உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஆர்க்டிக்‌, துணை ஆர்க்டிக்‌ தீவுகள்‌

86 ஆர்க்டிக், துணை ஆர்க்டிக் தீவுகள் சாரீஷியா. இவை நடு டிரையாசிக் காலம் முதல் கிரெட்டேஷியஸ் காலகட்டத்தின் முற்பகுதி வரையில் காணப்பட்டன. இவற்றின் விரல்கள் சிறியவை; பின்னங்கால்களை பொதுவாக முன்னங்கால்கள் விடக் குட்டையானவை ; முதுகெலும்புத் தொடரில் 3 முதல் 7 திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) காணப்பட்டன. சில தாவரவுண்ணி சாரீஷியன் களின் உடல் 24 மீட்டருக்கும் மேல் நீளமாக இருந்தது. ஆர்னித்தீசியா. இவை பறவை போன்ற தாவர வுண்ணி டைனோசார்கள் ஆகும். இப்பிரிவைச் சேர்ந்தவை முன் டிரையாசிக் காலம் முதல் முன் கிரெட்டேஷியஸ் காலம் வரை வாழ்ந்தன. இவற்றின் வாயின் முற்பகுதியில் அலகுபோன்ற அமைப்பு இருந்தது. வாயின் பிற்பகுதியில் அரைவைப் பற்கள் (grinding teeth) காணப்பட்டன. கால்விரல்களில் குளம்புபோன்ற அமைப்புக்கள் இருந்தன. இவற்றுள் பலவற்றிற்கு உறுதியான கவசமும் கொம்புகளும் இருந்தன. பெரிய விலங்குகள் ஏறக்குறைய 9 மீ. நீளம் இருந்தன. தீவுகள் முழுவதிலும் மற்றும் துணை ஆர்க்டிக் தீவுகளின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்தத் தீவுகளில் கரடு முரடான மலைகளும் சமவெளி களும் காணப்படுகின்றன. இத்தீவுகளில் உறைந் துள்ள பனிக்கட்டிகள் நகர்ந்து கடற்கரைகளில் வெளிப்பட்டு, அவைகளால் துண்டிக்கப்பட்டுக் கடலில் மிதக்கின்றன. இவை கடல் மட்டத்தை விட 300 அடி. உயரத்தில் இருக்கின்றன. அமை தட்பவெப்ப நிலை. அலூஷியன் தீவுகள் (Aleutina islands) மற்றும் ஐஸ்லாந்து (Iceland) ஆகியவற்றில் காணப்படும் குறைந்த காற்றழுத்த மையங்களைப் பொறுத்து இங்குள்ள தட்பவெப்ப நிலை கின்றன. குளிர் காலத்தில் இந்தக் குறைந்த காற்ற ழுத்த மையங்கள் கன்சாட்கா {kanchatka) விலிருந்து தெற்கு அலாஸ்கா (Southern Alaska) வரையிலும் மற்றும் நியூபவுண்ட்லாந் (New foundland) திலிருந்து நோவாயா ஸெம்லியா (Novaya zemiya) வரையிலும் உள்ள நிலப்பகுதிகளைப்பாதிக்கின்றன. இடைப்பட்ட இடங்கள் நிலையான, உலர் காற்றுள்ள பகுதிகளைக் கொண்டுள்ளன. இந்த இடங்கள் கடும் புயற்காற்றினால் குறைந்த அளவே பாதிக்கப்படு கின்றன. இந்தத் தீவுகள் குறைந்த வெப்பமுள்ள பகுதிகளே தவிர மிகக் குறைந்த வெப்பம் கொண் டுள்ள பகுதிகள் அல்ல. பொதுவாக இத்தீவுகள் பெரியனவாகவும், எண்டத் திட்டுக்களுக்கு அருகிலும் இருந்தால் அங்கு கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாகவும் குளிர் காலங்களில் குறைவாகவும் இருக்கும். டீரோசாரியா. இவை பறக்கும் ஊர்வன (flying reptiles) என அழைக்கப்படுகின் றன. ஜுராசிக் (jurassic) காலம் முதல் கிரெட்டேஷியஸ் காலம் வரை வாழ்ந்தன. டீரோசார்களும் பறவைகளும் தீக்கோ டான்ட்டுகளிலிருந்தே படிமலர்ச்சியுற்றன. இவ்விரு பிரிவுகளுமே வானில் பறப்பதற்கு முயன்றன. ஆனால் டீரோசார்கள் இம்முயற்சியில் தோல்வியுற்றுக் கிரெட்டேஷியஸ் காலகட்டத்தின் முடிவில் அழிந்து பட்டன. இவற்றின் எலும்புகளில்காற்று இருந்ததால் அவை எடை குறைந்து இருந்தன. நீண்ட சிறகுகள் (wings) தோலால் ஆனவை. இறக்கைகள் முன்கை யுடன் வேறுபடுகின்றது. இணைக்கப்பட்டிருந்ததோடு முன்கையால் தாங்கப் பட்டும் இருந்தன. ஆனால் இவற்றின் சிறகு கள் வௌவால்கள், பறவைகளின் சிறகுகள் போன்று உறுதியானவையல்ல. காலத்தால் முற்பட்ட டீரோ சார்களில் நீண்ட வால் காணப்பட்டது.காலம் செல்லச்செல்ல வாலின் நீளம் குறைந்ததுடன் பற் களின் எண்ணிக்கையும் குறைந்தது. ஆர்க்டிக், துணை ஆர்க்டிக் தீவுகள் கௌ.ஜெ. வடகோளத்தில் காணப்படும் ஆர்க்டிக் தீவுகள் புவி நடுக்கோட்டிலிருந்து வடக்கே அதிகத் தொலை வில் இருக்கின்றன. இங்கு வெற்றிடங்கள், உறை பனியால் நகர்ந்துள்ள பாறைத் துண்டுகள், அலை யிடைச் சேற்றுப் பகுதிகள், பனித்திட்டுக்கள் மற்றும் பனிக்கட்டிகள் ஆகியவற்றைக் காணலாம். இடை யறாமல் உறைந்துள்ள தரைப்பகுதிகள் ஆர்க்டிக் மண்ணும் தாவர வகைகளும். ஆர்க்டிக் துணை ஆர்க்டிக் தீவுகளின் தட்பவெப்ப நிலை வேறுபாடுக ளுக்கு ஏற்ப இவற்றின் இயற்கைத் தாவர அமைப்பும் ஆர்க்டிக் தீவுகளில் கள், பாசி லைக்கன்கள், செட்ஜஸ் (sedges) புற்கள் மற்றும் படரும் புதர்ச்செடிகள் காணப்படுகின்றன. மரங்கள் இல்லை. இந்தத் தாவர அமைப்புக்கள் ஈரத்தன்மையையும் மண்ணின் நுண்ணணுச்சத்தின் நிலையையும் பொறுத்து வேறுபடுகின்றன. துணை ஆர்க்டிக் தீவுகளின் இயற்கைத் தாவர அமைப்பு, போரியல் (boreal) காடுகளாகவோ அன்றி டைகா taiga) காடுகளாகவோ அமைந்துள்ளன. இந்தக் காடுகள் ஊசியிலை மரங்களான ஸ்புருஸ், பிர், பைன் மற்றும் லார்ச் போன்றவற்றையும் இலை யுதிர்க்கும் மரங்களான பிர்ச், ஆஸ்பென் மற்றும் வில்லோ போன்ற மரங்களையும் கொண்டுள்ளன. சில துணை ஆர்க்டிக் தீவுகளில் மாறும் தன்மை யுள்ள தாவர அமைப்பான தூந்திரக் காடுகள் காணப்படுகின்றன. இங்குள்ள தீவுகளின் மண்வகை மேற்புறம் சாம்பல் நிறம் போன்ற வெண்மையை யும், கீழ்ப்புறம் மட்கிய அடுக்கையும் அமிலத் தன மையையும் கொண்டு காணப்படுகிறது. இவ்வகை