உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்ஸ்‌ 13

ஆப்ஸ் தாவரவியலில் இது ஹுமுலஸ் லுப்புலஸ் (Humlus fuputus Linn.) என்ற பெயராலும், ஆப்ஸ் (Hops) என்ற பொதுப் பெயராலும் அழைக்கப்படும். இது ஒரு பூவிதழ்வட்டமுடைய (Monochlamydenus ) இருவிதையிலைக் குடும்பமாகிய கன்னாபினேசியைச் (Cannabinaceae) சார்ந்தது. இது வட அமெரிக் காவைத் தாயகமாகக் கொண்டது. வட ஆசியாவும் தாயகமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்த்திரேலியா ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகின்றது. இந்தியாவில் குறைந்த அளவில் பயிரிடப்படுகின்றது. சிறப்புப் பண்புகள். இது பலபருவச் (perennial), சொர சொரப்பான சுழல்கொடி (twinner); 35 முதல் 50 செ.மீ. உயரம் வரை வளரக் கூடியது; பெரும்பாலும் ஆணினப், பெண்ணினக் கொடிகள் எனத் தனித்தனியே (dioecious) உண்டு; ஆண், பெண் பூக்களை ஒரே கொடியில் பெற்றுள்ள செடி கள் (monoecious) மிகக் குறைவு. தண்டு எதிர் எதிராகக் கிளைத்தவை, கோணமான பக்கங்கள் (angular) உடையவை; வளையக் கூடியவை (flexible), இலைகள் தனித்தவை; எதிரமைவு கொண்டவை (opposite phyllotaxy); இலையடிச் சிதல்கள் (Stipules ) கொண்டவை; இலையடிச் சிதல்கள் நிலைத்தவை (persistent). கொடியின் கீழ்ப்பகுதியிலுள்ள இலை கள் 3 முதல் 5 பிளவுகளையும் (lobed), உள்ளங்கை வடிவ நரம்பு (palmately nerved) அமைப்பினையும் கொண்டிருக்கும்; மேற்பகுதியிலுள்ளவை சிறுத்து, முட்டை (ovate) அல்லது இதய வடிவத்தையும் (cordate), பல்போன்ற (serrate) விளிம்புகளையும், நீண்ட இலைக் காம்புகளையும் பெற்றிருக்கும். ஆண் மலர்கள் சிறியவை, பசுமை கலந்த மஞ்சள் நிற முடையவை; இவை கூட்டுப்பூத்திரள் (panicle) மஞ்சரி வகையில் அமைந்திருக்கும். பெண் மலர்கள் இரண்டு இரண்டாக அகலமான மலரடிச் சிதல்களின் bracts) கோணங்களில் அமைந்து, இவையெல்லாம் ஒன்று சேர்ந்து கூம்பு (cone) வடிவ ஈட்டி (spike) மஞ்சரியில் அமைந்திருக்கும். பூவிதழ்கள் 5; ஒழுங் கற்ற திருகுமுறையில் (imbricate aestivation) அமைந் தவை. மகரந்தத் தாள்கள் 5. சூற்பை தட்டையாக இருக்கும்; சூலகத்தண்டு 2; ஒவ்வொரு சூற்பையிலும் ஒரு சூல் தொங்கு முறையிலமைந்து (pendulous), வளைந்து காணப்படும். கனி அக்கீன் (Achene ) வகையைச் சார்ந்தது. பெண் மஞ்சரி ஆப்ஸ், பர்ஸ் (burrs) அல்லது கூம்பு எனக் கூறப்படுகின்றது. ஒவ் வொரு கூம்பிலும் கேசங்களினால் மூடப்பட்ட கோணல்மாணலான (zig-zag) தண்டு உண்டு. இது எதிரமைவிலும், மாற்றமைவிலும் அமைந்துள்ள பக்கக் கிளைகளைப் பெற்றிருக்கும். குட்டையான ஆப்ஸ் 13 பக்கத் தண்டில் நான்கு மலர்களைப் பெற்றுள்ள