உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலவெப்ப 495

தொரு தீர்வினையளிக்கின்றது. பாதுகாப்பினை வழங்கும் உணர்த்தி (relay) அரிப்பிற்கு எளிதாக உட்படுவதால், அரித்தலுக்கு உள்ளாக்கப்படாத உலோகங்களைக் கொண்ட தனித்தன்மை வாய்ந்த உணர்த்திகள் தேவைப்படுகின்றன. மேலும் புதிய அணிகளில் உணர்த்திகள், தகவல் தொடர்பு இணைப் பமைப்புகள் மின் ஆக்கிக்கு நேர்மின் திறனை வழங்கும் தனியறைப் பகுதி ஆகியவற்றைத் தூய்மை யான சுற்றுப் புறத்தைக் கொண்ட ஓர் அறையில் வைக்க வேண்டும். கட்டிடத்தில் இரண்டு ஒரே அணிகளை அமைக்கும்போது, அதே உயர் அழுத்தச் செலுத்த மின்தொடர்களையே (high voltage transmission line) இரண்டு அணிகளும் பகிர்ந்து கொள்ளும். மின் இவை பொதுவான 480 வோல்ட் நிலைய சட்டங்களையே (bus) கொண்டிருக்கும். இரு மின் ஆக்கிகளில் ஏதேனும் பிரிகலனுக்கும் ஒன்றின் (breaker) அப்பாற்பட்டு மின் பிழைகள் (faults) தோன்றும்போது, இரண்டு அணிகளையுமே மின் இதோடு, தொடர்பிலிருந்து துண்டிக்கவேண்டும். எண்ணெயிலமைந்த மின்சுற்றுவழிப் பிரிகலனையும் oil circuit breaker) திறந்துவிடவேண்டும். நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீரூற்றுக்களின் அணிகள் (geysers units) தன்னியக்க ஒத்தியங்கும் அமைப்பைக் (automatic synchronizing equipment) கொண்டனவாக இல்லை. எனவே செலுத்த மின் தொடர்களில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, இணைந்த அணிகளையும் மூட வேண்டியுள்ளது. மின் செலுத்தத் தொடர்களிலுள்ள பிரிகலன்கள் transmission line breakers) மின்சாரத்தைத் துண் டிக்கும் போதும் அத்துடன், இணைந்த அணியினை மூடும்போதும், இரண்டு அணிகளுக்குத் துணை மின் திறன் வழங்க இயலாமற் போகும் நிலை ஏற்பட்டு இவ்வணிகளின் சுழற்சி நிற்கும் வரையில், நெருக்கடி நேர நேர்மின் திறனைப் பயன்படுத்தி, எண்ணெய் எக்கிகளை இயக்கிச் சுழலி மின் ஆக்கியின் தாங்கி களுக்கு (turbine-generator bearings) எண்ணெ யினைச் செலுத்தி உராய்வைக் குறைக்க வேண்டும். மாறுதிசை மின்திறன் (a.c. power) இழக்கப்படும் போது ஹைடிரஜனால் குளிர்விக்கப்படும் எந்திரங் கள் (hydrogen cooled machines) அவற்றின் நெருக் கடிக் கால அடைப்பு எண்ணெய் (seal oil) எக்கி களை இயக்கி எண்ணெயினைச் செலுத்தத் தொடங் கும். பணியாட்கள் சென்று, இந்த எண்ணெய்ச் செலுத்தத்தைத் துண்டிக்கும் வரை இச்செயல் தொடரும். நெருக்கடிநேர எக்கிகளை இயக்கும் போது மின்கல அடுக்கில் மின் அழுத்த அளவு மிக வும் குறையும் போது மின் ஆக்கிகள் கார்பன் ஆக்சைடினால் துப்புரவாக்கப்படுகின்றன. ஒரே ஓர் அணி மட்டும் மின் வழங்கீட்டைத் துண்டிக்கும் போதும், ஏமின் செலுத்தத் தொடர்களுக்கான, எண் டை ஆற்றல், நிலவெப்ப 495 ணெயிலமைந்த மின்சுற்றுவழிப் பிரிகலன் (0.C.B.) மூடிய