உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்பிபோல்‌ தொகுதிக்‌ கனிமங்கள்‌ 21

வரை மாறும். ஒவ்வொரு பதினொரு ஆக்சிஜன் அணுக்களுக்கும் ஒன்றுவீதம் ஹைடிராக்சில் (OH) பிரிவு இணைவது எக்ஸ்கதிர் சோதனையால் கண்டறி யப்பட்டுள்ளது. படிகங்கள் நீண்ட மெலிந்த அல்லது தட்டையான பட்டகம் போன்றவை. நார்கள், விசிறி (radiating) போன்றும் கெட்டியாகவும், மணலைப் போன்றும் காணப்படலாம். டிரமோலைட்டுப் படிகம் வெள்ளை அல்லது சாம்பல் நிறம் உடையது. ஆக்டினோலைட்டு பச்சை நிறம் கொண்டது. கண்ணாடி மிளிர்வுடை யது ; இது நல்ல ஒளிக்கடத்தி (பகுதி ஒளிக்கடத்தி களும் உண்டு). கடினத்தன்மை 5 முதல் 6 வரை யிலும் அடர்த்தி எண் 2.9 முதல் 3.2 வரையிலும் இரும்பின் அணாவைப் பொறுத்துக் கூடுகின் றன வெட் டுத் துண்டுகள் பட்டகப் பக்கங்கள் நீண்ட தட்டைச் சில்லுகளாகவும், சாய்சதுர வடிவங்களோடும் (diamond shaped) கிடைக்கின் றன. டிரமோலைட்டின் வெட்டுத்துண்டுகள் நிறமற்றவை. ஆக்டினோலைட்டு மஞ்சள் பச்சை நிறம் கொண்டிருப்பதுடன் நிறமாறி யாகவும் உள்ளது. இது மஞ்சள்-பச்சை நிறங்களை மாறிக் காட்டுகின்றது. இதன் ஒளிவிலகலெண் 1.599 முதல் 1.625 வரையிலும் (டிரமோலைட்டு) 1.628 முதல் 1.655 வரையிலும் (ஆக்டினோலைட்டு) மாறும் இது அதிக ஒளிவிலகல் எண் இடைவெளி(birefringence) கொண்டுள்ளதால் இரண்டாம் நிலை இடைவெளி ஒளிமுனைப்பு வண்ணங்களைக் (polarization colours) காட்டுகின்றது. இது ஒளி மறைகோணம் 15 முதல் 188 வரையில் மாறும் ஈரச்சுக் கனிமம். இது ஒளியியலாக எதிர்மறைக் கனிமம். கல்நார், நெஃப் ரைட்டு (nephrite), யூரலைட்டு (uralite) ஆகியன இதன் வகைகளாகும். டிரமோலைட்டு ஆக்டினோலைட்டுக் கனிமங்கள் பெரும்பாலும் உருமாறிய பாறைகளில் காணப்படு கின்றன. டிரமோவைட்டு தூய்மையற்ற சுண்ணாம் புப் பாறைகளிலும் (impure crystalline limestone) கால்க், சிலிகேட்டு, ஹார்ன்ஃபெல்சுகளிலும் (calc-sili- cate-hornfels) கிடைக்கின்றன. ஆக்டினோலைட்டு படலப்பாறை (actinolite schist), கிரீன் ஸ்டோன் (greenstone) ஆகிய பாறைகளில் ஆக்டினோலைட்டு சிடைக்கும். வணிகக் கல்நார்களாக (commercial asbestos) ஆக்டினோலைட்டு, அமோசைட்டு, குரோசிடோ லைட்டு (crocidolite) ஆகியன பயன்படுகின்றன. ஹார்ன்பிரெண்டு வரிசை, ஹார்ன்பிளெண்டு வரிசைக் கனிமங்கள் அலுமினிய, கால்சிய, மகனீசிய, அயச் சிலிகேட்டு என்ற வேதியியல் உட்கூற்றினைக் கொண்டுள்ளன. X பிரிவு தனிமங்கள் ஒவ்வொரு பதி னொரு ஆக்சிஜன்களுக்கும் நான்கு