உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 இரைச்சள்‌, கட்டடங்களில்‌

782 இரைச்சல், கட்டடங்களில் இவ்வாறாக ஓர் அறையின் இரைச்சல் உறிஞ்சு திறன் 4 என்ற காரணியாக உயர்த்தப்படும்போது, இரைச்சல் குறைப்பு ஏறத்தாழ 6 டெசிபில்களாக இருக்கும். (குறிப்பு: வெவ்வேறு அதிர்வெண்களுக் கேற்ப வெவ்வேறு இரைச்சல் குறைப்பு ஏற்படும். ஏனெனில், முழு இரைச்சல் குறைப்பு, அதிர்வெண் ணின் ஒரு சார்பு ஆகும்). ஓர் அறையில் ஒளி உறிஞ் சும் பொருள்களை அதிகரிக்கச் செய்யும்போது, அவ்வறையில், இரைச்சல் குறைப்பினைப் பொறுத் துக் கொள்ளக்கூடிய அளவிற்குப் பெற இயலுமென மேற்கண்ட சமன்பாடு புலப்படுத்துகின்றது. எனி னும், ஓர் அறையின் எல்லைகள் ஒலியினைக் கூடுத இரைச்சல் லாகச் சேர்த்தாலும் வினைப் பெற இயலாது. உயரமான கூரைகளை யுடைய அறைகளில், கூரையினை மட்டும் முறைப் படுத்தினால், நிறைவளிக்கக் கூடிய முடிவுகளைப் பெற இயலாது. ஏனெனில், எதிரொலிப்புகள் கடின மான சுவர்களிடையே நிலை நிறுத்தப்படுகின்றன. அவ்வாறான அறைகளில் சில ஒலி சார் முறைகளைப் (எடுத்துக்காட்டாக மரச்சட்டங்களின் மூலமாக பக்கச் சுவர்களுக்கு மட்டுமன்றிக் கூரைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். இரைச்சல் அளவைக் கட்டுப் படுத்துவது மட்டுமின்றி, ஒலி உறிஞ்சும் முறை வ. எண். 1. வரையறையள அறையின் அமைப்பு வானொலி, தொலைக்காட்சி யினைக் கூடுதலாக்குவதன் மூலம், சில நன்மைகளை யும் பெற இயலும், அவையாவன; எதிர் ஒலிக்கும் நேரம் குறைக்கப்படுதல்; இரைச்சலின் மூலத்தினைப் பரவாமல் ஓரிடத்திலேயே இருக்கச்செய்தல். ஏற்றுக் கொள்ளக்கூடிய இரைச்சலின் அளவுகள். கீழ்க்காணும் அட்டவணையில் சராசரியான இரைச்சல் அளவுகள் காற்றோட்ட முறைகளோடு கூடியுள்ள அறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மதிப்பீடுகள் திட்டங்கள் தீட்டுவதற்குப்பயனளிக் கின் றன. சான்றாக, மொத்த இரைச்சல் காப்பு ஓர் அறைக்கு எவ்வளவு மதிப்பீடு செய்ய இயலும் என்பதனை அறியலாம். இருப்பினும். அட்டவணையில் காட்டியுள்ளபடி குறைந்த இரைச் சலை உடைய அளவுகள் பணம் ஒரு காரணியாக இல்லாவிடில் மிகவும் பயன்படும். இப்பட்டியல் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையிலும், நடைமுறைக் கேற்ற வகையிலும் இணைந்து அமைந்து உள்ளது, சிலவிதமான அறைகளுக்கு இப்பட்டியல் காட்டப் பட்டுள்ள மதிப்பீடுகள் பொதுவாக நடைமுறையில் உள்ளன. காணப்படுவதைவிடக் குறைவாகவே பயன்படுத்தப்படாத அறைகளின் ஏற்றுக் கொள்ளக்கூடிய சராசரி இரைச்சல் அளவுகள். பதிவு செய்யுமிடங்களின் அறைகள் பரிந்துரை செய்யப்பட்ட அளவுகள் (டெசிபல்களில்) 25-30 2. இசை அறைகள் 30-35 3. ஒழுங்குமுறையான அரங்குகள் 30-35 4. மருத்துவமனைகள் 35-40 5. திரையரங்குகள், மண்டபங்கள் 33-40 6. கிறிஸ்துவ ஆலயங்கள் 35-40 7. தனி அறைகள், உணவகங்கள், வீடுகள் 35-45 8. வகுப்பறைகள், சொற்பொழிவு அறைகள் 35-40 9. மாநாட்டு அறைகள், சிறிய அலுவலகங்கள் 40-45 10. வழக்குமன்ற அறைகள் 40-45 11. தனியார் அலுவலகங்கள் 40-45 12. நூலகங்கள் 40-45 13. பெரிய பொது அலுவலகங்கள், வங்கிகள், பண்டசாலைகள் 45-55 14. உண்டிச்சாலைகள் 50-55