உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தக்குழாய்‌ வழி உணர்வு நீக்கிகள்‌ 575

புற்றுநோய், கருத்தடை மருந்து உட்கொள்ளுதல், நீர்வற்றல், பலசெல்லிரத்த நோய் போன்றவற்றால் இரத்தம் உறையும் தன்மை அதிகமாயிருப்பதாலும் சிரை இரத்தப்படிம உறைவு வரலாம். முதலில் இரத்தப்படிம உறைவில் இரத்த நுண் தட்டுகளும் ஃபைபிரினும் சேர்ந்திருக்கும். பின்னர் இரத்தச் சிவப்பணுக்களும், ஃபைபிரினும் சேர்ந்து படிம உறைவிலிருந்து பிரிந்து தக்கையடைப்பா கின்றன. கைச்சிரைகளில் சிதைவு ஏற்பட்டாலோ புற்றுநோய்க்கு கதிர் மருத்துவம் செய்தாலோ அக்குள் சிரையில் இரத்தப்படிம உறைவு வரலாம். வெளிச்சிரையில் உறைசிரையழல் வரும். கால் அறிகுறிகள். கெண்டைக் கால்தசையில் வேதனை யும், தோல் சற்று வெப்பமாகவும், நீர்க்கோவை யும், கால் வீங்கி, மாற்றுச் சுற்றோட்டமில்லாவிட் டால் வெளுத்தும், மாற்றுச் சுற்றோட்டம் அடை பட்டிருந்தால் நீலநிறமாகவும் காணப்படும். நுரை யீரல் தக்கையடைப்புதான் சிரையடைப்பின் முக்கிய அறிகுறியாகும். சிரை வரைபடம் மூலம் இந்நோயைக் கண்டு பிடிக்கலாம். தடுக்கும் முறை. சிரை இரத்தம் கட்டுப்படு வதைத் தடுக்க வேண்டும். அறுவை நடந்த 72 மணிக்குப் பிறகுதான் இரத்தப்படிம உறைவு ஏற் படும். ஆதலால் நோயாளியை விரைவில் எழுந்து நடக்கச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்தல். கால்களை அடிக்கடி அசைத்தவ் முதலியவை இதனைத் தடுக்கும். மருத்துவம். இரத்தப்படிம உறைவு பரவுவதை யும். நுரையீரல் தக்கையடைப்பு வருவதையும் இரத்தப்படிம உறைவைச் சிதைக்கும் மருந்து மூலம் தடுக்க வேண்டும். தக்கையடைப்பை அறுவை மருத்துவம் மூலம் களையலாம். 16. வா. நூலோதி.John Macleod, Davidson's Principles and Practice of Medicine, Fourteenth Edition, ELBS, Hongkong. 1984; Sir Ronald Bodley Scott, Price's Text Book of the Practice of Medicine, Twelfth Edition, ELBS, London, 1978. இரத்தக்குழாய் வழி உணர்வு நீக்கிகள் உணர்வு இழப்பு மருந்துகளைப் பொது உணர்விழப்பு மருந்துகள் (general anaesthetics), பகுதி உணர் விழப்பு மருந்துகள் (local anaesthetics) என இரு இரத்தக்குழாய் வழி உணர்வு நீக்கிகள் 575 வகையாகப் பிரிக்கலாம். நோயாளிக்கு அறுவை மருத்துவத்தின் போது பொது உணர்வு இழப்பு மருந்து கொடுத்தால் அவர் நினைவையும் உணர்வை யும் இழப்பார். ஆனால் மயக்க மருந்து கொடுப் பதை நிறுத்திவிட்டால் நினைலையும், உணர்வையும் மீண்டும் பெறுவார். பகுதி உணர்விழப்பு மருந்துகள் உடம்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தற்காலிகமான நரம்புக் கடத்தலைத் தடுத்து அப்பகுதியில் உணர் விழைப்பை உண்டாக்கும். பொது உணர்விழப்பு மருந்துகளை, மூக்கின் மூலம் உள்ளிழுக்கப்படும் மருந்துகள் (inhalation agents), சிரைவழியாகச் செலுத்தப்படும் மருந்துகள் (intravenous anaesthetics) என இரண்டாகப் பிரிக்க லாம். குறுகியகால அறுவை மருத்துவத்திற்குச் சிரை வழி உணர்விழப்பு மருந்துகள் கொடுக்கப்படு கின்றன. ஒரு சிறந்த சிரை வழி உணர்வு நீக்கி,விரை வான மற்றும் நன்முறையிலான இயக்க ஆரம்பம், உணர்விழப்பிலிருந்து விரைவானமற்றும் நன்முறையி லான மீண்டெழுதலைத் தரக் கூடியதாகவும், பரந்த பாதுகாப்பு எல்லையுடையதாகவும், குரல்வளை அல்லது மூச்சுக்குழாய்ச் சுருக்கத்தை ஏற்படுத்தாமலி ருப்பதாகவும், உடலில் தேங்கியிராமல் விரைவில் வெளியேறுவதாகவும், வேண்டிய அளவு அல்லது ஓரளவுக்கேனும் வலி நீக்கம் செய்வதாகவும், உணர் விழப்பின் போது பயன்படுத்தப்படும் பிற மருந்து களுடன் பொருந்தக் கூடியதாகவும், நீரில் கரையக் கூடியதாகவும், சிதையாததாகவும் இருக்கவேண்டும். எல்லாப் மேற்கூறிய ஆனால் பண்புகளையும் கொண்ட உணர்வு நீக்கி எதுவுமில்லை. சிரைவழி உணர்வுநீக்கும் மருந்துகளைப் பார்பிச் சைக்ளோ ஃபினைல் சுரேட்கள் (barbiturates), ஹெக்சைல் அமீன் பெறுதிகள், யுஜினால் வழி வந்தவை ஸ்டீராய்டுகள், பலதரப்பட்ட மருந்து கள் எனப் பிரிக்கலாம். பார்பிச்சுரேட்டுகளில் தயோபென்ட்டாலும். மெத்தா ஹெக்சிட்டாலும் பயன்படுத்தப்படுகின் றன தயோபென்ட்டால் (பென்ட்டதால் சோடியம்) கொழுப்பில் கரையுந் தன்மை கொண்டதால் இரத்த மூளைத் தடையை மீறி மூளையினுள் சென்று நன் முறையிலும் விரைவாகவும் உணர்விழக்கச்செய்கிறது. 15-30 நொடிகளில் உணர்விழப்பைக் கொடுக்கும் இம்மருந்து சிறிது நேரமே இயங்கும் (ஏறக்குறைய 8 முதல் 10 நிமிடங்கள் வரை). ஒரு நிமிடத்தில் ஏறத் தாழ 90 விழுக்காடு மருந்து மூளையினுள் சென்றாலும் விரைவாகத் தசைகளுக்கும், கொழுப்புத் திசுக்களுக் கும் செல்வதால் இதுஇயங்கும் நேரம்குறைகிறது. இதனை 2.5 விழுக்காடு கரைசலாகச் சிரையினுள் செலுத்துவர். இம்மருந்து எளிதில் சிதைந்து விடுமா தலால் ஒவ்வொரு முறையும் புதியதாகத் தயாரிக்க வேண்டும். சிரையினுள் செலுத்தும்போது தவறு