என்ற நிலைக்கு மேற்படாமல் மாற்றுகள் நிகழலாம். அலுமினியம் ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்கள் 21 சிலிக்கானை மாற்றலாம். இதில் முக்கிய கூறாகும். உடை ஹைடிராக்சில் படிகங்கள் நீண்ட பட்டகம் போன்ற, நீள் தட்டைச் சில்லு வடிவிலும், திண்மம், மணற் கட்டி போன்றும் காணப்படலாம். இரட்டுறல் காணப்படு கிறது. செம்மையான உடைதளம் உடையது. இரண்டு தளங்களின் வெட்டுக்கோணம் 120. கருப்பு. கரும்பச்சை நிறத்தது. கண்ணாடி மிளிர்வு உடையது. பகுதி ஒளிக்கடத்தியாகவும் ஒளித்தடக் கனிமங்க ளாகவும் இருக்கின்றன. சீரற்ற முறிவு கொண்டது. கடினத்தன்மை 5 முதல் 6 வரைமாறும். இதன் அடர்த்தி எண் 3 முதல் 3.47 வரை மாறும். அறுகோண வடிவக்குறுக்கு வெட்டுத்துண்டுகள் உடைதளங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. நீள் வாக்கு வெட்டுத் துண்டுகள் (longitudinal sections ) ஒற்றை உடைதளத் தொகுதியினைக் காட்டுகின்றன. மஞ்சள், பச்சை, பழுப்பு ஆகிய நிறங்களில், பல திசை அதிர்நிற மாற்றம் கொண்டு காணப்படு கின்றன.1.616 முதல் 1.653 வரை மாறுபடுவதால் இரண்டாம் நிலை வண்ணங்களைக் காட்டுகின்றன. மறைகோணம் 18° முதல் 20° வரையும் ஒளியியலாக எதிர்மறைக் கனிமம். ஊதுகுழல் (blow pipe) சோதனையில் உருகி, காந்த இயல்புடைய உருண்டைகளாகின்றன. மேலும் உள்ளமையைக் கண்டறிய இயற்பியல் பண்புகள் உதவுகின்றன. இதன் வகைகள் பிடீனைட்டு (bdenite), பர்கா சைட்டு (pargasite), பசால்ட்டுவகை ஹார்ன் பிளெண்டுகள் (basaltic hornbilende), ஆக்சிஹார்ன் பிளெண்டுகள் ஆகியன. கிரானைட்டு (granite), சயனைட்டு (syenite), டயோரைட்டு (diorite) போன்ற பாறைகளில் ஹார்ன்பிளெண்டுகள் கிடைக்கின் ன்றன. ஹார்ன் பிளெண்டு வரிப்பாறை (hornblende gneiss) ஹார்ன் பிளெண்டு படலப்பாறை (hornblende schist) ஆம்ஃபி போலைட்டுப் படலப்பாறை (amphibolite schist) ஆகிய பாறைகளிலும் காணப்படுகின்றன. குளோக்கோஃபேன். குளோக்கோஃபேன் சோடிய மக்னீசிய, இரும்பு, அலுமினியச் சிலிகேட்டு. இது ஒற் றைச் சரிவுப்படிகத் தொகுதியைச் சேர்ந்தது. பட் டகப் படிகங்களாகவும், நார்களாகவும், திண்ம மாகவும், மணற்கட்டிகளைப் போன்றும் காணப் படுகின்றன. உடைதளம், செம்மை, நீலம், கருநீலம், நீலச்சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன. ணாடி மிளிர்வு கொண்டது. ஒளிக் கசிவு உடையது. (translucent). கடினத் தன்மை 6 முதல் 6.5 வரை யிலும், முதல் அடர்த்தி 3 வரையிலும் மாறுபடும். 3.1 கண்