334 இயங்கு உருமாற்றப் பாறைகள்
334 இயங்கு உருமாற்றப் பாறைகள் படம் 8. ஃ பில்லோனைட்டுகள் அ) குவார்ட்சு மஸ்கோனைட் கிராஃபைட் ஃபில்லோனைட் அபிரகத்தில் நுண்மடிப்புகள் ஆ) கார்னெட் ஃபில்லோனைட்டுகள் இ) கார்ளெட் ஃபில்லோனைட்டுகள். இருக்கும் பாகம் நீட்டப்படுகிறது. மேலும் கால் சைட்டில் நுண்ணிய மடிப்புக்கள் உண்டாகின்றன. ஃபில்லோளைட்டுகள் (phyllonites). ஃபில்லைடு களைப் போலவே ஃபில்லோனைட்டுகளும், குறை உருமாற்றக் கனிமங்களைக் கொண்டுள்ளன. அபிர கமும், குளோரைட்டும் முக்கிய கனிமங்களாகும். இதிலும் அடுக்குத் தன்மை தெளிவாகக் காணப் படுகின்றது. கனிம இழைகளில், நுண்மடிப்புகளும் மிகச்சிறிய மேடு பள்ளங்களும் காணப்படுகின்றன. ஃபில்லோனைட்டுகள், மைலோனைட்டுகளைப் போலவே, அதிக அழுத்தத்தில் உருவாகக்கூடிய நு ண் துகள் பாறையாகும். இவை பெருந்துகள் பாறைகளிலிருந்து உண்டாகின்றன. உருமாற்றப் படிக நிகழ்ச்சியின் போது குவார்ட்சு, கால்சைட்டு தவிரப் புதிதாக அல்பைட், எபிடோட் போன்ற கனிமங்களும், படிகமாக மாறத் தொடங்குகின்றன. அதிக அடுக்குத் தன்மை, நெகிழ்ச்சித் தளங்களின் (slip planes) வேறுபட்ட நகர்ச்சியினால் உண்டா கின்றது. சில சமயங்களில், பின்னேற்ற உருமாற் றத்தின் போது (retrograde metamorphism) மலைப் பாறைகளிடையே ஏற்படும் பெயர்ச்சியின் காரண மாகக் கடைசிக் கட்டமாக ஃபில்லோனைட்டுகள் உண்டாகின்றன. கடினக் கனிமச் சேர்மங்கள், சில சமயங்களில் ஃபில்லோனைட்டுகள் உண்டாகும் போது, அச்சமயத்திலுள்ள வேதியியல் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, குவார்ட்சு - மஸ்கோவைட் குளோரைட் -பில்லோ னைட்டில், குறைவாக அழிக்கப்பட்ட பெரிய துகள் அளவான கார்வெட், ஸ்டாரோலைட், பயோடைட், ஆண்டாலுசைட் முதலிய அதிவெப்ப உருமாற்றக் கனிமங்கள் காணப்படுகின்றன. ஃபில்லோனைட் டுகள் ஃபில்லைட்டுகளைப் போல இருப்பினும் கண்ணுக்குப் புலப்படக்கூடிய பல வேற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. அபிரகம், பட்டு இழை அடுக் குகளாகக் காணப்படுகின்றது. மேலும் ஃபில்லோ னைட்டுகளில் கார்னெட் தனக்கே உரித்தான அமைப்பில் காணப்படும் தனிச் சிறப்பாகும். செமி அடுக்கு. சிரேவேக்கி (graywake) என்ற படிவுப்பாறையிலிருந்து மாற்றம் பெற்ற பாறைகள் படம் 9. செமி அடுக்குகள் அ