உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலுமிச்சை-சி ஆரந்திஃபோலியா (C. aurantifolia- Lime). இதன தாயகம் வடகிழக்கு இந்தியாவும், மலேசியாவும் ஆகும். கனிகள் சிறியவை; புளிப்பா னவை; மெல்லிய தோலுடையவை. கனியின் சாறு பச்சை அல்லது மஞ்சள் நிறமும் 'சி' வைட்டமினும் (vitamin C) நிறைந்தது. பானங்கள், இனிப்புப் பண்டங்கள் செய்வதற்கு துபயன்படுகின்றது. இதன் எண்ணெய் இனிப்புப் பண்டங்களும் வாச னைப் பொருள்களும் செய்வதற்கும் பழக்குழைவு (jam), ஜெல்லி (jelly), மார்மலேடு (marmelade), மது பானங்கள், ஊறுகாய் ஆகியன செய்வதற்கும் பயன் படுகின்றது. கனிகள் குடற்புழுக் கொல்லியாகவும் கட்டுப்படுத்து பசி தூண்டுவதற்கும் பித்தத்தைக் வதற்கும் செரிப்புத்திறனைச் சீர்செய்வதற்கும் பயன்படுகின்றன. சி. லிமோன் (C. limon - Lemon). இதன் தாய் கம் இமாலயப் பிரதேசமாக இருக்கக்கூடும். கனிகள், சாறு நிறைந்த மஞ்சள் நிறமுடையவை. பானங் களுக்காகவும், இனிப்புப் பண்டங்களுக்காகவும் நறு மண மூட்டுவதற்காகவும் (flavouring) பயன்படு கின்றன. சித்ரிக் அமிலம் (citric acid) கனியில் அதிக அளவில் கிடைக்கின்றது. தோலிலிருந்து கிடைக்கின்ற எண்ணெய் வாசனைப் பொருள்கள் செய்வதற்கும் வாசனை தருவதற்கும் செரிப்பைத் தூண்டுவதற்கும் பயன்படுகின்றது. கடார நாரத்தை (கடாரங்காய்) சி.மெடிக்கா (C. medica-Citrons). வடகிழக்கு இந்தியா அல்லது தென் அரேபியா இதன் பிறப்பிடமாகக் கருதப்படு கின்றது. சிறிய மரம போன்ற புதர்ச்செடிகளாகிய இவற்றின் கனிகள் பெரியவையாகவும் மஞ்சள் நிற முடையவையாகவும் இருக்கும். தோல் தடிப்பாகக் குறைந்த அளவுச் சதைப்பற்றைப் பெற்றுள்ளது. இதன் தோல் பதப்படுத்தப்பட்டுப் (candied peel} பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய் போடுவதற்கும், மார்மலேடுகள் செய்வதற்கும் சீதபேதிக்கு (dysentery ) மருந்தாகவும் பயன்படுகின்றது. பம்பளிமாசு - சி. மாக்சிமா (C. maxima-shaddock, pomelo pummela). மலேசியாவிலும் பாலினேசியா விலும் (Polynesia) இந்தியாவிலும் ஓரளவிற்குப் பம் பளிமாசு பயிராக்கப்படுகின்றது. கனிகள் பெரி யவை; மஞ்சள் நிறமுடையவை. சதை மஞ்சள் அல் லது வெளிர் சிவப்பு (pink) நிறமுடையது. தோல் தடிப்பானது. இந்தியாவில் கனியாகவே உண்ணப்படு கின்றது. பழக்குழைவு, மார்மலேடுகள் ஆகியவை செய்யப் பயன்படுகின்றது. மேற்கூறப்பட்ட வகைகளின் கனிகள் அகன்ற நீள்சதுர (broadly elliptic oblong) வடிவமானது 10 செ.மீ.