274 இந்திய வேளாண் பயிர் ஆராய்ச்சி நிலையம்
274 இந்திய வேளாண் பயிர் ஆராய்ச்சி நிலையம் ஆராய்சசி நிலையம் (புதுடெல்லி), இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வடகிழக்கு மலைப்பிரதேசக் கூட்டு ஆராய்ச்சி நிலையம் (ஷில் லாங்). அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் மைய வேளாண் ஆராய்ச்சி நிலையம் (போர்ட் பிளேர்) ஆகிய இம்மூன்றும் பலதரப்பட்ட பயிர் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் (Indian Agricultural Research Institute). இவ்வாராய்ச்சி நிலையம் முதன் முதலில் 1905 ஆம் ஆண்டு பீகாரி லுள்ள பூசா என்னுமிடத்தில் அரசு வேளாண் ஆராய்ச்சிக் கழகம் என்ற பெயரால் நிறுவப்பட்டது. பின் 1934 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு 1936 இல் பிரதான வேளாண் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் புதுடெல்லிக்கு மாற்றப்பட்டது. இது ஒரு முதல்தரமான பல்கலைக் கழகமாகும். மேலும் பல்வேறுபட்ட துறைகளில் முதுநிலைப்பட்ட வகுப்புகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் இதன் துணை நிலையங்கள் உள்ளன. வேளாண் இந்திய ஆராய்ச்சிக் கழகம் பயிர் களின் இனப்பெருக்கத்தில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியுள்ளது. இதில் கோதுமையும் பல பயிர் களும் அடங்கும். நிலையம் (Sugarcane கரும்பு இனப்பெருக்க Breeding Institute). இந்நிலையம் கோயமுத்தூரில் 1912 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள வேளாண் இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் தொடங்கப் பட்டது. 1950 ஆம் ஆண்டிலிருந்து முழுமை பெற்று இந்நிலையம் விளங்குகிறது. தற்போது இரண்டு துணை நிலையங்களைப் பெற்றுள்ளது. அவற்றில் ஒன்று ஹரியானாவிலுள்ள கர்னூல் என்னுமிடத்திலும், மற்றொன்று கேரளாவிலுள்ள கண்ணனூர் என்னுமிடத்திலும் அமைந்துள்ளன. இந்தியக் கரும்பு ஆராய்ச்சி நிலையம் (Indian In- stitute of Sugarcane Research). இந்நிலையம் 1952 லக்னோவில் இல் தொடங்கப்பட்டது. இங்கு கரும்பின் புதிய இனப்பெருக்க முறையைத் தவிர அனைத்து முறைகளிலும் கரும்பு சாகுபடி பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகம் (Institute Cotton Research). நாக்பூர் என்னுமிடத்தில் இக் கழகம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. கோயமுத் தூரில் இதன் மண்டல நிலையம் அமைந்துள்ளது. மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம் (Central Rice Research Institute) இந்நிலையம் 1946 இல் கட் டாக் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது ஹசாரி பாக் பகுதியில் ஆராய்ச்சி நிலையத்தினை ஏற்படுத்தி யுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையம் பீகார் மேட்டுநில நெல் ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. மேலும் நெல் சாகுபடிக்கான அடிப்படையையும் முக்கிய நிலைகளையும் விளக்குவதாக உள்ளது. இந்த அமைப்பு, பிலிப்பைன்சிலுள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்துடன் கூட்டுறவு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ளது. தோட்டப்பயிர்களில் இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் {Indian Institute of Porticultural Research). இந்த நிலையம் 1967 -இல் பெங்களுரில் நிறுவப்பட்டது. இதன் மண்டல நிலையங்கள் கர்நாடகாவிலுள்ள செட்ஹல்லி, கோரி கோட்டல் என்ற பகுதியிலும். குஜராத்திலுள்ள கோத்ராவிலும், பீகாரில் ராஞ்சி போன்ற இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இவை எல்லாவிதமான ஆராய்ச்சி களையும் மேற்கொள்கின்றன. குறிப்பாகப் பழம், காய்கறி, பூச்செடி, வாசனை தரும் செடி, மருத்துவப் பயிர், பிறவற்றின் உற்பத்தி தரம், பயன் போன்றவற்றை அதிகப்படுத்த முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. தரமான வகைகளில் வெள்ளரி, திராட்சை, மா, கத்தரி, தக்காளி போன்றவை வெளியிடப்பட்டுள்ளன. பல மத்திய உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிலையம் (Central Potato Research Institute). இந்நிலையா 1949இல் பாட்னாவில் தொடங்கப்பட்டுப் பின்னர் 1956இல் சிம்லாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இது 11 ஆராய்ச்சி நிலையங்களைப் பெற்றுள்ளது. து உருளைக் கிழங்கு சாகுபடியுடன், கிருமி நாசினி களால் பாதிக்கப்படாத விதை வகைகளை மாநில விதைக் கழகங்களுக்கும், தோட்டக்கலை நிறுவனங் களுக்கும் அளிக்கிறது. மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் (Central Tobacco Research Institute). இந்நிலையம் 1947 இல் இராஜமுந்திரி என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. இது 8 நிலையங்களை மாநிலங்களின் வெவ்வேறு இடங்களில் ஏற்படுத்திப் பல்வேறு வகைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறது. மத்திய மலைத் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம். இந்த ஆராய்ச்சி நிலையம் 1970இல் காசர்கோடு என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. பின் மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ள காசர்கோடு, காயான்குளம், விட்டல் என்ற பகுதியிலுள்ள பாக்கு ஆராய்ச்சி' நிலையங் களுடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் வாசனைப் பொருள், முந்திரி போன்றவற்றின் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆராய்ச்சிப் பணிகளைக் கள்ளிக் கோட்டை, புத்தூர் பகுதிகளிலுள்ள தேசிய ஆராய்ச்சி நிலையத்திடம் ஒப்படைத்துள்ளது. இதன் விதைப் பண்ணை கிடு என்னுமிடத்திலுள்ளது.