உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலவெப்ப 493

படம் 8. கலிபோர்னியாவில் சொனாமா மாவட்டத்தில், பசிபிக் வளிம மின்சார நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட நில வெப்பத்திறன் நிலையத்தின் அணிகள் 10,20. நிழற்படத்தின் மத்தியில், மின் ஆக்கம் செய்யும் நிலைய அமைவிடம் காட்டப் பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளும் முறையே 1960, 1983 ஆம் ஆண்டுகளில் வணிக முறையில் இயக்கப்பட்டன். இவ்விரு தொகுதிகளின் இணைந்த வெளியீட்டளவு 24,000 கிலோ வாட் ஆகும். ஆய்வாளர் உருவாகின்றது என்பதை அறிவியல் களால் இன்று வரை உறுதியாகக் கூற இயலவில்லை. நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந் நீரூற்றுக்களின் பகுதியின் ஒட்டுமொத்தமான வரை படம், படம் 7 இல் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதிக்காகப் பயன் படுத்தப்பட்ட சுழலி மின் 1924 ஆம் ஆண்டில் கலிபோர்னியா ஆக்கி வில் சேக்ரமென்ட்டே (Sacremento, California) என்ற இடத்தில் மரபுவழி நீராவி நிலையத்தில் தொடக்கத்தில் நிறுவப்பட்டதாகும். நில வெப்ப ஆற்றலின் வழியாக ஆக்கம் செய்யும் அணி 1960 ஆம் ஆண்டில் 11000 கிலோ வாட் வெளி மின் ஆற்றல், நிலவெப்ப 493 யீட்டளவில் இயங்கத் தொடங்கியது. அதே கட்டிடத் தில் 1963 ஆம் ஆண்டில் இரண்டாம் அணி 13000 கிலோ வாட் வெளியீட்டு அளவில் தொடங்கப்பட் டது.இவ்விரு அணிகளும் படம் 8இல் காட்டப்பட்டுள் ளன. 1967 ஆம் ஆண்டு 27,000 கிலோ வாட்வெளி யீட்டளவில் மூன்றாம் அணி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 4ஆம் அணியும் 27,000 கிலோ வாட் வெளியீட்டளவில் 1068 ஆம் ஆண்டு தொடங்க பட்டது. முதல் இரு அணிகளுக்கும் வடமேற்கில் 1.8.கி.மீ இடைவெளியில் 3 ஆம் அணியும், 4 ஆம் அணியும் ஒன்றின் அருகில் மற்றொன்றாக அமைக் கப்பட்டுள்ளன. நீராவிக் கிணறுகளின் இ அமைப்பைச்சார்ந்தே அணிகளின் அமைவிடம் தீர் மானிக்கப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டு ஒவ் வொன்றும் 53,000 கிலோ வாட் வெளியீட்ட அள வினைக் கொண்ட 5 ஆவது, 6 ஆவது அணிகள் இயக்கி வைக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டு ஒவ் லொன்றும் 53,000 கிலோ வாட்ட வெளியீட்டு அளவினைக் கொண்ட 7ஆவது, 8ஆவது அணிகள் முடிக்கப்பட்டன (படம் 9). இவ்வாறே 1973ஆம் ஆண்டில் ஒவ்வொன்றும் 53,000 கிலோ வாட் திறன் கொண்ட 9ஆவது, 10ஆவது அணிகள் நிறுவப் பட்டன. 1974ஆம் ஆண்டு 1,06,000 கிலோ வாட் வெளியீட்டளவினைக் கொண்ட 11ஆவது தொகுதி நிறுவப்பட்டது. 1975ஆம் ஆண்டு 1,05,000 கிலோ வாட் வெளியீட்டளவினைக் கொண்ட 12ஆவது அணி இயக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு 1975ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தப்பரப்பளவில் மொத்த மின் வெளியீட்டளவு 6,08,000 கிலோ வாட்டாக ஆயிற்று, 1,10,000 கிலோ வாட் வெளியீட்டள வினைக்கொண்ட 14ஆம் அணியும் 55,000கிலோவாட் வெளியீட்டு அளவினைக் கொண்ட 15 ஆவது தொகு தியும் நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந் நீரூற்றுப் பகுதியின் மொத்த மின் வெளியீட்டு அள வினை 90,8,000 கிலோ வாட் அளவிற்குக் கொண்டு செல்லும். இப்பரப்பில் நில வெப்ப ஆற்றல் வழி யாக மின் ஆக்கம் செய்யும் அமைப்புக்கள் உலகி லேயே மிகப் பெரியவையாக அமைகின்றன. நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந் நீருற்றுக்கள் அமைந்த பகுதியில் தொடக்கக் காலங் களில் துளையிடும்போது இயற்கை நீராவித் துளைக ளுக்கு அருகில், ஒரு துளைக்கும் மற்றொரு துளைக் கும் சுமார் 60 இலிருந்து 150 மீட்டர் வரை டை வெளியில், 120 மீட்டர் முதல் 300 மீட்டர் ஆழம் வரையில் துளையிடப்பட்டது. இக்கிணறுகள் ஒரு மணிக்கு 20,000 முதல் 40,000 கிலோகிராம் வரையி உண்டாக்கின. மேம் லான நீராவிப் பாய்வினை படுத்தப்பட்ட துளையிடும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆழம்மிக்க கிணறுகள் துளையிடப் படுகின்றன. மேலும் இவ்வாழம் 600 முதல் 2100 மீ. வரையில் உயர் அழுத்த நீராவிப் பகுதிகளைச்