உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஆரைத்துடுப்பு மீன்கள்‌

160 ஆரைத்துடுப்பு மீன்கள் படம் 3. சேல் கெண்டை பெற்று நீலகிரியில் வளர்க்கப்படுகிறது. எல்லாக் குளங்களிலும் நன்றாக வாழ்கிறது. நீலகிரியில் கண்ணாடிக் கெண்டை (Cyprinus carpio specularis), தோல் கெண்டை (Leather carp), செதில் கெண்டை (Cyprinus carpio communis) ஆகிய மூன்று வகைகள் காணப்படுகின்றன. ஆச்சிஜன் அளவு குறையும் போதும், கார்பன்- -60- -ஆக்சைடு அளவு அதிக மாகும் போதும் கூடஇம்மீன்களால் குளங்களில் வாழ முடிகிறது. 76 செ. மீ. வரை இம்மீன் வளர்ச்சி அடைகிறது. கட்லா கட்லா (Catla catla), தமிழில் இம்மீனை தெப்புமீன், தோப்பா மீன், ஜப்பான் கெண்டை, கூராக்கெண்டை என அழைக்கின்றனர். இந்தியா முழுதும் இம்மீன் காணப்படுகிறது. வேகமாக வளர்ச்சி அடையக்கூடியது; 6 மாதத்தில் 31 செ.மீ. வளர்ச்சியடைகிறது. மதுரையிலும், தென் ஆற்காடு மாவட்டத்திலும் மூன்று வருடத்தில் 91 முதல் 107 செ. மீ. வரை வளர்ச்சியடைகிறது. இது நல்ல உண வாகப் பயன்படுகிறது. பூனை மீன்கள் (cat fishes), பூனை மீன் விலாங்கு (cat fish eel), லோச் மீன்கள் (loaches), கெளுத்தி (arius) மீன்கள் ஆகியனவும் இவ்வரிசையில் அடங்கும். வரிசை IV - அங்குலிபார்மிஸ் (Anguliformes}. இம் மீன்கள் பாம்பு போன்று நீளமாக இருக்கும். பெரும் பாலும் உடம்பில் செதில்கள் காணப்படுவதில்லை. செதில்கள் இருந்தாலும் அவை மிகச் சிறியனவாக இருக்கும். இடுப்புத் துடுப்பு இல்லை; முதுகுத் துடுப் பும் மலப்புழைத் துடுப்பும் முறையே நீளமாக வும், குட்டையாகவும் இருக்கின்றன. துடுப்புகளில் துடுப்பாரைகள் இல்லை. கடலில் வாழும் இம் மீன்கள், வாழும் இடத்தை அதிகதொலைவிற்கு மாற்றி வேறு இடம் செல்கின்றன. அங்குல்லா பெங்காலென்சிஸ் (Anguilla bengal- ன் {ensis), இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் இம்மீன பரவலாகக் காணப்படுகிறது. கிழக்கிந்தியக் கடற் கரையில் பொதுவாக இம்மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மலத்துடுப்பின் ஓரத்தில் ஒரு கரிய பட்டை உள்ளது. முழு வளர்ச்சியடைந்த மீனின் வால், உடம்பை விட நீளமாக இருக்கும். முரேனா பங்டேட்டா (Muraena punctate). சோழ மண்டலக் கடற்கரையில் காணப்படுகிறது. இம் மீனின்வால் உடல் நீளத்திற்குச் சமமாக இருக் கும்; உடலில் வெள்ளைப் புள்ளிகளும், ஓரத்தில் கறுப்புக் கோடும் உள்ளன. இம்மீன் விரைவில் அழுகத்தொடங்கிக் கெட்டு விடுவதால் உணவுக் குப் பயன்படாமல் போய்விடுகிறது; ஆகையால் இது நச்சு மீனாகக் கருதப்படுகிறது. வரிசை V- பெலோனிபார்மிஸ் (Beloniformes). இவ்வகையில் அடங்கும் மீன்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் நாற்கோண வடிலமுடைய நீண்ட உடலைக் கொண்டு இருக்கும், மலப்புழைத் துடுப் புக்கு நேர்மேலே முதுகுத் துடுப்பு அமைந்துள்ளது. இம்மீன்கள் கடலிலும், உப்பங்கழிகளிலும் காணப் படுகின்றன. புலாலுண்ணும் இயல்புடைய இவை, நல்ல உணவு மீன்களாகவும் பயன்படுகின்றன. எக்சோசீட்டஸ் பேஹியென்சிஸில் (Exocoetus baht- ensis), தோள் துடுப்பும், வயிற்றுத்துடுப்பும் நீண்டு, பறப்பதற்கேற்ற சிறகுபோல் பயன்படுவதால் இம் மீனுக்குப் பறக்கும் மீன் என்று பெயர். இம்மீன் கள் கூட்டமாக வாழ்வன. 35 செ. மீ. வரை வளரும். கோடிக்கரையிலிருந்து சென்னை வரை இம்மீன்கள் கிடைக்கின்றன. தனைப் பறவைக் கோலா எனக் குறிப்பிடுவர். எக்சோசீட்டஸ் வோலிட்டன்ஸ் (Exocoetus voli- tans). இந்தியக் கிழக்குக் கடற்கரையில் குறைந்த அள வில் கிடைக்கிறது. தோள்துடுப்பு கறுப்பாகவும், படம் 4. கோலா மீன்