உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தர்க்கதம்

உள்ளடங்கியது. (சி. சி 1, 21 சிவாக்.)

அந்தர்க்கதம் பெ.

அந்தர்சநித்தகாரி பெ.

(மருத்.)

உடல்தாதுக்களின்

எரிச்சலைத் தணிக்கும் சரக்கு. (குண. 1 ப. 3)

அந்தர்த்தானம் பெ. மறைகை. அந்தர்த்தானமாய் நேர்ந்து போவார் (மச்சபு. பூருவ. 48, 31).

அந்தர்தர்பார் (அந்தரதர்பார்) பெ. முறைதவறி நடக் கும் ஆட்சி. (பே.வ.)

அந்தர்ப்பவி-த்தல் 11வி. உள்ளடங்கியிருத்தல். ஆன்மா பதி பதார்த்தத்தில் அந்தர்ப்பவிக்குமெனின் (சிவசம.

39).

அந்தர்ப்பூதம் பெ. உள்ளடங்கியது. முப்பத்தாறு தத்து வங்களும், இந்தச் சரீரத்தில் அந்தர்ப்பூதமாய் இருக்கிறபடியினால் (வாசுதே.ப. 203).

அந்தர்முகம் பெ. உள்நோக்குகை. (செ.ப. அக.)

அந்தர்யாமி பெ. ஆன்மாவின் உள்ளேயிருப்பவனாகிய கடவுள். உள்ளத்தில் உறையும் திருமேனி அந்தர் யாமி எனப்படும் (சிற். செந்.ப.152).

அந்தர்யாமித்துவம் பெ. திருமால் ஐந்து நிலையு ளொன்று. ஈசுவர ஈசுவர சுருபந்தான் பரத்வம் அந் தர்யாமித்வம் என்றஞ்சு பிரகாரத்தோடே கூடி யிருக்க (அட்டாதச. தத்வத். 3, 42).

அந்தர்வாகினி பெ. நிலத்துக்குக் கீழே போவதாகக் கருதும் ஆறு. சரசுவதி என்னும் அந்தர்வாகினி

(சமய வ.).

அந்தர்வேதி பெ. 1. யாகசாலையின் உள்ளிடம். அந் தர் வேதிக்கு உச்சமாய் (கச்சி. காஞ்சி. அந்தர். 22).

2. கங்கை யமுனைகட்கு இடையிலுள்ளதாகப் புரா

சென்று

ணத்தில்கூறப்பட்ட நாடு. அந்தர்வேதி உடன்கொணர்வாய் (கோயிற்பு. இரணிய. 107).

அந்தரக்கொட்டு பெ. கூத்துவகை. அந்தரக்கொட் டுடன் அடங்கிய பின்னர் (சிலப். 3, (சிலப். 3,147).

எண்

அந்தரகணம் பெ. (யாப்.) பாட்டியலுள் வரும் வகைக் கணங்களுள் ஒன்றாகிய நிரைநிரை நேர் என் னும் மூவசைச் சீர். முந்து நிரை இணைந்து நேர் இறுமூவசை அந்தர கணம் (பன்னிருபா. 117). அந்தர கணமே வாழ்நாள் அகற்றும் (இலக். வி. 800மேற்.).

அந்தரகந்தன் பெ. (மருத்) பாதரசம். (குண. 2 ப.

130)

213

அந்தரட்டிக்குருக்கள்

அந்தரகாந்தாரம் பெ. (இசை) சோடச சுரங்களுள் ஒன்று. (செ.ப. அக.)

அந்தரகாமி பெ. வான்வழியாய்ச் செல்வது. (முன்.)

அந்தரகுமரன் பெ. விண்ணகத்தே செல்லும் தேவ குமரன். மாநிலத் தியங்குகின்ற தியங்குகின்ற அந்தரகுமரன் அமர்ந்துநோக்கி (சீவக. 1264).

என்று

...

அந்தரங்கத்தானம் பெ. பிறப்புறுப்பு. (முன்.)

அந்தரங்கத்தியானி பெ. ஆமை. (வைத். விரி. அக. ப.

16)

அந்தரங்கபரிகரம் பெ. நம்பிக்கைக்குரிய

அந்தரங்கப்

பணியாட்கள். (திருவாய். 10, 1 ஈடு பிர. அரும்.)

மாக

அந்தரங்கம் பெ. 1. இரகசியம். அந்தரங்க அறிக்கையிட்டோம் (தெய்வச். விறலி. தூது 606). ஆரும் அறியாமல் எனை அந்தரங்கம் ஆகவந்து (தாயுமா. 44, 4). இன்பரச வல்லியிடத்து அந்தரங் கத்தே திரிந்தேன் ஆசையால் (கூளப்ப. விறலி. தூது 107). 2. உள்ளம். அந்தரங்கம் போலப் பழகு வார் (தெய்வச். விறலி. தூது 231). அவனுக்கு அந் தரங்கத்தில் விசுவாசம் உண்டு (பே.வ.). 3. உட் கருத்து. ஆத்தாளும் அங்குவந்து அந்தரங்கம் சொன்னாள் (போக. செனன. 108). 4. தனிமை. அந் தரங்கத்தில் அவன் எப்படி இருப்பானோ (பே.வ.).

அந்தரங்கன் பெ.

பெ. உற்ற நண்பன். (செ. ப. அக.)

அந்தரச்சிந்து பெ. கற்பாடாணம்.

16)

அந்தரசரிதர் பெ. வானத்தில்

(வைத். விரி. அக. ப.

உலவுவோர். அந்தர

சரிதர் கொண்டேகாமல் (பாரதம். 5, 1, 18).

அந்தரசாரி பெ. வானத்தில் செல்வோன். அந்தரசா ரிகள் அமர்ந்து இனிதுறையும் (மணிமே. 28,69).

அந்தரசைவம் பெ. சைவ மதத்தில் ஒரு வகை. (செ.

ப. அக.)

அந்தரஞானம் பெ. பூரண ஞானமல்லாது இடையீடுற்ற ஞானம். அந்தரஞானமெல்லாம் அவையோர் பொருள் என்னேல் (தேவா. 1, 104, 10).

அந்தரட்டிக்குருக்கள் பெ. கருமாதி செய்விக்கும் குருக்

கள்.

(செ.ப. அக.)