உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயமுறைகள்‌, படிகவிளக்க 57

BXE மூன்று தளங்கள் இரண்டு தளங்கள் படம் 2. ஒரு பருசதுரத்தின் சமச்சீர்மைத் தளங்கள். முறை ஒத்த வடிவம் திரும்பத் திரும்ப அந்த இடத் தில் வருமேயானால் அதை அறுகோணச் சீர்மை அச்சு (hexagonal symmetric axis) என்றும் வரை யறுக்கப்படும். இவை இருமடி அச்சு, மும்மடி அச்சு, நான்மடி அச்சு, அறுமடி அச்க என்றும் கூறப்படு வதுண்டு. X ஆயமுறைகள், படிகவிளக்க 5 படம் 3. ஒரு பருசதுரத்தின் சமச்சீர்மை அச்சுக்கள் சமச்சீர்மை மையம். பெரும்பாலான படிகங்களில் சமச்சீர்மை அச்சும் சமச்சீர்மைத் தளமும் அமை வதோடு சமச்சீர்மை மையமும் அமைவதுண்டு. அல்லது சில வகைகளில் சமச்சீர்மைத் தளமோ சமச்சீர்மை அச்சோ அமையாமல் சமச் சீர்மையம் மட்டும் அமையலாம். எடுத்துக்காட்டாக முச்சரிவுத் தொகுதியில் படிகமாகும் படிகங்கள் இப்பண்பைப் பெற்றுள்ளன (படம் 4). ஒரு படிகத்தின் ஒரு முகப் பரப்பின் ஒரு புள்ளி யிலிருந்து வரையப்பட்ட கற்பனைக்கோடு அதன் மையத்தின் வழியே சென்று எதிர்முகப் பரப்பில் சம தொலைவில், அதேபோன்ற புள்ளியைச் சந்திக் கும் பொழுது அங்கு சமச்சீர்மையம் உள்ளது என்று கருதப்படுகிறது. அல்லது ஒரு படிகத்தின் ஒவ் வொரு முகமும் விளிம்பும் திண்மக் கோணமும் தனது எதிர் அரைப் படிகத்தில் அவற்றை ஒத்த (அ) (ஆ) படம் 4. சமச்சீர்மைத்தளமோ அச்சோ அமையாமல் சமச்சீர்மை மையம் மட்டும் உள்ள படிக அமைப்புகள். ரோடோனைட்டு, ஆ. ஒலாந்தைட்டு முகமும் விளிம்பும் திண்மக் கோணமும் பெற்றிருந் தால் சமச் சீர்மை மையம் ஒன்று படிகத்தில் அமைந் துள்ளது எனலாம். அல்லது படிகத்தை ஒரு அச்சில் 60° அல்லது 180° சுற்றும்போது சுழலச்சுக்குச் செங் குத்துத் தளத்தில் முகங்களின் ஒத்த எதிர்பலிப்புக் கிடைத்தால் அப்படிகத்தில் சமச் சீர்மையம் அமைந் துள்ளது எனப் பொருள். வடிவ இயல் சமச்சீர் மைக்கும் (geometrical symmetry) படிகவியல் சமச் சீர்மைக்கும் (crystallographical symmetry) இடையே வேறுபாடு உள்ளது. படிகவியலில் சமச்சீர்மை என் பது அப்படிகத்தினுடைய அணுக்களின் உள் அமைப் பைப் பொறுத்தது. அவ்வணுக்கள் ஒவ்வொரு இணைத்தளத்திலும் ஒரே மாதிரியாக அமைந்து காணப்படும். அவை அமைந்த தளங்களுக்கு இடை யேயுள்ள கோண அளவையே முக்கியமாகக் கொண்ட னவாகும். ஒரேமாதிரியான பக்க அமைப்பையோ அப்பக்கங்கள் ஒரு சமச்சீர்மைத் தளத்தினின்று அல்லது ஒரு சமச்சீர்மை மையத்தினின்று அமைந் துள்ள தொலைவுகளைப் பொறுத்தோ இப்படிகச் சமச்சீர்மை அமைவது இல்லை. படத்தில் (படம் 5) காட்டியுள்ள ஒரு ஒழுங் கான எண் பட்டக வடிவமும் (regular octahedron) ஒரு உருத்திரிபுற்ற எண்பட்டக வடிவமும் (distorted