உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆபத்துமிகு நோய்களும்‌ முதலுதவியும்‌ சிகிச்சைகளும்‌, கால்‌ நடை

14 ஆபத்துமிகு நோய்களும் முதலுதவியும் சிகிச்சைகளும், கால் நடை 12 10 11 5 4 9 12 7 6. ஆப்ஸ் 2. கொடியின் ஒரு பகுதி 2. பெண் மஞ்சரி 3. பெண் பெண்பூவிதழ் 7. முழுக்கனி 8.படிவுப் பொருள்கள் 9.ஆண்பூ 10.மகரந்தத்தாள் 11. ஆண் பூவிதழ் 12. கேசங்கள். மலர்களின் விரிப்புத் தோற்றம் 4. சூலகத்தண்டு 5. பூவடிச்சிதல் லிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற ஒரு வகைப் பொருளை முடியைத் தூய்மைப்படுத்துவதற்குச் சோவி யத் நாட்டில் பயன்படுத்துகின்றார்கள். பீர் தொழிற் சாலையில் கிடைக்கும் எஞ்சிய பொருள்கள் மாட்டுத் தீவனமாகவும் எருவாகவும் பயன்படுகின்றன. நூலோதி எ.கோ. 1.Hooker, J.D. in Hook F. Fl. Br. Ind. 1888. 2. The Wealth of India, CSIR, Publication, New Delhi, 1984. ஆபத்துமிகு நோய்களும் முதலுதவியும் சிகிச்சைகளும், கால்நடை மனிதர்களுக்கு ஏற்படுவதைப் போலவே கால்நடை களுக்கும் பலவகை ஆபத்துமிகு நோய்கள் ஏற்படு கின்றன. எனவே, அவற்றிற்கான முதலுதவி யளித்து உடனடிச் சிகிச்சையும் (treatment) அளித்தல் மிக முக்கியமாகும். பொதுவான சில நோய்களால் கால்நடைகள் முக்கியமாகப் பாதிக்கப் படுகின்றன அவை, தீப்புண்களும் தீக்காயங்களும், அமிலங் களினாலும் காரங்களினாலும் ஏற்படும் புண்கள், விபத்துக்களினால் ஏற்படும் இரத்தக் கசிவுகள், அதிர்ச்சி,நாய்க்கடி, பாம்புக்கடி, புண்கள், வயிற்றுவலியும் வயிறு உப்புதலும், எலும்பு முறிவு, கொம்புகளும் கால்குளம்புகளும் நழுவுதல், கண் களில் ஏற்படும் சேதம், மூட்டு நழுவுதல், தொண்டை அடைப்பு, கூர்மையான ஆயுதங்களால் ஏற்படும் புண்கள் முதலியவையாகும். தீப்புண்கள், தீக்காயங்கள். பாதிக்கப்பட்ட இடங் களில் முதலுதவியாக மெழுகு எண்ணெயை (liquid paraffin) நன்றாகப் புண்களின் மேல் தடவ வேண் டும். பெரிய கொப்புளங்களாக இருந்தால், அவற்றில் உள்ள நீரை வெளியேற்ற வேண்டும். மிகவும் பாதிக் கப்பட்ட இடங்களில் புண் வெளியே தெரியாமல் நுண்கிருமிகள் தாக்காதவாறு நுண்ணுயிர்க்கொல்லிக் களிம்பு (antibiotic ointment) அல்லது அயோடின் களிம்பு ( Iodine ointment) அல்லது நீர் உறிஞ்சி கள் (astringents) முதலியன தடவி அவற்றை மூடி