உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இதய இரத்தக் குழாய், பிறவிக் கோளாறுகள்

110 இதய இரத்தக் குழாய் - பிறவிக் கோளாறுகள் குறைபாடாகும். இது பிறவியில் அல்லது பிற நோய் களினால் பிறந்த பின்னும் ஏற்படக்கூடும். இதயத் தமனிக்கும் சிரைக்கும் இணைப்பு இருக்கலாம். அல்லது இதயத் தமனி நேரிடையாக வலக் கீழறை யில் இணையலாம். இதய வலத் தமனிக்கும் வல மேலறைக்கும் இணைப்பு இருக்கலாம். அறிகுறிகள். சாதாரணமாக நோயாளிக்கு எந்தத் தொல்லையும் இருக்காது. சத்தமான, இதயத் தொடர் முணுமுணுப்பு மிகவும் பரவலாகக் கேட்கும். எந்திர முணுமுணுப்பு இருக்கும். அறிகுறிகள், திறந்த நாளத் தமனி (patent ductus arteriosus) நோயைப் போல் இருக்கும். முணுமுணுப்பு மார்பு மைய எலும்பின் அருகில், மிக மேற்பரப்பில் கேட்கும். இதயத் தமனி சிரை இணைப்பில், சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் இதயச் சிரையில் (coronary vein) சென்று பிறகு இதயத் தமனி முண்டில் முடிகிறது. இந்த நோயாளி களில் வல மேலறையில் உள்ள இரத்தம் பெருஞ் ஜனைக் சிரைகள் இரத்தத்தை விட அதிக அளவு ஆக்சி கொண்டிருக்கும். தமனி நேரிடையாகக் இதயத் கீழறைகளில் முடியும்போது, கீழறை மட்டத்தில் இட வல இணைப்பு ஏற்படுகிறது. விளைவுகள். இதய உட்சுவர் அழற்சி (infective endocarditis), சிறு இரத்தக்கட்டி அடைப்பு (throm- boembolism), விரிவடைந்த இணைப்புத் தமனி வெடித்தல் நுரையீரல் அதிக இரத்த அழுத்தம் போன்றவையாகும். இ வல் இணைப்பு பெரிதாக இருந்தால் இதய அயர்வு ஏற்படும். ஆய்வுகள். மார்பகப் பெருந் தமனி, பின்வழி எதிர்நிறப் பதிவு (retrograde thoracic arteriography) அல்லது இதயத் தமனி எதிர்நிறப் பதிவு (coronary arteriography) ஆகியவை மூலம் இணைப்பின் அளவையும் தன்மையையும் அறியலாம். சிகிச்சை. அறுவை மருத்துவம் தையல் மூலம் இணைப்பை மூடலாம். இதயத் தமனி மாறுபாடாக நுரையீரல் தமனியிலிருந்து தொடங்குதல். இது அரிதாக ஏற்படும் ஒரு குறை பாடு. இதய இடத் தமனி நுரையீரல் தமனியிலிருந்து தொடங்குகிறது. பிறந்த 6 மாதத்தில் இதயத் தசைச் சுவர் இரத்தமின்றி அழகி (myocardial infarction ) ஒரு வயதுக்குள் குழந்தை இறந்துவிடும். உடனடி யாக அறுவை சிகிச்சை செய்யப் படாவிடில் 10-20% நோயளிகளே குழந்தைப் பருவத்தைத் தாண்டி உயிர் வாழ்வர். அவர்களுக்கு குய ணைப்புத் தமனிகள் (collateral arteries) இருக்கும். விளைவுகள்.