உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 ஆற்றல்‌, நிலவெப்ப

434 ஆற்றல், நிலவெப்ப படம் 9. பசுபிக் வளிம மின் நிறுவனத்தினரின் நில வெப்பமின் ஆக்கம் செய்யும் அமைப்பின் தொகுதிகள் 7,8. வ்வணிகள் 1972 ஆம் ஆண்டின் பிற்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டன. சென்றடைந்து உயர் அழுத்த நீராவியைப் பெற வகை செய்கின்றது. இந்த ஆழம் மிக்க கிணறுகள் இயற்கையான நீராவி வெளிப்படும் இடங்களிலி ருந்து பேராழத்தில் அமைந்து அதிக அளவு நீராவிப் பாய்வினை உண்டாக்குகின்றன. இக்கிணறுகளில் ஒன்றினைச் சோதித்தபோது, ஒரு மணிக்கு 7,275 கி.கி நீராவியினை அது வெளிப்படுத்துகின்றதெனக் கண்டறியப்பட்டது. 53,000 கிலோ வாட் வெளியீட்டு அளவினைக் கொண்ட ஒரு வகையான தொகுதிக்கு நீராவியினை வழங்கும் கார்பன் எஃகுக் குழாயின் வெளிவிட்ட அளவு 90 செ.மீ. ஆகவும் சுவர்த்தடிப்பு 1 செ.மீ ஆகவும். இருக்கும். இத்தகைய குழாயினை நீராவி ஆக்கம் செய்யும் 7 கிணறுகளுக்கு இணைக் கலாம். தனித்த கற்பொருளையும், ஈரத்தையும் நீக்குவதற்காக நீராவிக் குழாய் வழிகளில், மைய விலகு விசையினைக் கொண்ட நீராவியினைப் பிரிக் கும் அமைப்புக்கள் நிறுவப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட அளவுகளில் 1 விழுக்காடு நீர்மமாகாத வளிமங் களைக் கொண்டதாய் அந்நீராவி உள்ளது. கார்பன், டை ஆக்சைடு 0. 79 ., அம்மோனியா 0.07.1. மீத்தேன் 0.05], ஹைடிரஜன் சல்பைடு 0.05/ நைட்ரஜனும் ஆர்கானும் 0. 03·], ஹைடிரஜன் 0.017. இந்நீராவி மிகச் சிறிய துகள்களைக் கொண்டது. இச்சிறுத் துகள்கள் சுழலியின் (turbine) பாதுகாக்கப் பட்ட பகுதிகளில் படிகின்றன. முதல் இரு நிலைகளி லும் (first tow stages) சுழலியின் அலகு மூடிகளின் (turbine blade shrouds) உட்புறமாக, இச்சிறுதுகள்கள் மேன் மேலும் படிகின்றன. கீழ்க்கட்டங்களில் (lower sfages) இச்சிறுதுகள்களின் படிவு நீராவியிலுள்ள நீரினால் அடித்துச் செல்லப்படுகின்றது. மூடியின் மீது சிறு துகள்கள் மேன்மேலும் படிவுறுவதால் அலகு களும், மூடியும் உடைவதற்குக் காரணமாய் அமை கின்றன. இப்பிரச்சினையைக் குறைப்பதற்காக, தொடக்கக் காலத் தொகுதிகளில் மாற்றுவதற்கேற்ற அலகுகளும், மூடிகளும் நிறுவப்பட்டன. சுழலியினை நீரினால் கழுவும் திட்டத்தினாலும் இந்நிலையை மேம்படுத்தலாம். செம்பு, செம்பு உலோகக் கூட்டு, வெள்ளி ஆகிய வற்றினை ஹைடிரஜன் சல்பைடு அரிப்பதால், மின் சாதனங்களுக்குக்காற்றிலுள்ள ஹைடிரஜன் சல்பைடு பெரியதொரு பிரச்சினையை உண்டாக்குகின்றது. வெள்ளீய உலோகக் கூட்டுப் பூச்சுக்கள் (tin alloy coatings) அரிப்பினை எதிர்க்கும் தன்மையுடையவை. எனினும் மின் தொடுகைப் பரப்புகளில் (contact surfaces) இப் பூச்சின் செயல்திறம் நன்றாக அமைய வில்லை. துருப்பிடிக்காத எஃகினையும் சில மதிப்பு மிக்க உலோகங்களைப் போன்றே, அலுமினியமும் அரிப்பினை எதிர்ப்பதாகவே தோன்றுகின்றது. தொடுகைகளில் (contacts) எழும்பிரச்சினைகளுக்குப் பிளாட்டினம் செருகப்பட்ட உலோகம் அல்லது பிளாட்டின மூலாம் பூசப்பட்ட உலோகம் நல்ல