உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்த வேதியியல்‌ 641

சைட்டோபிளாசம் பளிச்சென்ற நீல நிறத்திலும், சில சமயம் மிகமிகக் குறைந்த குறுமணிகளுடன் காணப் படும். இவை வெள்ளையணுக்களில் இருபது முதல் ஐம்பது சதவீதம் இருக்கும். நாள்பட்ட தொற்று நோயான காசநோய், டைபாய்டு, புரூசலோசிஸ், பால்வினை நோய், கக்குவான் இருமல் இவற்றிலும் சில இரத்தப் புற்றுகளிலும் இவற்றின் அளவு கூடும். மானோசைட். இவ்வணுக்களின் நியூக்ளியஸ் மிகச் சிறியதாகவும், சைட்டோபிளாசப் புள்ளிகள் மிகவும் சிறியனவாகவும் இருக்கும். இரண்டு முதல் பத்து விழுக்காடு வெள்ளை அணுக்கள் இவ்வகையைச் சார்ந் தவை. தொற்றுநோய்கள், சில புற்று நோய்கள், சில குடல்நோய்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக் கின்றன. பொதுவாக, நியூட்ரோஃபில் அணுக்கள் நுண் கிருமிகளை அழித்தும், மானோசைட்கள், உருமாற்றத் தால் பல தசைகளுக்கும் சென்று அங்குள்ள கிருமி களை விழுங்கியும், லிம்ஃபோசைட் அணுக்கள் ஒவ் வாமை எதிர்ப்புச் செயல்களிலும் ஈடுபட்டு உடம்பை நுண்கிருமிகளின் பிடியில் இருந்து பாதுகாக்கின்றன எனக் கூறலாம். எஸ்.விஸ்வநாதன் நூலோதி, David Penington, G. C. de Gruchy, Clinical Haematology in Medical Practice, Fourth, Edition, ELBS, London, 1978. இரத்த வெளிப்பாடு காண்க: இரத்தம் அகற்றல் இரத்த வேதியியல் இரத்தம் பல் செல்களையும் திசுக்களையும் இணைக்கும் பாலமாகும். இவற்றுக்கு வேண்டிய முக்கியமான பொருள்களும் அவை வெளியேற்றும் கழிவுப் பொருள்களும் இரத்தத்தில் உள்ளன. செல் கள் சுவாசிக்கும் ஆக்சிஜனும், அவை வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடும் இரத்தத்தில் கலக்கின்றன. சோடியம் பொருள் பொட்டாசியம் குளோரைடு (சோடியம் குளோரைடில்) கால்சியம் இரத்த வேதியியல் 641 வளர்சிதை மாற்றத்திற்கு வேண்டிய நொதிகளும், நாளமில்லாச் சுரப்பிகள் வெளியேற்றும் ஹார்மோன் களும் இரத்தத்தில் உள்ளன. இரத்தத்தில் அமில காரத் தன்மையைச் (PH) சீரான நிலையில் வைக்கும் உள்ளன. செரிமான பொருள்களும் இரத்தத்தில் உறுப்புகளால் உட்கொள்ளப்படும் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு ஆகிய சத்துப் பொருள்கள் இரத்தத்தில் கலக்கின்றன. நோய் எதிர்ப்பொருள்களும் (antibodies) தற் காப்புப் புரதச் சத்துகளும் (immune globulins ) இரத்தத்தில் உள்ளன. உடலின் பலவகைத் திசுக் களில் நடைபெறும் வேதி மாற்றங்களுக்கு இரத்தத் தில் உள்ள பலவகை வேதிப் பொருள்களே காரண மாகும். அவற்றின் தன்மையையும் அளவையும் பொறுத்தே திசுக்கள் இயங்க முடியும். சீரான நிலையில் உடலியங்கும்போது இரத்தத்தில் உள்ள வேதிப் பொருள்கள் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட நிலையில் உள்ளன. நோயினால் அவற்றின் அளவும் நிலையும் மாறுபடுகின்றன. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்ற பகுதியில் 90 விழுக்காடு நீரும், மற்ற பொருள்களும் அவற்றின் அளவும் கீழே . கொடுக்கப்பட்டுள்ளன. உடலியங்கு நிலையிலும் நோய் நிலையிலும் பிளாஸ்மாவில் இக்கரை பொருள்களின் அளவையும் அதன் நிலையையும் அறிவது இரத்த வேதியியலாகும். இப்பொருள்களின் உற்பத்தியின் அளவை அறிவதும், உற்பத்தியாகும் வேகத்தைப் பற்றி அறிவதும் அவை திசுக்களால் பயன்படுத்தப்படுவது பற்றி அவை வெளியேற்றப்படும் வேகத்தைப் பற்றி அறிவதும், நோய் எதிர்ப்பிகள், தற்காப்புப் புரதச் சத்துகள் இவற்றின் அளவாலும் மாறுபட்ட நிலையாலும் நோயை அறிவதும், ஹார்மோன்களின் அளவு அவற்றின் மாறுபட்ட நிலை ஆகியவற்றைக் கொண்டு நோயை அறிவதும் இரத்த வேதியிய லாகும். ஊட்டச் சத்துக்களின் அளவும், உயிர் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் நொதிகளின் அளவும் பற்றி அறிவதும், அவற்றின் அளவு நிலை ஆகியவை மாறு படும்போது வளர்சிதை மாற்றம் மாறுவதை அறிவு தும் இரத்த வேதியியலாகும். ஏ. சாம்ஜான் நூலோதி. Ambika Shanmugam, Fundamentals of Biochemistry, Fourth Edition, Madras, 1980. அளவு மி.கி./100 மி.லி. இரத்தம் 310 - 340 14 - 20 350. - 375 9 11 அ.க.4-41