ஒரு சோடி மலரடிச் சிதல்களிருக்கும். ஒவ்வொரு மல ருக்கும் குழாய் வடிவ மலர்க்காம்புச் சிதல் (bracteole) உண்டு. மலரடிச் சிதல்களின் அடிப்பாகம் மஞ்சள் நிற மகரந்தம் போன்ற சுரக்கும் கேசங்களைப் பெற்றிருக்கும். இவை ஹாப்-மீல் (hop-meal), லூப்பு லின் சுரப்பிகள் (lupulin glands) அல்லது லின் என்றழைக்கப்படுகின்றன. லூப்பி பயிரிடும் முறை. இது பலவகையான நிலங்களில் பயிராகும். பொதுவாக நீர் தேங்காத வளமுள்ள நிலங்கள் அல்லது கற்களடங்கிய களிச் சேற்று மண் கோடைக் ணுள்ள (Loam) நிலம் சாலச் சிறந்தது காலத்தில் சராசரி 60° F வெப்பம் தேவைப்படுகின் றது. பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகளும் அதிக மழையுள்ள பகுதிகளும் தவிர்க்கப்பட வேண்டும். 2 முதல் 3 செ.மீ. நீளமுள்ள மட்ட நிலத்தண்டின் (rhizome) துண்டுகளில் குறைந்தது இருசோடி மொட்டுகளிருக்குமாறு தேர்ந்தெடுத்து அவை ஒவ் வொன்றையும் 240 செ.மீ. இடைவெளிவிட்டு நட வேண்டும். நன்கு வளர்ந்த பிறகு கொடியின் கீழ்ப் பாகத்திலுள்ள இலைகளை அடிச்சாம்பல் நோய் (downy mildew) தாக்கி, மேற்கொண்டு பரவாம லிருக்க அகற்றிவிட வேண்டும். அதிகப்படியான பக்கக் கன்றுகளை (suckers) அகற்ற வேண்டும். மஞ்சள் கலந்த பசுமையான, பிரகாசமான ஒட்டிக் கொள்ளக் கூடிய நன்கு முதிர்ச்சியடைந்த ஆப்ஸ் மட்டும் பறிக்கப்படுகின்றது. வயதான ஆப்ஸ் கொடிகளிலிருந்து உயர்ந்த வகை ஆப்ஸ் கிடைத்த போதிலும் அவற்றிலிருந்து கிடைக்கும் பலன் குறை வாக இருப்பதால் அவற்றை அழித்துவிடுவார்கள். நோயும் தடுப்புமுறையும். ஆப்சை அடிச்சாம்பல் நோய், தூள் சாம்பல் நோய் (powdery mildew), புகைநிறப் பூஞ்சை நோய்(sooth mould), வேர் அழுகல் நோய் (root rot), வைரஸ் நோய் (virus) ஆகியவை தாக்குகின்றன. இவையன்றிப் பெரும் பான்மையான பூச்சிகளும் பாதிக்கின்றன. பூஞ்சணக் கொல்லி மருந்துகளைத் தெளித்து இவற்றை நோய் களிலிருந்தும் பாதுகாக்கலாம். பொருளாதாரச் சிறப்பு. ஆப்சிற்கு நல்ல மணமும், கசப்புத் தன்மையுமுண்டு. இதற்கான தனிப்பட்ட ஒரு மணம், சுவை, நுண்ணுயிர் கொல்லுந்தன்மை ஆகியவை இருப்பதால் இது பீர் (Beer) செய்வதில் பெரிதும் பயன்படுகின்றது. இது தூக்க மருந்தாக வும் (Soporofic), ஊட்டநீர்மமாகவும் (tonic), வலி போக்கியாகவும் (anodyne), சிறுநீர்ப் போக்கியாகவும் (diuretic) பயன்படுகின்றது. வேறு சில நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளுடன் இதைக் கலந்து கொடுக்கின்றார்கள். தண்டிலிருந்து எடுக்கப்படு கின்ற நார் கயிறு திரிப்பதற்கும், துணி நெய்யும் தொழிலுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஆப்சி