பிறந்தவுடன் நுரையீரல் இரத்த ஓட்டத்தடை (pulmonary resistance) குறைவதால் நுரையீரல் தமனியிலிருந்து இதய இடத் தமனிக்குச் செல்லும் இரத்த அளவு வெகுவாகக் குறைந்து இரத்த ஓட்டம் திசை மாறுகிறது. அப்போது இரத் தம் பெருந்தமனியிலிருந்து இதய வலத் தமனிக்கும், பிறகு இணைப்புத் தமனிகள் மூலம் இதய இடத் தமனிக்கும் இறுதியாக நுரையீரல் தமனிக்கும் பாய் கிறது. இதயச் சுவரின் முழு இரத்த ஓட்டமும் இதய, வலத் தமனி மூலம் செல்ல வேண்டும். இந்நிலையில் இதய இட, வலத் தமனிகளுக்கு இணைப்புத் தமனிகள் இருந்தால்மட்டுமே இதயத் தசைச்சுவர் இரத்த ஓட் டம் போதுமான தாக இருக்க முடியும். வெகு அரி தாக இதய முகிழ் தசைகள் (papillary muscles ) இரத்த ஓட்டமின்றி, அழுகி, ஈரிதழ் வால்வு இரத்தப் பின் ஓட்டம் (mitral regurgitation) ஏற்படலாம். குழந்தை பிறந்த முதல் மாதத்தில், நுரையீரல் நுண் கிருமி பாதிப்பால் இதய அயர்வு ஏற்படுகிறது. அறிகுறிகள். ப படப்பு, எரிச்சல் ஏற்படுதல், அதிக வியர்வை, தோல் வெளிறிப் போதல் அல்லது நீல நிறமாதல், மூச்சுவிட இயலாமை போன்றவை இதயத்திற்குப் பாயும் இரத்தம் குறைவதற்கான (anginapectoris) அறிகுறிகள் ஆகும். குதிரை ஓட்ட இதயத் துடிப்பு ஏற்படும். இதய வீக்கம் மிகப்பெரி தாகவும் இருக்கலாம். தனிப்பட்ட இதய முணு முணுப்பு ஈரிதழ் வால்வு பின்னோக்கி உறிஞ்சு வதால் ஏற்படும் முணுமுணுப்பு இருக்கும். வேறு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல், தீடீரென்று மார்புவலி, இதய அயர்வு அல்லது தீடீர் இறப்பு ஏற்பட்ட பிறகு இந்தக்குறைபாடு இருந்தது கண்டு பிடிக்கப்படுகிறது. ஆய்வுகள். இதய மின் பதிவில் கீழ்க்காணும் மாற் றங்கள் இருக்கும். 1, 11 லீட்களில் Q-R பகுதி, கவிழ்ந்த T அலை, V, - V, லீட்களில் ஆழமான அகன்ற Q அலை உயர்ந்த S-T யில் கவிழ்ந்த T அலை ஆகியவை இருக்கும். இவை இதயத் தசைச் சுவர் முன்புற ஓரப்பகுதித் தசை அழுகலுக்கான குறி கள் ஆகும். எக்ஸ் கதிர்ப்படத்தில் இடமேலறையும், இடக் கீழறையும் விரிவடைந்திருப்பது தெரியவரும். இதயத் தமனி எதிர்நிறப் படத்தில், இதயத் தமனி பின்னோக்சி நுரையீரல் தமனியில் பாய்வதும். பெருந் தமனியிலிருந்து ஒற்றையாக வல தயத தமனி வருவதும் தெரியும். தேர்ந்தெடுக்கப்பட்ட நுறையீரல் தமனி எதிர்நிறப்படம் (selective pulm- onary arteriography) போன்றவையும் நோயை அறிய உதவும். டவல சிகிச்சை. அறுவை சிகிச்சை மூலம், இதய இடத் தமனிக்கும் பெருந்தமனிக்கும் ஒட்டுத்தமனி (graft) மூலம் இணைப்பு ஏற்படுத்தலாம். ஆனால் இணைப்பும். குழந்தைப் பருவமும் அறுவை சிகிச் சைக்கு ஏற்றவை அல்ல. எனவே இதய இடத்தமனி யைக தையல் இழையால் கட்டி, இரத்தம் பின் நோக்கிப் பாய்வதைத் தடுத்தால், இடக் கீழறைக்கு இதய வலத் தமனியின் கிளைகள் மூலம் இரத்தம்