உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 இயற்கை வளங்கள்‌

434 இயற்கை வளங்கள் பொருள் வளங்களாகும். எண்ணெய் வளத்தைப் பொறுத்தவரை, உலகத்தின் ஒருசில பகுதிகளில்தான் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. அதே வேளை யில் இவற்றின் பயன்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. தொழிற் பெருக்கம்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் அளவிலேயே பயன்படுத்தப் பட்டால்கூட இருப்பிலுள்ள தொல் எரி பொருள் வளங்கள் முழுதுமாக அழிந்து விரைவில் எரிசக்திப் பற்றாக்குறையை (energy crisis) எதிர்நோக்க வேண்டி வருமென்று கூறுகின்றனர். டன் இந்தியாவில் ஏறக்குறைய 131,000 மில்லியன் வரை நிலக்கரி இருப்பதாகவும் தற்போது பயன்படுத்தப்படும் அளவிலேயே பயன்படுத்தப் பட்டால் இன்னும் 1,000 ஆண்டுகளுக்குள் முழுதும் அழிந்துவிடுமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது. சுத்தி கரிக்கப்படாத எண்ணெய் தற்போதைய தேவையில் மூன்றில் ஒரு பங்குதான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகம் முழுதிலும் 95% நிலக்கரி, 4% எண்ணெய், 1% இயற்கை வாயுக்கள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. உலகில் உள்ள மொத்த எண்ணெயும், இயற்கை வாயுக்களும் இந்த நூற்றாண்டு முடிவதற்குள்ளாகவே அற்றுப்போகும் என்று கருதப்படுகிறது. தொல் எரிபொருள் வளத்தைப் பாதுகாத்தல். தொல் எரிபொருள்வளத்திற்கு மாற்றாக நீர்மின் சக்தி (hydropower), காற்றுச்சக்தி (wind power), அணு சக்தி (nuclear energy), சூரிய சக்தி (solar energy) போன்றவற்றைப் பயன்படுத்தினால் அதனை அற்றுப்போகும் நிலையிலிருந்து ஓரளவு காப்பாற்ற லாம். நீர்மின்சக்தி. நீரிலிருந்து மின் உற்பத்தி செய்யும் பல திட்டங்கள் தற்போது நடைமுறையில் இருக் கின்றன. கடல் அலைகளைப் பயன்படுத்தி மின் உற் பத்தி செய்யும் திட்டம் ஃபிரான்சிலும், கழிமுக நீரைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டம் இந்தியாவிலும் நடப்பில் உள்ளன. காற்றுச்சக்தி உலகின் பல பகுதிகளில் மிக ஆழ மான பகுதியிலிருந்து நீரை வெளிக்கொண்டு வரு வதற்கும், எந்திரங்களை இயக்குவதற்கும் காற்றாடி களைப் (wind mills) பயன்படுத்துகின்றனர். உலகில் உண்டாக்கப்படும் மொத்த சக்தியில் 0.1 மில்லியன் மெகாவாட்தான் இப்போது கிடைக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. ச் அணுசக்தி. சில உலோகங்களைச் சிதைக்கும் போது பெருமளவில் ஆற்றல் வெளிப்படுகிறது. இச் சக்திக்கு அணு சக்தி என்று பெயர் ஒரு கிராம் யுரேனியம் 235 ஐச் சிதைக்கும்போது வெளிப்படும் சக்திக்கு நிகரான சக்தியைப்பெற 15 டன் நிலக்கரி யையோ 14 பீப்பாய்கள் சுத்திகரிக்கப்படாத எண்ணெயையோ எரிக்க வேண்டும். யுரேனியம் -238, தோரியம்-232 கடல் நீரில் இருந்து கிடைக்கக்கூடிய டுயுட்டிரியம் (deuterium) போன்ற உலோகங்கள் யுரேனியம் 235 ஐ விட மிகுந்த சக்தியைக் கொடுக் கும். இந்தியாவில் காணப்படும் பல கனிமங்களில் தோரியம் அடங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி வருங்காலத்தில் ஏற்படும் சக்தி பற்றாக்குறையைப் போக்கிவிடலாமென்று அணுசக்தி அறிஞர்கள் கருது கின்றனர். இந்தியாவில் தாராப்பூர் (பம்பாய்), கோட்டா (இராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ் நாடு) போன்ற இடங்களில் அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. சூரியசக்தி. சூரிய சக்தியின் மூலம் உணவு சமைத் தல், நீரைச் சூடாக்குதல், தானியங்களை உலர்த்துதல், சில எந்திரங்களை இயக்குதல் போன்ற பல செயல் கள் நடைபெறுகின்றன. தொல் எரிபொருள்கள் எரியும்போது நைட் ரஜன், கார்பன், கந்தகம் போன்றவற்றின் ஆக்ஸைடு கள் வெளிப்படுகின்றன. இவை வளி மண்ட லத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. இதேபோல் அணு சக்தியை உண்டாக்கும் போதும் சில கேடுபயக்கும் பொருள்கள் வெளிப்பட்டு வளிமண்டலத்தைப் பாதிக்கின்றன. ஆனால் புதுப்பிக்கக்கூடிய காற்று, நீர், சூரிய வளங்களால் எவ்வித நிலையான கேடு களும், சிக்கல்களும் ஏற்படுவதில்லை. எனவே இச் சக்தியைப் பயன்படுத்தி சூழ்நிலை கேடுறுவதைத் தடுக்கலாம். மக்கள் சமைப்பதற்கும் எரிப்பதற்கும் விறகு களையும், காய்ந்த மாட்டுச் சாணத்தையும் எரி பொருளாகப் பயன்படுத்திவருகின்றனர். மாட்டுச் சாணத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் தாவரங்களுக்குத் தேவையான இயற்கை உரம் கிடைக்காமல் போய்விடுகிறது. இக்குறையைப் போக்கச் சாண எரி வாயுக் கலன்களை (gobar gas plants) அமைத்து, மாட்டுச் சாணத்தைப் பயன் படுத்திச் சாண எரிவாயுவை (biogas or gobar gas) உண்டாக்கி, விளக்கு எரிப்பதற்கும், சமைப்பதற்கும், பொருள்களைச் சூடாக்குவதற்கும் பயன்படுத்தலாம். இதனால் எரிபொருள் செலவு குறைந்து விடும். தூய்மைக் கேடுகளும் இல்லை. மேலும் விறகுகளுக் காகக் காடுகளை அழிப்பதும் தவிர்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இதில் பயன்படுத்தப் படும் சாணத்தைப் பயிர்களுக்குத் தேவையான உர மாகவும் பயன்படுத்தலாம். வனவிலங்குப் பாதுகாப்பு. காடுகளும், விலங்கு களும் இயற்கைச் செல்வங்களாகும். மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவிலங்குகளின் பெரும்பகுதி இயற்கை வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.