உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/897

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழைகளும்‌ இயல்புகளும்‌ 875

இவ்வடிவங்களை மூன்று கின்றன. முறையில் பெறு தாவரத்தின் வளர்ச்சியில் செல்லுலோசு வளரும் விதம் பொறுத்தும், மயிர் நூல்பை வடிவமுடைய தைக் (shape of the hair follice கொண்டும், விலங்கினங்களில் புரதப் பொருள்கள் உருவாதல் பொறுத்தும், துளையின் வடிவத்தைப் பொறுத்தும், அதன் வழியாகப் பிதிர்ந்த பட்டு நூலாக்கல் பொறுத்தும் அமையும். ஒத்த பரப்பு உயர் கோடு. ஒத்த பரப்பு உயர் கோடு (surface contour) என்பது, இழையின் பரப்பு அதன் அச்சுத் தண்டு வாக்கில் அமைந்துள் ளதைக குறிப்பிடுகிறது. ஒத்த பரப்பு உயர்கோடு வழுவழுப்பாக அல்லது சீரான பல்லமைப்புடன், கீற்றுவரி அமைப்புடன் அல்லது கரடுமுரடானதாக இருக்கும். இது ஆடைகளின் யாப்பிற்கும், தொடு உணர்வுக்கும் குறிப்பிடத்தக்கதாகும். சுதுக்கம். ஆடை மூலப் பொருள்களில் சுதுக்க நிலை காணப்படலாம். மூலக்கூறு சுதுக்க நெளி வாக மூலக்கூறு தொடர் வடிவம் பெறும். சுதுக்க இழை அலைகளாகவும், முறுக்கலாகவும் இழையின் போக்கில் இருக்கும். சுதுக்க நூல் அல்லது நூற் றல் ஆடைகளிலுள்ள நூலிழையின் இடைப் பின்னல் அல்லது கண்ணியிணைவதால் (inter looping) வளைவு ஏற்படும். இழைச் சுதுக்கம் (fiber crimp) இழையின் நீள வாக்கில் இருப்பதால் அலைகளாகவும், வளைவு களாகவும், முறுக்கியும், சுருள்களாகவும், சுருட்டை களாகவும் இருக்கும். ஒட்டுந்தன்மை, நீள்மீட்சி, சிராய்ப்பு எதிர்ப்பு, நீள்,பரு. சூடு ஆகியன இழைச் சுதுக்கத்தால் மிகும். இழைச்சுதுக்கத்தால் உறிஞ்சும் தன்மை உடலோடு ஒட்டுந்தன்மை அதிகமாகும். இழைச் சுதுக்கத்தால் மிளிர்வு குறைகின்றது. இழைகள் எந்திரச் சுதுக்கம், (mechanical crimp) இயற்கை அல்லது இயல்பு சுதுக்கம் (natural or inherent crimp) மறைசுதுக்கம் அல்லது இயல்பு சுதுக்கம் (latent or inherent crimp) ஆகிய வ வற்றில் ஏதேனும் ஒரு சுதுக்கத்தைப் பெற்றிருக்கும். இழைகளைக் குழல் உருளிகள் (flutted rollers) வழியாகச் செலுத்தித் திரிப்பதால் அல்லது ஒரு பக்கத்தைத் தட்டையாக்குவதால் இழைகளில் எந்திர முறுக்கு ஏற்படுகின்றது. இயற்கை அல்லது இயல்பு சுதுக்கம், பருத்தியிலும், கம்பளியிலும் ஏற்படுகின்றது. ஈருறுப்புச் (bi-component) செயற்கை இழையில் முழுமையாக ஏற்படாத நிலையில் மறை சுதுக்கம் உள்ளது. இதை வெப்பப் பதம் செய்யும் போதும், அதற்கான