உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலம்பு+ - தல்

றானும் என்னும் சொல்லால் உணர்க (தக்க. 93 ப. உரை). ஆழி வடிம்பு அலம்ப நின்றானும் (நள வெ.1,119). அமுது செய்து கை அலம்ப வெளியில் இறங்கினர் (நாஞ். மரு. மான். 5,20).

அலம்பு - தல் 5வி. அசைதல், புரள்தல். செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் (சிலப். 28, 70). சடைக்கற்றை அலம்ப (தேவா. 4,113,5). குண்ட லம் அலம்பும் திண்டிறல் தோள் (கம்பரா. 5,3,78). நெஞ்சுளைந்து அலம்பினாலென அலம்பி ஆர்ப்ப வே (கச்சி. காஞ்சி. திருக்கண்: 228).

அலம்பு - தல் 5 வி. அலைத்தல். அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை (பெரியாழ். தி.4, 2,1).

அலம்பு - தல் 5 வி. கலத்தல். கஞ்சுகம். அலம்ப உளரே

(தக்க. 93).

அலம்பு7-தல் 5 வி. மூழ்குதல். ஆனே அலம்பு புனல் (சேந். திருவிசை. 2,9).

அலம்புடை பெ. மனித உடலில் இயங்கும் பத்துநாடி களுள் ஒன்று. தச நாடிகளாவன இடை பிங்கலை அலம்புடை என இவை (சிலப். 3, 26

சுழுமுனை அடியார்க்.).

...

அலம்புரி-தல்

4 வி.

மனநிறைவுண்டாகும்

வரை

கொடுத்தல். அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர் வேந்தன் (திருமங்கை, திருநெடுந்.6).

அலம்வா (வரு)-தல் 13 வி. 1. சுழலுதல். இறங்கு கதிர் அலம்வரு கழனி (புறநா. 98,19). ஆழ்த்த கந்து இளக யானை அலம்வருமே (சீவக. 2785). 2. மனம் கலங்குதல். வெறியோடு அலம்வரும் யாய் (ஐந்.ஐம். 20). அஞ்சுவை இவையென்று அவாவின் உள் அலம்வந்து அருந்துதல் ஒரீஇயினன் அடிசில் (செ. பாகவத. 11, 4, 18). அலம் வரு பரதன் (பாப்பா. பரிபா.1,18).

அலமரல் (அளமரல்) பெ. 1.சுழற்சி.

அலமரல்

தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல். சொல்.310 சேனா.). நிலமிசை வாழ்நர் அலமரல் தீர் (புறநா. 43, 1). அலமரல் வருத்தம் தீர (நற். 9,3). அலமரல் அசைவளி அலைப்ப (குறுந்.28). 2. மனச் சுழற்சி. அனைத்தையும் படைக்கும் அண்ணல் அலமரல் எய்தினானால் (செ. பாகவத. 10, 6, 15). 3. துக்கம். அலமரல்... துயர் துனி துன்பம் துக்கம் ஆம் (பிங். 1881). 4. அச்சம். அலமரல் ... வெம்மை அச்ச மாகும் (திவா. 1678)

...

41

அலமாப்பு

4).

அலமரு-தல் 13வி. 1. சுழலுதல். திருமுகத்து அல மரும் பெருமதர் மழைக்கண் (பதிற்றுப். 21,35). திருமுகத்து அலமருங்கண் நினைந்து (நற். 269, 6). பிறிதுமொரு பொய்கை தேர்ந்து அலமரும் பொழு தினான் (கலித். 78, 7). கருங்கேழ் உண்கண் கலக்க மொடலமர (பெருங். 1, 43,142). தேன் அவாவுறு. வண்டினம் அலமரச் சிதைத்தாள் (கம்பரா. 2,3,1). கண்களும் இவ்வாறு அலமரும் (அம்பி. கோ. அவுணர் உடலமது அலமர ... அயில் விட (திருப்பு. 215). விளரி வண்டினங்கள் அலமருங் கழனி (நைடத. 4, 10). 2. அசைதல், புரள்தல் ஆலைக்கு அலம் ரும் தீம்கழைக் கரும்பே (மலைபடு. 119). அரும் புனல் அலமரும் சடையினானை (புருடோ. திருவிசை. 1, 5). 3. மனம் கலங்குதல், கலக்கமடைதல். யாமத் தும் துயிலலள் அலமரும் என் தோழி (கலித். 45, 18). அலமரு திருமுகத்து ஆயிழை (சிலப். 23, 15). அலமராது அமருலகம் ஆள்வதற்கு (தேவா. 7, 34, 6). அன்பு கொள் மடப்பெடை அலமந்து ஆங்கு அகல்வதனை (சீவக. 648). பேதுற்று அலமருவேம் (கம்பரா. 3,2,31). ஆவாவென அழுது ஆங்கு அலமந்து (பாரத வெண். 612). அங்குருகு தாய் அல மந்து ஓடி வெம்பிடும் வெம்பிடும் (பெரியபு. திருநகரச்சி. 23). அலமரச் சிறகுதறி அணையும் (திருவிளை. பு. திருநகரச்சி, 12). 4. அஞ்சுதல். குலமுதற் கிழத்தி யாதலின் அலமந்து (சிலப். 23,13). 5.வருந்துதல். ஆக்கைக்கே இரைதேடி அலமந்து (தேவா. 5,90, 5). கொம்பரில்லாக் கொடி போல் அலமந்தனன் (திருவாச. 6,20). அருமணி இழந்தோர் நாகம் அல மருகின்றது ஒத்தாள் (சீவக. 1508). தன் கணவன் வஞ்சன் வலியின் போதலொடும் அலமந்தனள் (கம்பரா.3,1,38). அண்ணாந்து அலமந்து விளித் தாலும் (வேணா. திருவிசை. 7). செல்வத்தை இழந் தோம் என்று அலமரர் உள்ள மிகுதியை உடையார் (குறள். 593 மணக்.). ஆனசெயல் ஓரிரவும் சிந்தித்து அலமந்தே (பெரியபு. 9,30).

அலமல 1 - த்தல் 12 வி. கலங்குதல். அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே (குறுந். 43).

அலமல - த்தல் 12 வி. ஆசைப்படுதல். (வட்.வ.)

அலமலத்து-தல் 5 வி. கலக்கமுறச் செய்தல். சொற் சாதுரியமுடன் ஆளைப் பகட்டி அலமலத்தி (பஞ்ச திருமுக. 1366).

அலமாப்பு பெ. துன்பம். இவர்கள் படும் அலமாப்புக் காண்போம் என்று (திருப்பா. 12 மூவா.ப.172). அலமாப்பினில் பாரிவரு கூத்து (திருப்பு. 879).