ஆண்டிசைட்டு 873
ஏராளமாக அடிக்கடிக் காணப்படும். ஆனால் தூய படிமப் பொருள்களாகப்பெரும்பாலும் இருக்காது. ஆலிவின் கனிமத்தை உள்ளடக்கிய பசால்ட்டு போன்ற ஆண்டிசைட்டு பாறைகளை ஆலிகோ கிளேசு இருந்தால் மியூகரைட்டு (mugcarite) என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இவைகளது நுண் இழைமை அமைப்பினைப் பார்க்கும் பொழுது, அவைகளை டிராக்கி ஆண்டிசைட்டு (tracby ande- sites) என்று அழைப்பதே பொருந்தும். இதில் சிலிக்கா மிகுதியாகித்தனி குவார்ட்சு கனிமமாக உரு வாகும் நிலை வந்தால் இவற்றை டேசைட்டு, ரயோலைட்டு என்ற பாறைகளாகக் கருதலாம். இப்பாறைகள் கண்டப் பகுதிகளில் அதிகமாக பரந்து காணப்படுகின்றன. ஆண்டிசைட்டுகோடு (andesite line) என்று, இப்பாறைகள் காணப்படும் பகுதிகளை குறிப்பிட்டு, அக்கோடுகள் மா கடலுக்கும், கண்டப் பகுதிக்கும் இடையே அப்பாறைகளின் கோடாக அமைகிறது என்று கருதுகிறார்கள். உ எல்லைக் இவை ஆலிவின் பசால்ட்டோடு (olivine basalt) தொடர்புற்று வெளி உமிழ்வுப் பாறைகளாக (eruptive rock) மலைவளர் நிலக்கிளர்ச்சியின்போது (orogenic moment) அடிக்கடி உமிழப்பட்ட பாறை வகைக ளாகக் காணப்படுகின்றன. இவை புவியின் மேற் பரப்பிலுள்ள சயால் (sial) என்னும் நிலமேலோட்டுப் (crust) பகுதியில்தான் காணப்படுகின்றன. உலகில் வெவ்வேறு காலங்களில் உருவான மலைத்தொடர் களின் எழுச்சியின்போது அவற்றின் அருகாமையில் பல்லாயிரக்கணக்கான அடிகள் உயரத்திற்கு விட்டு வீட்டு உமிழப்பட்டுக்காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமாக சான் ஜூவான் என்று அழைக்கப்படும் கொலராடோ மாநிலப் பகுதியிலுள்ள வெளி உமிழ் வுப்பாறைத் தொகுதிகளைகூறலாம்.இங்கு இப்பாறை கிரேட்டேசியஸ் (cretaceous) காலத்தில் உருவான ராக்கி மலைத்தொடர் அடுக்குகளை ஒட்டி உமிழப் பட்டு பின்தங்கிய காலங்களில் தொடர்ந்து 5 முறை உமிழப்பட்டு காணப்படுகிறது. எல்லாத்தருணங்களி லும் பசால்ட்டு பாறைகளுடன் தொடர்புற்று காணப் படுகிறது. இவை இங்கு 10,000 அடி தடிப்புடைய ஒரே பாறையாகப் பல ஆயிரம் கி.மீட்டர்களுக்கு பரந்து காணப்படுகின்றது. இதைப்போன்று வாஷிங் டன் அருகிலுள்ள காஸ்கார்டு ரேஞ்சு(Cascord range) உமிழ்வுப் பாறைகளும், ஜப்பான் நாட்டின் ஹுசி (Huzi) எனுமிடத்தில் அமைந்த உமிழ்வுப் பாறை களும் குறிப்பிடத்தக்க ஆண்டிசைட்டு பாறை களாகும். இம்மாதிரி ஆண்டினசட்டு பாறைகள் உலகில் பல இடங்களிலும் பசால்ட்டு, டாசைட்டு (dacite), ரயோலைட்டு (rhyolite) போன்ற பிற உமிழவுப் அ.