உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பார்வைக்‌ கருவி 61

பழைய இணைப்பார்வைக் கருவிகளில் சிறிய பொருளருகு ஆடிகளும் கண்ணருகு ஆடிகளும் இருந்தன. அவை கண்ணில் 36° சாய்வு கோணத்தை ஏற்படுத்தின, தற்கால அமைப்பில் கருவியின் தோற்றத்திலும் அதனைக் கையாளுவதிலும் எந்த வித மாற்றமும் இல்லாமல் காட்சியின் பரப்பும், ஒளித் தன்மையும் ஏறத்தாழ இரு மடங்கு அதிகரித் துள்ளன. இதனைப் படம் 3 இல் காணலாம். இணைப்பார்வைக் கருவி 61 படம 3. இணைப்பார்வைக் கருவியின் தற்கால அமைப்பு உள்ளது. அமிசி (Amice) என்பவர் ஒரு புதிய முப்பட்டக இணைப்பார்வைக் கருவியைக் கண்டுபிடித்தார். இதில் ஒரு முப்பட்டகக் கூட்டமைப்பு இக்கூட்டமைப்பில் படுகதிர், வெளிவரும் கதிர் ஆகியன முறையே நுழைவாயிலையும், வெளி வாயி லையும் கடந்த பின்னர் ஒரு கூரைத் தளத்தினால் எதிர்பலிக்கப்பட்டு இரண்டு முறை முழு அக எதிர்பலிப்பு அடைகின்றன. ஆகையால் பிம்பம் வல இடப்புற மாற்றம் அடைகிறது. இதைத் தவிரப் படு கதிர் வெளி வருவதற்கு முன்னர் 90° கோணம் எதிர் பலிக்கப்படுவதினால் பிம்பத்தின் நேர்குத்துத் திசை யில் தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது. இத்தகைய முப்பட்டகங்களுக்குக் கூரை முப்பட்டகங்கள் என்று பெயர். படம் 4 இல் இரண்டு கூரை முப்பட்டக இணைப்பார்வைக் கருவியைக் காணலாம். இதில் ஆறு முறை உள் எதிரொளிப்புகள் ஏற் படுகின்றன. இதில் பொருளருகு ஆடிகளுக்கு இடை யில் உள்ள தொலைவு கண்ணருகு ஆடிகளுக்கு இடையில் உள்ள தொலைவைவிடக் குறைவு. இதில் திட்பக்காட்சி விளைவு (stereo cffect) உருப்பெருக் கத்தைவிடக்குறைவு. திட்பக்காட்சி விளைவு இவ்விளைவின் காரண மாகப் பார்க்கும் பொருளின் ஆழம் கண்களுக்குத் தெளிவாகிறது. அதனால் வெவ்வேறு தளங்களில், படம் 4. இரண்டு கூரை முப்பட்டக இணைப் பார்வைக் கருவி அதாவது வெவ்வேறு தொலைவில் உள்ள பொருள் களை வேறுபடுத்த முடிகிறது. இதனாலேயே இது தரைப்படையிலும் கடற் படையிலும் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு தொலைநோக்கி களைக் கண்ணருகு ஆடியின் மையத்தில் ஓர் அச்சில் சுழலச் செய்வதால் பொருளருகு ஆடிகளை இடை மட்டத்திலிருந்து செங்குத்து நிலைக்குக் கொண்டு வர இயலும். இந்த நிலையில் இது பெரிஸ்கோப் பாகச் (periscope) செயல்படுகிறது. இந்தத் தொலை நோக்கியைப் படம் 5 இல் காணலாம். படம் 5. திட்பக்காட்சியியல் இணைப்பார்வைத் தொலை நோக்கி (இரண்டுதொலை நோக்கிகளாலானது) ணைப்பார்வை நுண்ணோக்கி. செருபின் (Cheru- bin) என்பவர் முதல் இணைப்பார்வை நுண்ணோக் கியைக் கண்டுபிடித்தார். இதில் இரண்டு தலைகீழ் மாற்றத்தை உண்டுபண்ணும் அமைப்பு இருந்தது. இதன் காரணமாக இது பொருளின் ஆழத்தைப் பற்றித் தவறான கருத்தைத் தெரிவித்தது. அதாவது பள்ளம் மேடாகவும், மேடு பள்ளமாகவும் தெரிந்தது. எனவே இந்த நுண்ணோக்கியை அறிவியலார் அக் காலத்தில் புறக்கணித்தனர். இதன் பின்னர் இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வீட்ஸ்ட்டோன் என்ப வர் மறுபடியும் இணைப்பார்வை நுண்ணோக்கியைப்