உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆர்க்கிடேசி

78 ஆர்க்கிடேசி மிதவெப்ப மண்டலப்பகுதிகளிலுள்ள பெரும்பா லானவை நிலத்தாவரங்களாக இருக்கின்றன. பொதுப்பண்புகள். இக்குடும்பத்தில் பல பருவக் (perennial herbs) நிலவாழ் குறுஞ்செடிகளும் தாவரங்களும் தொற்று அல்லது ஒட்டு வாழ் தாவரங் களும் மட்குண்ணிகளும் (saprophytes: Corollorrhiza; Neottia; Didynoplexis; Epipogun) சில ஏறுகொடி களும் (climbers இருக்கின்றன. நிலவாழ்தாவரங் களின் வேர்கள் சல்லி வேர்களாகவோ(fibrous roots), கிழங்குபோன்ற தடிப்புற்றவேர்களாகவோ(tuberous roots), கயிறு போன்ற (cordlike) வேர்களாகவோ இருக்கும். ஆனால் தொற்று அல்லது ஓட்டுவாழ் தாவரங்கள் சில நிலத்தாவரங்கள் ஆகியவற்றின் கீழ்ப்பகுதியிலுள்ள இடைக்கணுக்கள் க்கணுக்கள் (internodes) பருத்துப்பொய்க் குமிழ்த்தண்டுகளாக (pseudobulbs) மாறிக் காணப்படுவதுடன் நீரையும், சேமிப்புப் பொருள்களையும் பெற்றிருக்கின்றன. தொற்று அல்லது ஒட்டுவாழ் தாவரங்கள் மூன்று வகையான வேர்களைப் பெற்றிருக்கும். ஒருவகை வேர், செடி களை மரக்கிளைகளுடன் பிணைப்பதற்கு (clasping, climbingor anchoring roots) உதவும். புவிஈர்ப்பினால் (gravity) பாதிக்கப் படாமலும், ஒளிநாட்டம் அற்ற வையாகவும் இருக்கும். இவை ஒன்றோடொன்று வலைபோன்று பின்னிக்கொண்டு காணப்படும். இவை மக்குகளும், நீருமுள்ள தேக்கமாகச்{reservior) செயல்படுகின்றன. இவற்றுள் உறிஞ்சும் வேர்கள் (absorbing root) உட்புகுந்து இவற்றைப் பயன்படுத் திக்கொள்கின்றன. இரண்டாம் வகையான வேர்கள் தோரணங்கள் போன்று நிலம் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். மூன்றாம் வகை வேர்கள் காற்றி லுள்ள நீரை உறிஞ்சுவதற்குப் பயன்படுகின்ற முனை சூழ்தாள்சவ்வு (velamen) என்ற திசுவினால் மூடப் பட்டிருக்கும். இவை உலர்ந்த நிலையில் வெண்மை யாகவும், நீரை உறிஞ்சிய பிறகு பசுமையாகவும் காணப்படும். மட்குண்ணிகளில் பச்சையம் (chloro- phyll) சிடையாது. இலைகள் சாதாரணமாக மாற்றிலையடுக்கமைவிலும் (alternate phyllotaxy}, இருபக்க அடுக்கமைவிலும் (bifarious or distichous phyllotaxy) காணப்படும்; வட்ட அடுக்கமைவும் (whorled phyllotaxy), எதிர்ப்பக்க அடுக்கமைவும் (opposite phyllotaxy) மிக அரிது; இலைகள் சில சிற்றினங்களில் செதில்களாகக் (scales) குறைவுற்றும், சவ்வு போன்றும் (membranous) காணப்படுவதுண்டு. இலைகள் நீண்டு (linear), பட்டையாக (lorate), முட்டை (ovate)அல்லது வட்டவடிவத்தில் (orbicular) இருக்கும்; சிலசமயங்களில் சதைப்பற்றுடன் (succu- dent) இருக்கக்கூடும். பூக்கள் பெரும்பாலும், பெரிய கண்கவரும் வண்ணங்களுடையலை, அழகுள்ளவை. இவை ஸ்பைக் (spike), ரெசிம் (raceme) அல்லது