கரைசலுடன் பயன்படுத்தும் போதும் முற்றுப் பெற்ற ஆடைகளில் சுதுக்கங்கள் முழுமையாக ஏற்படுகின்றன. இழைகளும் இயல்புகளும் 873 இழைப் பாகங்கள். பட்டைத் தவிர உள்ள மற்ற இயற்கை இழைகள் மூன்று வெவ்வேறு பாகங் களைக் கொண்டுள்ளன. அவை புற உறை (outer Covering) (இது புறணி (cuticle) அல்லது தோல் எனப் படும்.) அகப்பரப்பு, உள்ளீடான மைய அகப் பரப்பு (hollow central core) என்பன. செயற்கை இழையில் இரு பாகங்கள் உள்ளன. அவை தோல், திண் - உள்ளகம் (solid core) என்பன. . வேதி உட்கூறுகள். இழைகளை, இழை இனத் தொகுப்பில் (generic group) உள்ள செல்லுலோஸ், புரதம், அக்ரிலிக் என வகைப்படுத்த இழையின் உட்கூறுகள் அவற்றின் அடிப்படையாக இருக்கும். மேலும் வேதி உட்கூறுகள் ஓர் இன இழைக்கும் மற்ற இன இழைக்கும் உள்ள வேற்றுமைக்குக் காரண மாகின்றன. சில இழைகள் வேதிச் சேர்மங் களாலும், சில இழைகளில் உள்ள வேறுவேறு வேதிச் சேர்மங்களாலும் தங்களுடைய மூலக்கூறு சங்கிலித் தொடரை ஈர்த்தவையாக உள்ளன. ஒற்றைப் பல்லுறுப்பிகள் (homo polymers) ஒரு பொருளைக் கொண்டுள்ள இழைகள். உடன் பல்லுறுப்பிகள் (co-polymers) இரு பொருள்களைக் கொண்டுள்ள இழைகள். ஈர்த்த பல்லுறுப்பிகள் (grafted polymers ) ஒரு மூலக்கூறிலுள்ள பக்கக் கிளைகள் அவற்றின் முது கெலும்புத் தொடருடன் சேர்ந்து, ஒரு திறந்த, கூட்ட மைப்புள்ள மூலக்கூறு சங்கிலியைக் கொடுக்கின்றன. இவை படிகத்தன்மை குறைவாக உள்ளவை. இவ் வகைப் பல்லுறுப்பிகளுக்கு வண்ணம் பெற்றுக் கொள்ளும் தன்மை அதிகரித்துள்ளது. சில இழைகளில் உள்ள மூலக்கூறுகள் வேதி வினைக்குட்படுகின்றன. சில செயலற்றவையாக இருக்கின்றன. ஒரு வேதிவினையில் செயலற்ற மூலக் கூறுகள், வேதிவினையில் செயல்படும் மூலக்கூறு களால் ஈர்க்கப்பட்டு, வேதிவினைக்குட்படும் தன்மை யைப் பெறுகின்றன. உள் கட்டமைப்பு அல்லது மூலக்கூறு அமைவு. இழைகள் பல மில்லியன் மூலக்கூற்றுத் தொடர் களைக் கொண்டுள்ளன. இழையிலுள்ள மூலக்கூறு சங்கிலியின் நீளம், இழையின் நீளத்திற்கு வேறுபடு கிறது. எனவே, இது பல்லுறுப்பாக்கப் படிநிலை (degree of polymerisation) எனப்படும். பல்லுறுப்புச் செயற்பாங்கு என்பது சிறிய ஒரே மூலக்கூறின் ஒன் றான கூட்டமைப்பேயாகும். அதிக மூலக்கூறு நீளம், அதிகப் பல்லுறுப்பாக்கப் படிநிலை என்பதையும், அதிக அளவு உறுதியுள்ள இழையாக இருக்குமென் பதையும் குறிக்கும். மூலக்கூற்றுத் தொடர் சில சமயங்களில் எடை யால் குறிக்கப்படும். மூலக்கூறு எடையைச் சார்ந்து