உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய அறிஞர்கள்‌, கடலியல்‌ 183

ஆற்றின் வடிகால் அமைப்பில் சுருளி அருவி தோன்றியுள்ளது. சுருளி அருவி மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டத்திற்கு அருகே ஹொக்கேனக்கல் என்ற இடத்தில் காணப் படும் அருவி மிகக் குறைந்த உயரமே செங்குத்து வீழ்ச்சி கொண்டு காணப்பட்டாலும் காண்பதற்கு இனிய காட்சியாக விளங்குகிறது. சு.ச. நூலோதி. Krishnan. M.S., Geology of India and Burma, Higginbothams (P) Limited, Madras, 1968. இந்திய அறிஞர்கள், கடலியல் என்பது உயிரினங் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில், புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன இன்றைய அறிவுலகக் கருத்து; காரணம், களுக்கு இன்றியமையாத் தேலையான நீர், புவியைத் தவிர வேறு எந்தக் கோளிலுமே இல்லை. ஆனால் புவியிலோ ஏறத்தாழ 70.8 விழுக்காடு அளவு கடல் நீர் பரவி உள்ளது. இதுவே சிறப்பான உயிரின் வாழ்க்கை இங்கு அமைந்திடக் காரணம் ஆகும். உலக நாடுகள் பலவும் கடலியல் துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற இந்நாளில், இந்தியக் கடலியல் துறை அண்மையில் தோன்றிய இளைய அறிவியலாகவே உள்ளது. எனினும், கடலியல் துறையின் பல்வேறு பிரிவுகளான கடலுயி ரியல், வேதியக் கடலியல், இயற்பியக் கடலியல், கடலடி மண்ணியல், வானிலையியல் போன்றவற்றில் சிறப்புப் பணியாற்றும் சீரிய கடலியல் அறிஞர்கள் இந்தியாவில் உள்ளனர். கடல் மீன் இயல். அறிவியலின் ஒரு முக்கிய பிரிவான கடலுயிரியல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தான் பிரிட்டனில் எட்வர்ட் ஃபோர்ப்ஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கு முன்பு பெருங்கடல் களைப் பற்றிய உயிரியல் ஆய்வு ஆங்காங்கே சிறிதள வில் காணப்பட்டது. அரிஸ்டாட்டில், கடல்வாழ் விலங்குகளின் உடற்கூறுகளைக் குறித்தும், அவற் றின் இயற்கை வாழுமிடத்தைப் பற்றியும் பயனுள்ள குறிப்புகளை அளித்த முதல் கடல்வாழ் உயிரியல் அறிஞர் ஆவார். விலங்குகளிடையே இருந்த வேற்றுமைப் பண்புகளைக் கண்டறிந்து அவற்றை மரபு ஒழுங்குள்ள இனங்களாகப் பிரித்தவர் அரிஸ் டாட்டில்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன கடல்வாழ் உ உயிரியலின் தந்தையெனப்படும் ஃபோர்ப்ஸ், அரிஸ்டாட்டிலைப் பின்பற்றிய சீடரா வார். இந்திய அறிஞர்கள், கடலியல் 183 கடலில் வாழும் பூச்சிகள் முதற்கொண்டு, மீன் கள் வரை அனைத்து உயிரினங்களையும் முழுதுமாக ஆராய்ந்த பேராசிரியர் சேஷையா இந்த உயிரியல் ஆய்வுக்கென்றே தமிழ் நாட்டில் தனித்து நின்று பெரும்புகழ் பெற்று விளங்கும் கடலுயிரியல் நிலை யத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தோற்றுவித்தார். ஆந்திரப் பல்கலைக் சுழக விலங்கியல் துறைப் பேராசிரியராக விளங்கிய பேராசிரியர் பி.என். கணபதி மீன் உயிரியல், மீன் முட்டை, மீன் குஞ்சு கள் ஆராய்ச்சி, ஒட்டுண்ணி ஆய்வு முதலியவற்றில் சிறப்புப் பணியாற்றிக் கடல் உயிரியல் துறையை வளர்த்தார். மீன் இயல் ஆராய்ச்சியில் அழியா இடம் பெற் றுள்ள இந்தியக் கடல்வாழ் உயிரியல் வல்லுநர்களில் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய முன்னாள் நெறியாளர்களான முனைவர் பணிக்கர், முனைவர் ஜோன்ஸ், மத்திய அரசின் பெருங்கடல் மேம்பாட் டுத் துறையின் நெறியாளர் முனைவர் காசிம், முனைவர் மேனன், ஏ.ஜி. கிருஷ்ணன், முனைவர் சி.வி. சூரியன், முனைவர் ஜிங்க்ரன் ஆகியோர் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். மீன்தொழில்நுட் பத் துறையில் அ.பெருமாள், ம.சிதம்பரம்,ம. சக்திவேல் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். கடலில் உள்ள மீன் வகைகள், கடலின் வெவ் வேறு பகுதிகளில் உள்ள மீன்களை அளப்பது, அவற்றின் தாவர, விலங்குப் பொருள்களின் அளவு, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தேவையான தொடராய்வுகள் பலவற்றை நடத்திய இக்கடல்வாழ் உயிரியல் வல்லுநர்கள், பெருங்கடல்களைப் பற்றி இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் மிகுந்த அளவில் உண்வைக் கடலிலிருந்து பெற வழி செய்யலாம். அதன் மூலம், எண்ணிக்கையில் பெருகி வரும் மக்க ளுக்கு, குறிப்பாகப் பற்றாக்குறையான உணவையே பெற்றுவரும் மக்களுக்கு, ஊன் புரத உணவைக் குறைந்த செலவில் அளிக்க இயலும் என்று இவ்வறி ஞர்கள் கூறியுள்ளனர். கடல் மீன் வளர்ப்பு. நிலத்தைப் பயிரிடுவது போல நீரைப் பயிரிட்டுப் பெருகியுள்ள பெருங்கடல் களை நன்மைக்குப் பயன்படுத்த வேண்டித் தீவிர ஆராய்ச்சிக்குப்பின் பயன் தரும் முடிவுகள் பல வற்றை அறிந்த இந்தியக் கடல்வாழ் உயிரியலாளர் களுள் இன்றைய மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய நெறியாளர் முனைவர் சைலஸ், முனைவர் அலிகுனி, முனைவர் கங்கூலி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர் ஆவர். பால்கெண்டை முதலான கடல் மீன்களையும் இறால் வகைகளையும் உணவுக்குப் பயன்படும் சிப்பி