உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யத்திரைப் படலம்

117

வழக்கில் முதலை[1] வாரி யெறிந்தேன்;
கிழக்கு மேற்காய்க் கிடக்கின்றேன் இதோ!
என்ன செய்யலாம்? யாரை நோகலாம்?"
என்று இம் மொழிகள் இசைப்பது கேட்டு அவர் 70
கூடப் பிறந்து உயிர் கொள்ளும் வியாதிபோல்[2],
அருமை மதினி ஆங்கார வல்லி
காந்தாரி யம்மை கடுகி வந்தாள்.
மகனை நோக்கி, "மடையா, மூடா!
முருக்குத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே! 75
ஐயா[3] உன்னிடம் சொல்லி அனுப்பின
செய்திகள் என்ன? நீ செய்வதிங்கு என்ன?
நீயும்,
ஆண்பிள்ளை யோடா? அவலட் சணமே!
அத்தைமார் கூட அழஇருந் தனையோ? 80
அவர்,
கைவிஷம் கொடுத்துக் கணவனைக் கைவசம்
ஆக்க நினைத்த அரக்கிகள் அல்லவோ?
வருஷம் ஐந்தாய் வழக்கும் சண்டையும்
மூட்டி விட்ட முண்டைகள் அல்லவோ? 85
நினைத்த காரியம் நிமிஷம் முடிப்பரே!
மாய வல்லிகள் வலையில் நீயும்
விழுந்துவிட்டாயோ? வெட்கம்! வெட்கம்!
போதும் எழுந்திரு! போதும்! போதும்!


  1. 67. முதலை தன்கைப் பொருளை.
  2. 71. உடன் பிறந்தே கொல்லும் வியாதி' என்பது மூதுரை.
  3. 76. ஐயா அவளுடைய கணவன்; கேட்ட பையனுடைய தந்தை.