64
மருமக்கள்வழி மான்மியம்
சூரணம் அதற்குச் சொன்ன தும் உண்டோ?
90
அஷ்டாங் கிருத[1] வைத்தியர், 'ஐயா
எல்லாப் பிணியிலும் பொல்லாப் பிணியிது,
எங்கள் நாட்டில் இப்பிணி யாலே
வருந்தா திருக்கும் மனிதர் சிலரே;
இதுநாள் வரையும் இப்பிணி தீர,
95
காய மொன்று கண்டறிந் தவரிலை;
வயக்கரை மூசும் வைத்திய ரத்னமும்[2]
எம்மா லாகா தென்றுகை விட்டிடில்
பிணியின் கொடுமை பேசவும் வேண்டுமோ?'
என்று கூறி யிருந்தனர், என்செய்வார்?
100
இங்கிலிஷ் டாக்டரும் இதற்கு மருந்துகள்
இருப்ப தாக இயம்பிடக் காணோம்,
இப்பிணி போல வெப்பை எழுப்பும்
பிணியிவ் வுலகில் பிறிதொன் றில்லை.
ஈக்களும் தேடி யீட்டிய தேன்போல்
105
பலரும் பலநாள் பாடு பட்டுக்
கூட்டி வைத்த குடும்ப முதல்இத்
தீனம்[3] கொண்டவர் தீண்டுவ ரேல்,உடன்
ஆனை தின்ற விளாம்பழ மாம்; அதற்கு
ஐய மில்லை; அறியார் யாரே!
110
பாரும், பாரும், பத்திரமா யிரும்!