உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்த அழுத்தம்‌ 549

ஒரு இக் இரத்த மிகு அழுத்தத்திற்கு ஏதாவது காரணத்தைக் குறிப்பிட்டுக் கூற முடியும். காரணங்களை விலக்கிவிட்டால் இத்தகையோரின் இரத்த மிகு அழுத்தம் இயல்பான அழுத்த நிலையை அடையும். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் உடலி லுள்ள இன்றியமையா உறுப்புகளாகிய மூளை, இதயம் சீறுநீரகங்கள் ஆகிய உறுப்புகள் சீர்கெட்டுப் போகின்றன ; அதன் காரணமாக மரணமும் ஏற்படு கிறது. எனவே இரத்த மிகு அழுத்தம் உள்ளவர்கள் தம் இரத்த அழுத்தத்தினை இயல்பான நிலையிலேயே வைத்துக்கொள்ள மருந்துகள் கொள்வதாலும், வேறு பல முறைகளாலும் இரத்த மிகு அழுத்தத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வரலாம். வேண்டும். உட் இரத்தமிகு அழுத்தத்திற்குக் காரணங்கள். சிறுநீரக நோயுள்ளவர்களில் பெரும்பாலோரிடம் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். சிறுநீரகங்களின் பிறவிக் கேடுகளாலும், சிறுநீரகத் தமனி, சிறுநீரகச் சிரை முதலியவற்றில் அடைப்பு ஏற்படுவதாலும் இரத்த அழுத்தம் அதிகமாகலாம். இவை தவிர, சிறு நீரக நாளங்கள் சிறுநீர்ப்பை சிறுநீர்க் குழாய் முதலிய பகுதிகளில் கற்களால் அல்லது நாளச் சுருக் கத்தால் அடைப்பு ஏற்படுதல், புராஸ்ட்டேட் வீக்கத் தினால் சிறுநீர்ப் போக்குத் தடைப்படுதல் போன்ற பல காரணங்களாலும் இரத்த அழுத்தம் அதிகமா கலாம். பிட்யூட்டரி, தைராய்டு, அட்ரீனல் அகனி போன்ற நாளமில்லாச் சுரப்பிகளில் தோன்றும் நோய்கள் காரணமாகவும், பெருந்தமனியின் தசைச் சுருக்கம், தமனிச் சுவர்கள் தடித்தல் முதலிய காரணங்களாலும் இரத்த மிகு அழுத்தம் ஏற்படு கிறது. நோயறியும் முறைகள். நோய் எப்படித் தொடங் கியது, உடலில் என்னென்ன மாறுதல்கள் ஏற் பட்டன என்பதனைக் கேட்டு அறிதல்; உடலையும் உள்ளுறுப்புகளையும் பரிசோதித்தல்; இரத்தம், சிறுநீர் ஆகியவற்றை ஆய்வு நிலையங்களில் கொடுத்து ஆய்வு செய்தல்; எக்ஸ்-கதிர் படம், இதய மின்னலை வரைபடம் ஆகியன எடுத்துப் பார்த்தல்; 24 மணி நேரத்தில் சேகரித்த நோயாளி யின் சிறுநீரில் வெனில் மெண்டலிக் அமிலம் அள வினைக் கண்டறிதல்; நோயாளியின் இரத்தத்தி லுள்ள பொட்டாசியம்,நைட்ரேட் அளவைக் கணக் கிடல்; 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளி யேறிய கிரியாட்டினின் அளவைக் கணக்கிடல், இரத்த நாளத்தில், அயோடின் தொடர்புடைய மருந்தைச் செலுத்திச் சிறுநீரகங்களை எக்ஸ்-கதிர் படம் எடுத்தல்; சிறுநீரகத் திசுவைத் துணித்தெடுத்து க இரத்த அழுத்தம் 549 ஆய்வு செய்தல்; கண் உள்நோக்கியின் உதவியால் நோயாளியின் கண்களை ஆய்வு செய்தல் ஆகிய நோய்க்குறியறியும் முறைகளைக் கொண்டு நோயை யும் அதற்கான காரணங்களையும் அறியலாம். கண் உள் நோக்கி கொண்டு கண்ணைச் சோதிக்கும் போது கண்களில் கீழ்க்காணும் மாறுதல்கள் காணப் படலாம். 1. இரத்தக் குழாய்கள் சிறுத்துக் குறுகி வெள்ளிக கம்பிகள் போலக் காணப்படலாம். 2. ஆங்காங்கே மெழுகு சிதறினாற் போலக் காணப்படலாம். 3. இரத்தக் குழாய்கள் வெடித்து மெழுகுவர்த்தி எரிவது போன்ற தோற்றம் தெரியலாம். இரத்த ஆய்வில் இரத்த யூரியா அதிகமிருப்பதும் தெரிய வரும். என்று இவ்வாறு ஆய்வு செய்து எந்தக் காரணத்தினால் இரத்த அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது நிர்ணயித்துக் காரணம் ஒன்றும் இல்லாத இரத்த அழுத்தம் என்றால் அதை இன்றியமையாத இரத்த அழுத்தம் என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் எதனால் ஏற்பட்டிருக்கிறது என்று நிர்ணயித்து அதைத் தவிர்த்து விட்டால் இரத்த அழுததத்தை இயல்பான அளவிற்குக் கொண்டுவர முடியும். எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த இரத்த அழுத்தம் அதிகம் இருப்பதாகத் தற்செயலாகக் கண்டுபிடித்தால் அவர் களுக்கும் சிகிச்சை செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு உடலில் அவசியமான உறுப்புகளாகிய மூளையோ, இதயமோ, சிறுநீரகமோ தாக்கப்பட்டு அகால மரணம் ஏற்படலாம். மருந்து இல்லாமல் இரத்த அழுத்தத்தைத் குறைக்கக் கூடிய முறைகளைக் கையாண்டு பார்க்கலாம். இந்த முறைகளாவன; எடையைக் குறைப்பது, உணவில் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பது, அதிக அளவு புரதச் சத்துகள் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது, ஓரளவு உடற்பயிற்சி செய்வது. (ஆனால் உடற்பயிற்சியில் எடை தூக்குவது போன்ற பயிற்சிகளைச் செய்யக் கூடாது).நடக்கலாம், ஓடலாம் அல்லது யோகாசனம் செய்யலாம். இப்படி ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் பழகிக் குணம் ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து கையாள வேண்டும். அப்படியும் குணம் அடையாமல் இரத்த அழுத்தம் அதிகமாகவேதான் இருக்கிறது என்றால் இரத்தஅழுத்தத்தைக் குறைக்கக் கூடிய மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இரத்தமிகு அழுத்த மருத்துவத்தில் கையாளப் படும் மருந்துகளாவன: ரிசர்ப்பின், புரூஸமைட், புரோபரனால், ஆல்பா மிதைல் டோபா, ஹைட்ரல சின் முதலியன. இவற்றால் தீய பக்க விளைவுகளும்