உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்கைல்‌ ராபர்ட்சன்‌ பாவை 97

(liquid oxygen) செனான் போன்ற வளிமங்கள் உள்ளன. பின்னக் காய்ச்சி வடித்தல் மூலம் இவற் றைப் பிரிக்கலாம். இம்முறையைச் சுருக்கமாகப் பின் வருமாறு குறிக்கலாம். தற்பொழுது தொழில் முறையில் ஆர்கான் தயாரிக்க நீர்மக் காற்றைப் பின்னக் காய்ச்சி வடிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. இம்முறை மிகவும் எளியது. ஆர்கானின் பங்கீடு. இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஆர்கான் தொழில் முறையில் மிக முக்கியமான ஒரு வளிமமாகப் பயன்படுகிறது. அம் மோனியா தயாரிக்கும் பொழுது ஆர்கானும் ஒரு துணைப் பொருளாகக் கிடைக்கிறது. ஹேபர் முறை யில் (Haber's process) அம்மோனியா தயாரிப்பிற்கு வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனைப் பயன்படுத்து கிறோம். இந்த வளிமண்டல நைட்ரஜனில் ஒரு விழுக் காட்டுக்கும் அதிகமான ஆர்கான் இருக்கிறது. ஹைட் ரஜனும், நைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாகும் பொழுது, அம்மோனியா உலையில் ஆர் கானின் செறிவு (concentration) 15 விழுக்காட்டுக்கு அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆர்கானுடன் 60 விழுக் காடு ஹைட்ரஜனும் கலந்திருப்பதால், இது நீராவி எந்திரங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படு கிறது. தற்பொழுது சில ஆயவுக்கலன்களைப் பயன் படுத்தி ஆர்கான்-ஹைட்ரஜன் கலவையிலிருந்து ஆர் கான் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு விற்பனைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன் மறுபடியும் அம்மோனியா தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இயல்புகள். இது நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வளிமம். சாதாரண வெப்பநிலையில் இது ஒரு வளிமம். ஆனாலும் இதை நீர்மமாக்கவும் திண்ம மாக்கவும் முடியும். இதன் உருகுநிலை - 189.2°C; கொதிநிலை - 185.7°C ஆர்கானுடைய உய்ய வெப்பநிலை (critical temperature) - 222,4°C.உய்ய அழுத்தம் (critical pressure) 48 வளிமண்டலம், அடர்த்தி 1.784 கி/லி (1 வளிமண்டல அழுத்தத்தில், O'Cஇல்) இதன் எலெக்ட்ரான் அமைப்பு 2,8,8 அல்லது 1s 2s' 2p 3s2 3p ஆகும். பயன்கள், சிறிதளவு ஆர்கானும், நியானும் சேர்ந்த வளிமக் கலவை பற்பல வண்ண விளம்பர ஒளி விளக்குகளில் நிரப்பப் பயன்படுகிறது. இந்த வளிமங்களின் கலவை பல்புகள் சீராக எரிவதற்கு உதவுகிறது. அயனியாதல் அறையில் (ionisation chamber) அண்டக் கதிர்களை (cosmic rays) ஆராய ஆர்கான் பயன்படுகிறது. உலோகங்களை உருக்கி இணைப்பதற்குத் தேவையான வினை நிகழாச் சூழ் நிலையை உருவாக்கப் பயன்படுகிறது. சாதாரண மாக உலோகங்ளை உருக்கி இணைக்கும் முறையில் பயன்படுத்தப்படும் உலோகமானது சூடான நிலை யில் வளிமண்டலத்திலுள்ள வளிமங்களோடு வினை அ. க. 3-7 ஆர்கைல் ராபர்ட்சன் பாவை 97 புரிவதைத் தடுக்க ஓர் இளக்கியாகப் (flux) பயன் படுத்தப்படுகிறது. மந்த வளிமங்களோடு ஒப்பிடும் பொழுது இளக்கியின் வினைத்திறன் மிகவும் குறைவு. எனவே இளக்கிக்குப் பதிலாக ஆர்கான் அல்லது ஹீலியம் அல்லது இவ்விரண்டும் சேர்ந்த வளிமக் கலவை பயன்படுத்தப்படுகிறது. இந்த வளிமங்களின் கலவை உலோகங்களை உருக்கி இணைக்கக் கூடிய பரப்பில் சென்று பரவுகிறது. அம்முறைமூலம் உலோக மானது மற்ற வளிமங்களுடன் வினை புரிவதைத் தடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. கதிரியக்க ஐசோடோப்புகள். சுழித் தொகுதியில் உள்ள தனிமங்களில் ரேடானைத் தவிர மற்ற ஐசோடோப்புகள் (isotopoes) குறைந்த கதிரியக்கம் (radioactivity) கொண்டவை. Ar, Ar7 Ar3, Art, Art2 ஆகியவை ஆர்கானின் ஐசோடோப்பு களாகும். இவை இயற்கையில் கிடைப்பதில்லை. ஆனால் அணுக்கரு உலைகளில் (nuclear reactors வளிமண்டலத்திலுள்ள நிலையான Art, ஒரு நியூட் ரானை ஏற்றுக்கொண்டு Arôl என்ற மற்றோர் ஐசோடோப்பாக மாறுகிறது. இதனுடைய அரை ஆயுள் காலம் (half life period) 110 நிமிடங்கள். பகுப்பு முறையில் ஆர்கானைக் கண்டறிதல். தற் பொழுது வளிமங்களின் கலவையில் ஆர்கானின் அளவை நிர்ணயம் செய்வதற்கு நிறைநிரல் வரைவி முறையும் (mass spectrometry), வளிம நிறச்சாரல் பிரிகை முறையும் (gas chromatography) பயன்படுத் தப்படுகின்றன. இம்முறைகள் நடைமுறைக்கு வரு வதற்குமுன், ஆர்கானின் அளவை நிர்ணயம் செய் வதற்குக் கிளர்வூட்டப்பட்ட கரி பயன்படுத்தப் பட்டது. இம்முறையில் கிளர்வூட்டப்பட்ட கரி யானது குறைவான வெப்பநிலையில் மந்த வளிமங் களின் கலவையிலிருந்து ஆர்கானை மட்டும் தன் பால் ஈர்த்துக் கொள்கிறது. இதிலிருந்து ஆர்கானின் அளவு நிர்ணயிக்கப்படுகின்றது. பழைய முறையில், ஆர்கான் வளிமத்தைக் குறைந்த அழுத்த நிலையில் ஒரு மின் குழாய் வழியாகச் செலுத்தி; கிடைக்கக் கூடிய ஒளி ஒரு நிறமாலை மானியின் (spectrometer) வழியாக மறுபடியும செலுத்தப்பட்டது. வெளிவரக் கூடிய நிறமாலையைக் (spectrum) கொண்டு ஆர் கானின் அளவு கண்ட றியப்பட்டது. நூலோதி பொ.அனந்தகிருஷ்ணநாடார் 1. Satya Prakash, Advanced Chemistry of Rare Elements, S. Chand & Company Ltd., New York, 1982. ஆர்கைல் ராபர்ட்சன் பாவை உடல் உறவின் மூலமாகப் பரவும் மேகநோய் (syphilis) மூளை மற்றும் நரம்புப் பகுதிகளையும்