பேனிக்கிள் (panicle) மஞ்சரியில் வை, பல அமைந்திருக்கும்; சிலவற்றில் இவை தனித்திருப்ப துண்டு. பூக்கள் இருபாலானவை (bisexual), இருபக்கச் சீரானவை (zygomorphic) பூவடிச்சிதல்களுடையவை (brateate), காம்புடனோ காம்பின்றியோ இருப் பவை. மொட்டுகள் மேன்மேலும் வளர்ச்சியடை யும்பொழுது பூக்காம்பு போன்று காணப்படுகின்ற சூற்பை 180° வரை சுழல்வதால் பூக்களின் கீழ்ப்பகுதியி லுள்ள பாகங்கள் மேல்பக்கத்திற்கும், அவற்றின்மேற் பகுதியிலுள்ள பாகங்கள் கீழ்ப்பக்கத்திற்கும் இடம் மாறி இறுதியில் அமைகின்றன. இவ்வகைச்சுழற்சியில் பூவின் மேற்பகுதியிலுள்ள உதடு (labellum or lip என்று கூறப்படுகின்ற ஒரு வகை அல்லி இதழ் கீழ்ப் பக்கத்திற்கு வந்தடைந்து அயல் மகரந்தச்சேர்க்கை ஏற்படுத்தும் பூச்சிகள் உட்காருமிடமாக அமை கின்றது. இந்த வகைச் சுழற்சிக்கு தலைகீழான சுழற்சி (resupination) என்று பெயர். இது பெரும் பாலான சிற்றினங்களில் ஏற்படுகின்றது. புல்லி வட்டம் மூன்று இதழ்களைக் கொண்டது. இவை பசுமையாகவோ, அல்லி இதழ்களின் நிறத்தையோ பெற்றிருக்கும்; ஒழுங்கற்ற திருகுமுறையிலமைந்தி ருக்கும் (imbricate); புல்லி இதழ்கள் எல்லாம் ஒரே விதமாக இருக்கும் அல்லது மையத்திலுள்ள புல்லி இதழ் மட்டும் மற்றவைகளைவிடப் பெரியதாகவோ வேறுபட்ட நிறத்துடனோ இருக்கக்கூடும். அல்லி இதழ்கள் 3; மைய அல்லி இதழ் மட்டும் அமைப்பு, அளவு, நிறம் பொறுத்து மற்ற இதழ்களிலிருந்து வேறுபட்டு, எடுப்பாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கும்; இதற்கு உதடு என்று பெயர்; இதன் அடிப் பாகம் நீண்டகுழல் (spur) போன்றோ, பை (sac) போன்றோ இருக்கும் இவற்றில் சாதாரணமாகத் தேன் சுரக்கப்பட்டிருக்கும். சூற்பை (ovary) கீழ் மட்டத்தில் அமைந்து மூன்று சூலக இலைகளினா லானது (carpels), ஒரே ஒரு அறை கொண்டது, இரு சீர் வரிசைகளிலமைந்த (biseriate) மூன்று சுவீ ரொட்டிய (parietal) சூலொட்டுத்திசுவைக் (placenta) கொண்டது; சில பேரினங்களில் மட்டும் சூற்பை மூன்று அறைகளைக் கொண்டு,சூல்கள் அச்சுச்சூல் ஒட்டு அமைவுடன் (axile placentation) காணப் படும். சூல்கள் எண்ணற்றவை, மிகச் சிறியவை. தலைகீழானவை (anatropous). சூலகத்தண்டு (style), சூலகமுடி (stigma), மகரந்தத்தாள்கள் (stamens ) மூன்றும் வெவ்வேறு அளவில் இணைந்து சூலக் ஆணகம் அல்லது கலம் (gynandrium or column) என்ற ஒரு சிக்கலான அமைப்புடன் காணப்படுகின் றன. பெரும்பாலானவற்றில் மகரந்தத்தாள் ஒன்றாக ajib (monandreae) சிலவற்றில் இரண்டா டாகவும் (diandrae) இருக்கும். மகரந்தத்தாள் ஒன்றாக இருக்கும்பொழுது அது சூலக ஆணகத்தின் உச்சிப் பகுதியிலும், இரண்டாக இருக்கும்பொழுது அதன் பக்கவாட்டிலும் முறையே அமைந்திருக்கின்றன; மகரந்தம் பொடியாகவோ, ஒன்று சேர்ந்த