க-2-110 2 ஆண்டிசைட்டு 873 பாறைகளோடு தொடர்புற்றே காணப்படுகின்றன. இப் பாறைகள் உருவாவதற்கு அடிப்படையான தாய்க்குழம்பு பசால்ட்டு வேதியியல் தன்மை உடைய தாயிருந்து அதனின்று பகுத்து படிகமாதல் (frac- tional crystallisation) முறையில் இப்பாறைகள் உரு வாகி இருக்கக்கூடும் என்று நம்பப்பட்டு வந்தது. இதற்கு அடிப்படையாக இப்பாறைகளில் காணப் படும் மிகுதியான அளவு Al,O, குறைந்த அளவு Tio, (Fe,O), மிகக் குறைந்த அளவுள்ள KO ஆகிய வேதியியல் பொருள்களின் விகிதச் சேர்க்கையைக் காட்டினார்கள். ஆனால் உலகில் இது உருவா வதற்குக் காரணமான தாய்ச்குழம்பு பாறையாக இது கிடைக்கும் அளவு பசால்ட்டைவிட {busalt) அதிக மாக இருக்கிறது. இப்பாறைகளது வேதியியல் கூட் டுச்சேர்க்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பசால்ட்டு பாறையிலிருந்து பகுத்துப்படிகமாதலால் உருவாகக்கூடிய அடுத்தடுத்த பாறைகளது கூட்டுச் சேர்க்கையைக் கணக்கிட்டு ஒரு வளைகோடு இட்டு காண்பிப்பதற்கும், அதே படத்தில் உலகில் கிடைக்கும் பலவகையான ஆண்டிசைட்டு ரயோலைட்டு பாறைகளது வேதியியல் கூட்டுச்சேர்க்கைத் தன் மையை அவ்வளைவில் பொருத்த முயற்சித்தால், அவை வேறுபட்டு காணப்படுகின்றன. தேலிட் டிக் பசால்ட்டு (theletic basalt) வேதியியல் கூட்டுச் சேர்க்கையையுடைய ஒரு அனற்குழம்பிலிருந்து இது உருவாகியிருக்கும் என்று கருதி, இதன் முக்கிய வேதி யியல் கூட்டுப்பொருள்களாகிய காரம் (alkali), இரும்பு (Fe), மகனிசியம் (Mg) என்ற மும்முனை களைக் கொண்ட முப்பெட்டக வரைவின்கீழ் அவை களின் விகிதங்களைக் கொண்ட ஒரு வளைவு வரைந் தால் அவற்றிற்கும் அதைப்போன்ற பசால்ட்டு, ஆண் டிசைட்டு, டாசைட்டு என்ற பாறைகளின் தொடரி லிருந்து வரையப்பட்ட வளைவிற்கும் தொடர்பின்றி காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் பசால்ட்டு பாறைகளும், ரயோலைட்டு பாறைகளும் தனத தனியே தொடர்பின்றி உருவாகியிருப்பதலும், ஒரே சமயத்தில் இரு வேறு இடங்க உமிழப்பட்டு உள்ளதாலும் க மாதல் முறையில் இப்பாறைகள் உருவாகியனுட ஐயப்பாட்டிற்கு உரியதாக அண்மையில் பலராலும் கருதப்பட்டு வருகிறது. எனவே ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு விதமான அனற்குழம் புகள் புவியின் அடியிலிருந்து உமிழப்படலாம் என் றும் அவை ஒளி வரும் வழிகளிலுள்ள ஏற் கனவே உருவான பல்வேறு அறைகளையும், மாற்று உருப்பாறைகளையும் வண்டல்படிப் பாறை களையும் கரைத்து உள்ளடக்குவதால், தன்னுடய வேதியியல் கூட்டுச்சேர்க்கையில் அம்மாதிரி கரைக் கப்பட்ட பாறைகளின் அளவிற்கேற்ப மாறுபட்டு புதிய வேதியியல் கூட்டுச்சேர்க்கையையுடைய பாறை உளாகத் தாய்க்குழம்பாகிய பசால்ட்டு அவ்வட்