நிலையில் உள்ளபோதும், இவ்விரு அணிகட் கும் துணை மாறுநிலை மின்னோட்டத் திறன் தொடர்ந்து கிடைக்கும். எந்த ஒரு தனித்த அணியிலும் மின் வழங்கீட்டுத் திறப்பு (trip) நிகழும்போது முதன் மையான நீராவி துண்டிக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தும் இதழ் (check valves) மூடப்பட்டு, மின் ஆக்கியின் பிரிகலன் (generator breaker) திறந்த நிலையை அடைந்து, மேலும் 480 வோல்ட் மின்னோடிச் சுமை கள் (motor loads) துண்டிக்கப்படுகின்றன. சுழலி யைச் சார்ந்த தொல்லைகளினால் மின் வழங்கீட்டுத் துண்டிப்பு உண்டாகும்போது, மின் ஆக்கியின் பிரி கலன் (generator breaker) திறப்பதற்கு முன்னரே முதன்மையான நீராவி துண்டிக்கப்பட்டு தடுத்து நிறுத்தும் இதழ்கள் மூடப்படுகின்றன. மின் ஆக்கி யின் மின் பிரச்சினைகள் காரணமாக மின் வழங் கீட்டுத் துண்டிப்பு நிகழும்போது, ஒரே நேரத்தில் இதழ்கள் மூடப்படுவதுடன், மின் ஆக்கியின் பிரி கலனும் மின்வழங்கீட்டைத் துண்டிக்கும். அணி 5 இல் மூடுவதற்கான முதன்மைச் சிறப்பியல்புகள் படம் 10 இல் காட்டப்பட்டுள்ளன. எல்லாத் தொகுதிகளுக்குமான திறன் சுழற்சி (power cycle) ஒன்றாகவே அமைகின்றது. கிணறு களிலிருந்து பெறப்படும் நீராவிச் சுழலிகளை இயக் கிய பின்னர் இச்சுழலிகளுக்குக் கீழேயமைந்த நேர டித்- தொடுகை செறிகலன்களுக்கு (direct contact condensers) வெளியேற்றப்படுகின்றது. செறிக்கப் பட்ட நீரினை நீரேற்றம் செய்யும் இரண்டு எக்கிகள் (two condensate pumps) ஒருங்கிணைந்த செறிந்த நீராவியையும், குளிர்விக்கும் நீரையும் நீரைக் குளிர வைக்கும் கோபுரத்திற்கு (cooling water tower) நீரேற்றம் செய்கின்றன. எல்லா அணிகளின் சுழலி களின் மின் அழுத்தம் (back pressure) 100 மில்லி மீட்டர் தனி முதல் பாதரச அளவினை உடையதாக இருக்கும்.கோபுர நீர்நிலையிலுள்ள (tower basin) குளிர்ந்த நீரானது நில ஈர்ப்பு விசையினால் செறி கலனை வந்தடைகிறது. செறிகலனில் காற்றற்ற வெற் றிட நீர்மட்ட உயரம் (vaccuum head)உருவாகின்றது. சுழலியில் நீராவிப் பாய்வின் வீத அளவைக் காட்டி லும் குளிர்விக்கும் கோபுரத்தில் நீர் ஆவியாகும் வீத அளவைக் காட்டிலும் குளிர்விக்கும் கோபுரத்தில் நீர் ஆவியாகும் வீத அளவு குறைவாய் இருப்பதால், சுழற்சியில் (cycle) மிகுதியான நீர் உருவாக்கப்படு கின்றது. இப்பாய்வு உலர் குமிழ் வெப்ப நிலையை யும் ஒப்பீட்டு ஈரப்பதத்தையும் (dry bulb temper- ature and relative humidity) சார்ந்ததாய் உள்ளது. ஆனால் எல்லா இயங்கு நிலைகளிலும் கூடுதல் பாய்வு காணப்படுகிறது. பல்லாண்டுகளாகத் தொகுதிகளி லிருந்து கிடைக்கும் இக்கூடுதல் அளவு நீர் கிணறு களிலுள்ள நீராவித் தேக்கங்களுக்கே மீண்டும் உட் செலுத்தப்பட்டது. கூடுதல் அளவு நீரினைக் கிணறு