உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரைத்துடுப்பு மீன்கள்‌ 161

வயிற்றுத் துடுப்பு வெள்ளையாகவும் இருக்கும். இதனைத் தமிழில் கோலா மீன் என்பர். வரிசை VI - சிங்நேதிபார்மிஸ் (Syngnathiformes) குழல் மீன்களும் (pipe fishes) கடற்குதிரைகளும் (sea horses) இந்த வரிசையில் அடங்கும். இவற்றிற்கு வாயும், குழாய் போன்ற மூக்கும இருக்கும். ஹிப்போ கேம்பஸ் (Hippocampus) அல்லது கடற்குதிரை இந்தி யாவின் கடற்கரையில் அதிக இடங்களில் காணப் படுகிறது; உணவாகப் பயன்படுவதில்லை. வரிசை VII - முகிலிபார்மிஸ் (Mugiliformes). இடுப் புத் துடுப்பு வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. இரண்டு சிறிய முதுகுத்துடுப்புகள் தனித்தனியாக இருக்கின்றன். முகில் செபாலஸ் (Mugll cephalus), தமிழில் மடவை மீன் என்று அழைக்கப்படுகிறது. 91 செ.மீ. வரை வளர்ச்சியடைகிறது. சில்கா ஏரி இவற்றிற் குச் சிறந்த மீன் பண்ணையாக விளங்குகிறது. நன்னீரிலும் இவை வளர்க்கப்படுகின்றன. முகில் பார்சியா (Mugil parsia), உப்பங்கழியில் வாழ்கிறது. இந்தியாவின் கடற்கரை முழுவதும் காணப்படுகிறது. குளிர்காலங்களில் கடலுக்கு நீந்திச் செல்கிறது. 10 செ. மீ. வளரும்போது முழு வளர்ச் சியை அடைகிறது. ஆரைத்துடுப்பு மீன்கள் 161 படம் 6. பூ வரால் வரிசை X1 - பெர்சிபார்மிஸ் (Perciformes). இவை மூடப்பட்ட காற்றுப்பையுள்ள எலும்பு மீன் களாகும். செதில்கள் சற்று நீண்டவை. முதுகுத் துடுப்பு எலும்புக் கதிர்களையுடையது. இதனுடன் தொடர்ந்து அல்லது தனியாக ஓர் எலும்பற்ற மிருதுவான முதுகுப்புறத் துடுப்பும் உள்ளது. இடுப் புத் துடுப்பு, தோள் துடுப்பிற்கு அருகில் உள்ளது வால் துடுப்பிற்கு 14 கதிர்கள் உள்ளன. ரது. தெரப்பான் ஜார்புவா (Terapon jarbua), இந்தியா விலுள்ள எல்லாக் கடற்கரைகளிலும் கிடைக்கிறது. இந்த மீனின் முதுகுப்புறத்தில் வளைந்த கருப்புக் கோடுகள் உள்ளன. இது கடல் கொடிகளையும் நண்டுகளையும் பாலிகீட்டுப் பல்சுனைப் புழுக் களையும் (polychaetes) பூச்சிகளையும் உணவாகக் கொள்கிறது. இது ஒரு லார்வாவுண்ணி மீன். அதனால் இது தொற்று நோயான மலேரியாவைத் தடுக்கப் பயன்படுகிறது. தமிழில் கீச்சான் என்று அழைக்கப்படுகிறது. சில்லாகோ சிஹாமா (Sillago sthama), இந்தியா படம் 5. மடவை மீன் வரிசை VIII - ஓபியோசெபாலிபார்மிஸ் (Ophtoce- phaliformes). பாம்புத் தலைமீன் என்றும, பூ வரால் என்றும் இம்மீனகள் அழைக்கப்படுகின்றன. முக்கியமாக இவை சேறுள்ள அல்லது ஈர மண் உள்ள நன்னீரில் வாழ்கின்றன. புலாலுண்ணியாகை யால் மீன் வளர்ப்பு செய்யும்போது மற்ற மீன் களுக்கு இவை மிகவும் இடையூறாக இருக்கின்றன. சன்னா மாருலியஸ் (Channa marulius), பவானி ஆற்றில் காணப்படுகிறது; தென்னிந்தியக் கிணறு று களில் வளர்க்கப்படுகிறது; உணவு மீனாகப் பயன் படுகிறது. அ.க. 3-11 படம் 7. பளிங்குக் கீச்சான்