்குப் பரந்த செயல் திறனுள்ள நுண்ணுயிரி எதிர் மருந்துகள் (broad spectrum antibiotics) குணமளிக்கும். கோனொரிய அல்குல் - அல்குல் வாய் அழற்சி unluonagonitis). நெய்சீரியா கோனேரிரியே (neiseri gonerrhoea) என்ற நுண்ணுயிரினால் ஏற்படும் இந் நோய் பாலுறவு மூலம் பரவுகிறது. ஸ்கீன் சுரப்பி களும் பார்த்தோலின் சுரப்பிகளும் பாதிக்கப்பட்டு சீழ்க்கசிவு உண்டாகிறது. இந்தச் சீழினை நுண் நோக்கியின் மூலம் ஆய்ந்து நோயினை உறுதி செய்யலாம். இதை நீண்ட காலச்செயல்திறன் பெனி சில்லின் (long acting penicillin) மூலம் குணப்படுத்த லாம். பார்த்தோலின் சுரப்பி சீழ்க்கட்டி. இது கோனா