உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலவெப்ப 491

ஆற்றல், நிலவெப்ப 491 தைக் (dry steam reservoir) கொண்ட கிணற்றி லிருந்து நேரடியாகக் குழாய் வழியாக 6 kscm அழுத்தத்திலும், 170° செ. வெப்பநிலையிலும் பெறப் பட்ட நீராவியை 10 அணிகள் பயன்படுத்தி 3,96,000 சிலோ வாட் அளவுக்கு மின்ஆக்கம் செய்கின்றன. கி.பி. 2000 ஆண்டிற்குள், அமெரிக்க ஒன்றிய நாடுகளில், 6,000 மெகா வாட் அளவில் நிலவெப் பத் திறனைப் பெறஇயலுமெனக்கலிபோர்னியாவில் பாலோ ஆல்ட்டோவிலுள்ள மின் திறன் ஆராய்ச்சிக் 1983 ஆம் ஆண்டில், கழகம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் குறிப்பாக கலிபோர்னி யாவிலும் நெவாடாவிலும், நில வெப்பத் திறனால் மின் ஆக்கம் செய்யும் அளவு 7,000 மெகா வாட் முதல் 19,000 மெகா வாட்டிற்குள் அமையும். ஓர் இடைப்பட்ட அளவுவரை இதை உயர்த்த இயலு மென 1972 ஆம் ஆண்டு வாஷிங்டனிலுள்ள தேசியப் பெட்ரோலியக் குழு மதிப்பீடு செய்தது. நில வெப்ப மூல ஆராய்ச்சிக்கான கூட்டத்தில், ஆர்வமிக்க மதிப் பீடு வழங்கப்பட்டது. இக் கூட்டத்திலிருந்து அறியப் பட்டது யாதெனில், பரந்த அளவிலான ஆராய்ச்சி யாலும் உருவாக்கத் திட்டத்தின் வழியாகவும் 1985 ஆம் ஆண்டிற்குள் 1,32, 000 மெகாவாட் மின் ஆக்கம் செய்யக் கூடிய நில் வெப்பத் திறனையும் கி.பி.2,000 ஆண்டிற்குள் 3,95,000 மெகா வாட் மின் ஆக்கம் செய்யக் கூடிய நில வெப்பத் திறனையும் பெறலாம் என்பதாகும். நில வெப்பத்திறனைப் வெப்பத்திறனைப் பெறுவதற் காக அதன் இருப்பிடத்தைக் கண்டறியும் அடிப் படை அறிவும், அத்திறனைப் பயனுடையதாக் கிக் கொண்டு திறம்படப் பயன்படுத்துவதற்கான தொழில் நுட்பமும் மிகுந்த அளவில் இன்னும் தேவைப்படுகின்றன என்பதையே இப்பரந்த எல்லை யைக் கொண்ட மதிப்பீடுகள் காட்டுகின்றன. நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் நிரூற்றுக்கள் வழி யாக மின்திறனைப் பெறும் முறை, அமெரிக்க ஒன்றிய நாடுகளில், நல்லதொரு தொடக்கத்தினைக் காட்டுகின்றது. நீராவி, வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந் நீரூற்றுக்களின் நிலஇயல் கட்டமைப்பு படம் 6 இல் காட்டப்பட்டுள்ளது. நிலப் புறப்பகுதிக்கு 32கி. மீட் டருக்குக் கீழே, உருக்கி வார்க்கப்பட்ட பொருள் அல்லது பாறைக்குழம்பு இன்னும் குளிர்ந்து கொண்டே உள்ளது. சில இடங்களில், புத்துயிரூழிக் காலக்கட்டப் பெரும் பிரிவின் தொடக்கத்தில் நில அதிர்வின் காரணமாக, நிலத்தில் பிளவுகள் தோன்றி அப்பிளவின் வழியாக, நிலப் புறப் பரப்பிற்கு மிக அண்மையில் இப்பாறைக் குழம்பு வெளிவந்தது. இந் நிகழ்ச்சியினால் செயல்படும் எரிமலைகளும் புறப்பரப்பில் எங்கெங்கு நீரமைந்ததோ அங்கங்கு வெப்ப ஊற்றுக்களும், நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீரூற்றுக்களும் தோன்றின. ஆ உள் படம் 6. நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந் நீருற்றுகள் இருக்கும் இடத்தில் காணும் நிலவெப்ப வயலின் குறுக்கு வெட்டுத் தோற்றம். (அ) பாறைக்குழம்பு (ஆ) திண்மப்பாறை (வெப்பத்தை மேலே கடத்துகிறது) (இ) நுண்துளைகனைக் கொண்டபாறை (அடியிலிருந்து பெறப்பட்ட வெப்பத்தினால் கொதிப்படைந்த நீரினைக் கொண்டுள்ளது) (ஈ)திண்மப்பாறை (நீராவியினை வெளியே செல்லாதவாறு தடுக் கின்றது) (உ) பெயர்ச்சிப்பிளவு, (நீராவியைத் தப்பிச் செல்ல அனுமதிக்கிறது) (ஊ) நீராவி, வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீரூற்று (உயர் வெப்ப நிலையில் வளிமங்களையும், ஆவி களையும் வெளிவிடும். எரிமலைப் பகுதியிலுள் துளையும் அல்லது வெப்ப நீரூற்றும் (எ) கிணறு (பிளவுண்ட பகுதியின் வழியாக நீராவியைப் பெறுகின்றது).