550 அளக்கும் துளைவாய்
550 அளக்கும் துளைவாய் பதினைந்து டன் வரை எடை தூக்கும் திறனும் கொண்ட அள்ளுவாளிகள் பயன்படுகின்றன. அள்ளுவாளியைப் பயன்படுத்தத் தூக்கு எந்திரங்கள் (ஏந்திகள்) தேவை. இதன் முக்கியப் பகுதிகள், 1. சேர்த்து அள்ளும் இரண்டு தாடை போன்ற அள்ளிகள் (Scoops), 2.அள்ளிகள் இயங்கும் அச்சு 3. தூக்கும் எஃகு வடம், 4. தாடைகளை மூடவும் திறக்கவும் பயன்படும் எஃகு வடம் 5. இயங்கும் வடத்தைச் சுற்றும் உருளை 6.உருளையுடன் இணைந்த பிணைக்கும் சங்கிலி ன் 7. தூக்கும் வடத்துடன் தாடைகளை இணைக்கும் கைகள் என்பனவாகும். படத்தில் (பக்.549) அள்ளு வாளியை அள்ளும் நிலையிலும் மூடிய நிலையிலும் காணலாம், வேலை செய்யும் முறை. இயக்கு வடம் தளர்த் தப்படும்போது தாடைகள் விரிவடைவதுடன் பிணைக்கும் சங்கிலியும் கீழே இறங்கும். இந்த விரிந்த நிலையில் அள்ள வேண்டிய பொருட்குவியலின் மீது வாளி இறக்கப்படும். பிறகு இயக்கு வடத்தை இறுக் குவதால், அது சுற்றப்பட்டுள்ள உருளை பிணைக்கும் சங்கிலியைச் சுற்றிக் கொள்ளும். எனவே, அப்போது தாடைகள் ஒன்று சேர்ந்து குவியும்; குவியும்போதே வாளியில் பொருள் அள்ளப்படும். பின்பு தூக்கும் வடத்தைத் தூக்கு ஏந்தியின் மூலம் இழுப்பதால் வாளி மேலே எழும். இந்த நிலையில் தூக்கு ஏந்தி யின் மூலம் வாளியைத் தேவையான இடத்திற்குக் கொண்டு செல்லலாம். வாளி சரியான இடத்தை அடைந்தபின் முதலில் தூக்கும் வடத்தைத் தளர்த் திப் பொருளைக் குவிக்க வேண்டிய தளத்தின் மீது இறக்க வேண்டும். பின்பு இயக்கும் வடத்தைத் தளர்த்த, தாடைகள் விரிந்து, வாளியிலிருந்த பொருள் கீழே விழும். மறுபடியும் அள்ளுவதற்கு, தாடைகள் விரிந்த நிலையில் தூக்கு வடத்தைக் கொண்டு, வாளியைப் பழைய இடத்தில் சேர்க்க லாம். காண்க, அகழ் எந்திரங்கள். அளக்கும் துளைவாய் சி.பி.கோ. ஒரு குழாய் வழியாகச் செல்லும் பாய்மத்தின் அளவைக் கணிக்க, அதன் குறுக்கே பொருத்தப் படும் துளையுடைய தகட்டுச் சுவர் அளக்கும் துளை வாய் (metering orifice) எனப்படுகிறது. பாய்ம ஓட்டத்தை அளக்கவும் கட்டுப்படுத்தவும் இது பயன் படுகிறது. எண்ணெய்கள், காற்று, வளிமங்கள், நீராவி, பிற ஆவிகள் ஆகியவற்றை அளப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம். அளக்கும் துளை வட்ட மாகவோ, சதுரமாகவோ இருக்கும். கூர்முனை பாய்வுத் திசையில் முன்பக்கம் இருக்கும். நீர்மம், வளிமம் இரண்டிலும் துளைவாய் அவற் றின் அழுத்த ஆற்றலை இயங்கு ஆற்றலாக (kinetic energy) மாற்றுகின்றது. நீர்மத்தைப் பொறுத்தவரை இயங்கு ஆற்றலென்பது அதன் h₁ அழுத்தமானி T aj அளக்கும் துளைவாய் h₂ 2