உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 இருமுனைத்‌ திருப்புதிறன்‌

760 இருமுனைத் திருப்புதிறன் அணைவுச் சேர்மங்களில் உள்ள அணைவுப் பிணைப்பும் (coordination bond) முனைவுள்ளதே. (CH) NO என்ற சேர்மத்தின் N, 0 ஆகியவற்றிற் கிடைப்பட்ட பிணைப்பு அத்தன்மையது. இவ்விரு சேர்மங்களின் திருப்பு திறன் வேறுபாடு 4.37.இது முழு மாற்றம் நிகழ்ந்திருப்பின் பெறக்கூடிய மதிப் பில் 63%. எனவே எதிர்பார்த்தது போன்றே நைட்ரஜன், எலெக்ட்ரான் இணையின் பெருமளவைத் தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது. பங்கீடுறா எலெக்ட்ரான்கள், பிணையுறு எலெக்ட்ரான்களின் மறு பரிமாற்றத்தால் பாதிக்கப் படுகின்றன. மொத்தத் திருப்பு மூலக்கூற்றின் திறனுக்கு இது பெரும் பங்களிக்கிறது. ஒத்திசைவின் காரணமாக, நைட்ரஸ் ஆக்சைடு 0.17 D யும், ஃபீனைல் அசைடு 1.55 Dயும் காட்டுகின்றன. ஆயின் இவ்விரண்டிற்கும் எதிர்பார்த்த மதிப்புகள் 4.5 D ஆகும். கரிம வேதியியல் வினைகளில், பென்சீன் வளையத்தில் இரண்டாவதாகப் பதிலிடப்படும் தொகுதியின் நெறிப்பாடு இருமுனைத் திருப்பு திறன்கள் கொண்டு முன்னுணரப்படுகின்றன. ஆர்த் தோ, பாரா நிலைப் பதிலீடுகளின் போது எலெக்ட் ரான் விலகோட்டம் வளையத்தினுள்ளும், மெட்டா பதிலீட்டில் வளையத்தை விட்டும் நிகழும். நைட்ரோபென்சீன் போன்ற திரவங்களில், இரு முனைகள் பெருங்கூட்டமாக ஒன்றியிருக்கும்போது, சிக்கலான இடையீடுகள் நிகழ்கின்றன. நீரின் தனிச் சிறப்புடைய கரைக்கும் குணத்தின் காரணம் அதன் மிக உயர்ந்த மின்கடவா ஊடக மாறிலி (81) ஆகும். (μ = 1.84 D). நீர் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று கட்டிப் பிணைந்திருப்பதால், முனைவுள்ள ஒரு நீண்ட சங்கிலித் தொடர்போல் அது செயல் படுகிறது. உயர் அதிர்வெண்கள் உள்ள புலத்தில் தீவிர மான இடையீட்டால், உராய்வு வெப்பம் அதிகமாகி விடுவதால் மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக இழக் கப்படுகிறது. இதனை இருமின்னிலை இழப்பு என்பர். இது பொதுவாகப் படிகவடிவிலாக் குழைமத் திண் மத்தில் நிகழும். பாலிதின், ஃப்ளுவான் போன்ற செயற்கைச் சேர்மங்களில் இவ்விழப்பு மிகக் குறைவா தலால் இவை மின்காப்பிகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. அயனித்தன்மை. இரு வேறு பிணைப்புகளின் அயனித் தன்மைகளை ஒப்பிட வேண்டியிருப்பின், முழுமையான அயனிப் பிணைப்பை 100% முனை வான தன்மை கொண்டதாகக் கருதி, ஒப்பிடப்படும் இருபிணைப்புகளும் அயனிப் பிணைப்பிலிந்து எந்த அளவு வேறுபடுகின்றன எனக் கணக்கிட வேண்டும். இதற்கு ஒரு சமன்பாடு பயன்படுகிறது. அயனித்தன்மை விழுக்காடு = ஆய்ந்து அறியப்படும் திருப்பு திறன் முழு அயனிப்பிணைப்பாகக் கருதிக் கணக்கிடப்படும் திருப்பு திறன் × 100 இக் கணக்கீடு முறையை விளக்க HCI மூலக்கூறை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆய்வுகளினால் அறியப்பட்ட திருப்புதிறன் மூலக்கூறு 10.3 D பிணைப்பாக ஆகும். இப்பிணைப்பு முழு அயனிப் கருதப்படின் அதன் திருப்புதிறனை இரு அயனிகளுள் ஒன்றின் மீதான மின்னேற்றத்தை இரு அயனிகளுக்கு இடைப்பட்ட தூரத்தால் பெருக்கிப் பெறலாம். H-CI பிணைப்பின் நீளம் - 1.27A செ.மீ. H + அல்லது C அயனியின் மின்னேற்றம் 4,8 X 10-10 மி.நி.அ. எனவே, (முழு அயனிப் பிணைப்பில்) . -(4.8 × 10-10) X (1.27 108) = 6.1 X 10-15 மி.நி.அ.செ.மீ. = 6,1 D. அயனித்தன்மை விழுக்காடு = 1.03 6.1 X 100 = 17 இக்கணக்கீட்டிலிருந்து H-CI பிணைப்பு 17% அயனித்தன்மையும், 83% சகபிணைப்புத்தன்மையும் கொண்டது என்ற உண்மை அறியப்படுகிறது. சில முதன்மையான பிணைப்புகளின் அயனித்தன்மை விழுக்காடு அட்டவணை 2 இல் தரப்பட்டுள்ளது. அட்டவணை 2 பிணைப்புகளின் அயனித்தன்மை மூலக்கூறின் பெயர் ஹைட்ரஜன் ஹைட்ரஜன் ஃபுளுரைடு ஹைட்ரஜன் குளோரைடு ஹைட்ரஜன் புரோமைடு ஹைட்ரஜன் அயோடைடு குளோரின் ஃபுளுரைடு பொட்டாசியம் ஃபுளுரைடு பொட்டாசியம் அயோடைடு லித்தியம் ஹைட்ரைடு புரோமின் ஃபுளோரைடு அயோடின் மோனோ குளோரைடு ஃபுளுரின் அயனித் தன்மை% 0 41 17 12 5 11 83 63 77 15 6 0