க்குக் குறைவான் விட்டத்தையுடையது. நாரத்தை (நாரங்கம்) - சி. ஆரந்தியம் (C. auran- ஆரஞ்சு 141 tfum; seville bitter or sour orange, bigarade). இதன் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியா. இதன் கனிகள் மார்மலேடு செய்வதற்கும் தோல் நோய், செரிப்புக் கோளாறுகள் (digestive complaints) ஆகியவற்றைப் போக்குவதற்கும் ஆரஞ்சு பானங் கள் (liquors) காய்ச்சுவதற்கும் சிலவகை வாசனைப் பொருள்களுக்கான எண்ணெயெடுப்பதற்கும் பயன் படுகின்றன. இதில் புரோவைட்டமின் ஏ யும்,பி யும் நிறைந்திருக்கின்றன. சாத்துக்குடி - சி. சினன்சிஸ் (C. sinesis -sweet orange), வடகிழக்கு இந்தியாவிற்கும் சீனாவின் அண்டைப் பகுதிகளுக்கும் சாத்துக்குடி உரியது. கனிகள் உருண்டையாகவும் ஆரஞ்சு நிறமுடையன வாகவும் இனிப்பும் நறுமணமும் கொண்ட சதை யுடையனவாகவும் இருக்கும். கனிகள் உண்ணப்படு கின்றன. சாற்றைப் பதப்படுத்தி விற்பனைக்காகப் புட்டில்களில் அடைப்பார்கள். இதுவும் சி. ஆரந்தி யும் கனிகளைப் போல் (ஆரஞ்சு பானங்கள் செய்வது தவிர) பயன்படுகின்றன. உடலுக்கு ஊட்டமளிக்கக்கூடியன. இதன் சாறு இரத்தத்தைச் தூய்மை செய்யவும் காய்ச்சலின்பொழுது ஏற்படு கின்ற தாகத்தைப் போக்கவும் பயன்படுகின்றது. பித்தபேதியைக் குணப்படுத்துகின்றது; பழத்தின் தோல் முகப்பருவை அகற்றுவதற்குப் பயன்படு கின்றது. இவற்றின் இருமுனைகளின் விட்டம் மையத் தின் விட்டத்தைவிடச் சற்றுப் பெரிதாகவும் இருக்கும். தோல் எளிதில் உரிக்க முடியாதது. அம்லா ஆரஞ்சு-சி. ரெட்டிக்குலாத்தா (C. reticul- ata; mandarin orange; loose skinned orange). சீனா, கொச்சின் சீனா (தெ.வியட்நாம்) ஆகியவை இதன் தாயகம். தனைக் கமலா ஆரஞ்சு என்றும் கூறுவர். கனிகளின் தோல் தனித்திருக்கும் (loose skinned); கனிகள் ஆரஞ்சு நிறமுடையவை; இனிப்பானவை. இவற்றின் இரு நுனிகள் சிறுதட்டையாகக் குவிந் திருக்கும்; முனைகளின் விட்டம் மையத்தின் விட்டத் தைவிடக் குறைந்திருக்கும். தோல் எளிதில் பிரியக் கூடியது. பயிரிடும் முறை. உற்பத்தி அளவில் ஆரஞ்சு ஆறாவது இடத்தைப் பெறுகின்றது. இந்தியாவில் தமிழகம், மத்திய மாநிலங்கள் (Central Provinces), பம்பாய், அசாம், குடகு ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு பயிராக்கப்படுகின்றது. சாதாரணமாக இது பல தரப்பட்ட வெப்பநிலைகளிலும், நிலங்களிலும் பயி ராகக்கூடியது. வெப்பமான தென்னிந்தியப் பகுதி களிலும் பொதுவாக நன்கு வளர்கின்றது. மணற் பாங்கான களிச்சேற்று நிலமும் (loam) வளமுடைய நிலமும் ஆரஞ்சு பயிரிடுவதற்கு மிகவும் உகந்தவை. நிலத்தில் நீர்தேங்கி இருத்தல் கூடாது. இது விதைகள், தண்டின் துண்டுகள் (cuttings),