உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 இருவாய்க்‌ குருவி

764 இருவாய்க் குருவி நிலைக்குச் செல்கின்றன. இவற்றிற்கு இடைநிலை அணைவு (activated complex) என்று பெயர். உயர் ஆற்றல் மட்டத்தில் இருப்பதால் இவை நிலைப்புத் தன்மை குறைந்தனவாக இருக்கும். இது நிலையற்ற தாகையால் சிதைந்து விளைபொருள்களைக் கொடுக் கிறது. வினைப்பொருள்கள் இடைநிலை அணைவு விளைப்பொருள்கள் வினைவேக மாறிலி = k, = N = அவோகாட்ரோ எண் h= பிளாங்க் மாறிலி k+ = RT k+ Nh இடைநிலை அணைவின் ஆக்க மாறிலி (formation constant of transition state). காண்க: வேதிவினைவேக இயல். அ. அப்துல் ஜமீல் Cars. Brescia, Frank, et. al., Fundamentals of Chemistry, Modern Introduction, Academic Press, New York, 1967; Glasstone, Samuel., Text Book of Physical Chemistry, Macmillan & Co. Ltd, London. Maron, Samuel H., and Prutton Carl F., Principle of Physical Chemistry, Amerind Publishing Co. Pvt. Ltd., New York. இருவாய்க் குருவி சற்று அருவெறுப்பான தோற்றமுடைய இருவாய்க் குருவி (hornbill) எனப்படும் பறவை மலை மொங் கான் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பெரிய வளைந்த அலகு குறிப்பிடத்தக்க அமைப்புடையது. அலகுக்கு மேல் தலைக்கவசம் (casque) போன்ற ஓர் அமைப்பு உள்ளது. இவ்வமைப்பு ஓர் அலகின் மேல் மற்றோர் அலகைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தது போல இருப்பதால் இது இருவாய்க் குருவி என்னும் பெயரைப் பெற்றது. இக்கவசம் பார்ப்பதற்குப் பெரியதாகத் தோன்றினாலும் காற்று நுண்ணறைகள் கொண்டுள்ளதால் எடை குறைவானதாகும். ஏறக்குறைய 45 சிறப்பினங்களைச் சேர்ந்த இரு வாய்ச் குருவிகள் ஆப்பிரிக்க, ஆசியப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காடுகள், புல்வெளிகள் லுள்ள மரங்களில் வாழ்கின்றன. இரவில் மான மரங்களில் நூறு முதல் இருநூறு குருவிகள் சேர்ந்து கூட்டமாகத் தங்கிப் பலவகையான ஒலி உயர களை உண்டாக்குகின்றன. 40 செ.மீ. அளவுள்ள டோக்கஸ் பொதுவினம் முதல் 160 செ.மீ. அளவுள்ள பெரிய இருவாய்க் குருவி (great hornbill) வரையுள்ள இவை அளவில் வேறுபடுகின்றன. இவை பெரிய தலையும், மெல்லிய குறுகலான கழுத்தும், அகன்ற சிறகுகளும், நீண்ட வாலும் உடையவை. பழுப்பு அல்லது கருநிற இறகுகளில் வெண்மையான குறிகள் காணப்படுவதுண்டு. அலகின் அடிப்பகுதி பெரிதா கவும் நுனிப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். அலகின் விளிம்புகள் அரம்போன்று கூர்மையான அமைப்பு களைப் பெற்றுள்ளன. காண்டாமிருக இருவாய்க் குருவியில் (rhinoceros hornbill), காண்டாமிருகத் தில் உள்ளது போலத் தலையின் முன்புறத்தில் கொம்பு போன்ற அமைப்பு ஒன்றுள்ளது. இரு வாய்க் குருவிகளின் கண் இமைகளில் இமைகளில் உறுதியான கரிய மயிர்கள் உள்ளன. இவை பழம், பூவிதழ் வண்டு, பூச்சி, ஓணான், வெட்டுக்கிளி, குளவி, எலி ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. இவை சிறகை விரைவாக இயக்கிப் பறந்து செல்கையில் நீராவி எந்திரத்தைப் போன்ற இரைச்சல் உண்டா கிறது. பொதுவாக இவற்றின் இனப்பெருக்க காலம் மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை ஆகும். இவை கூடுகட்டி அடைகாக்கும் முறை மிக வும் விந்தையானது. தரையில் வாழும பியூகார்வஸ் பொதுவினத்தைச் சார்ந்த இரு வகைகளைத் தவிர ஏனைய அனைத்து வகைகளும் மரப்பொந்துகளைத் தேர்ந்தெடுத்துக் கூடு கட்டுகின்றன. பெண் வையைப் பொந்தில் வைத்து ஆண்பறவை மூடிவிடு கிறது. ஆண் பறவை கொண்டு வரும் ஈரக்குழை வான மண்ணுடன் கழிவு எச்சம், முன்பே உண்டு பின்பு வெளிக்கொணரப்பட்ட உணவுப்பொருள் ஆகியவற்றைக் குழைத்து இக்கூடு மூடப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் கூடு பாறையைப் போல் உறுதியானது. இதில் பெண் குருவியின் அலகு நுழை வதற்கேற்றவாறு துளை ஒன்று அமைக்கப்படுகிறது. கூட்டினுள் பெண் குருவி, ஒன்றிலிருந்து ஐந்து வெண் ணிற முட்டைகளையிட்டு முப்பது முதல் ஐம்பது நாள்கள் வரை அடைகாக்கிறது. அடைகாக்கும் காலத்தில் கூட்டிலுள்ள துளையின் வழியாக ஆண் பறவை, கூட்டிலிருக்கும் பெண் குருவிக்கு உணவைத் தேடிக்கொண்டுவந்து ஊட்டுகிறது. பழங்களை விழுங்கிய ஆண் பறவை கூட்டை அடைந்தவுடன் தன் வாலை வளைத்து வாய்க்குள் செலுத்தி விழுங் கிய பழங்களை வெளிக்கொணர்ந்து அவற்றைப் பெண் பறவைக்கு அளிக்கிறது. முட்டைகள் பொரிந்து வெளிவந்த குஞ்சுகள் ஆறு வாரம் முதல் எட்டு வாரங்கள் வரை கூட்டுக்குள் இருக்கின்றன. சில சிறப்பினங்களில் குஞ்சுகளுக்கு இரை தேடித் தரவும் ஆண் பறவைக்கு உதவவும் குஞ்சுகளுக்கு முன்பே பெண் பறவை கூட்டுக்கு வெளியே வந்து விடுகிறது. மீண்டும் குஞ்சுகள் கூட்டை முன்பிருந் தது போல் கட்டிவிடுகின்றன. பின்பு துளை வழியே பற