உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மருமக்கள்வழி மான்மியம்

என்னைப்,
பறைப்பயல் பள்ளப் பயலினும் கேடாய்
நினைத்துப் பேசின நீசன் அவனை 20
வாயில் மண்ணை வாரி யடித்து
வீட்டை விட்டு வெளியி லிறக்கின
அன்றைக்கு அல்லவோ ஆண்பிள்ளை யாவேன்?
என்று பற்பல இன்னும் சொல்லிக்
கோபா வேசம் கொண்டவ னானான். 25
கூட இருந்த குசும்பன் சாமி[1]
போதா தென்று புகையும் போட்டான்.
வீணாய்க் கதையை விரிப்பதேன்? அம்மா!
அப்பனும் மகனும் அண்டை வீட்டுக்
குசும்பன் சாமியும் குண்டுணிச் சுப்புவும் 30
கோட்டு மாடன் பிள்ளையும் கூடி
இரவு முழுதும் இருந்து, யோசனை
பலவும் செய்து, பலபல வென்று
விடியு முன்னம் விரைவா யெழுந்து,
பானையில் கிடந்த பழவோ லைகளும் 35
முறிப்பெட்டியிலுள்ள[2] முன்னோ லைகளும்
கைச்சீட்டுகளும் கடச்சீட்டுகளும்[3]
கைச்சாத் துகளும்[4] பொய்ச்சாத் துகளும்,


  1. 26. குசும்பன் சாமி: ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் சதா கோள் சொல்லிப் பகை மூட்டுவதையே தொழிலாகக் கொண்ட சாமி என்னுமொருவன்.
  2. 36. முறிப்பெட்டி - ஓலைப் பிரமாணங்களைக் காப்பாற்றி வைப்பதற்குரிய பெட்டி. முறி - ஓலைப் பிரமாணம்.
  3. 37. கடச்சீட்டு - கடன்சீட்டு.
  4. 38. கைச் சாத்து- ரசீது.