உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரு2

உணரார் ... அருத் தரும்

அத்தரை (திருநூற்.15). 6. மாயை. அந்தக் கருவை அருவை (திருமந். 2647). அருவினில் உருவம் தோன்றி (சி. சி. 1, 27). 7. ஆன்மா, அரு நான்கும் ஆனாய் அறி (இயற். நான்முகன் திருவந். 5).

அரு2 பெ. அரிய. நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் (தொல். பொ. 109, 13 இளம்.). அருவிடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி (குறிஞ்சிப். 212). அருமறை ஆகமம் அங்கம் (சி. சி. 5),

அரு3 பெ. அட்டை என்னும் நீர்வாழ் உயிர். இருநிலம் தீண்டா அரு (தொல். பொ. 71 இளம்.).

அரு பெ. புண். (நாநார்த்த.639)

அருக பெ. 1. நுட்ப அறிவு. (அரும். நி. 446) 2. நுண்மை அணு. (முன்.)

அரு' பெ. குன்றிக்கொடி. (மரஇன. தொ.)

அருக்கஞ்சட்டி (அரிக்கஞ்சட்டி, அரிக்கண்சட்டி, அரிக்கன்சட்டி, அரிக்குஞ்சட்டி, அருக்கன்சட்டி) பெ. அரிசி களைவதற்குப் பயன்படும் விளிம்பு வைத்த வாயகன்ற உலோகப் பாத்திரம். (செ.ப.அக.)

அருக்கணம் பெ. கடலைச்செடி. (மரஇன. தொ.)

அருக்கநாள் பெ. ஞாயிற்றுக் கிழமை. (சோதிட வ.)

அருக்கப்பிரமாணம் பெ. பகற்பொழுது. (செ. ப. அக. அனு.)

அருக்கம்1 பெ. சுருக்கம். அருக்கமாய்ப் பெருக்கமாகி (தேவா. 4,32,7).

4

அருக்கம்' (அருக்கன், அருக்கு11) பெ. எருக்கு. அருக்க வெண்பஞ்சு போல (அருணா. பு. 3, 59). தோட்டருக்கம் தண்ணந்தெரியலார் (சிங் ஒலே. 15). பிணிப்பனியை ஓட்டுதலால் அருக்கம் அருக்கன் எனலாம் (தேரையர்வெண். 27).

...

அருக்கம்' பெ. செம்பு. (நாநார்த்த. 674)

4

அருக்கம் ' பெ. பளிங்கு. (முன்.)

அருக்கம்" பெ. சுக்கு. (செ. ப. அக. அனு.)

3

61

அருக்கள் *

அருக்கர்1 பெ. அறிவு குறைந்தவர். செல்வன்பால் செல்லும் செல்வுஇல் அருக்கரை (திருமாளி. திருவிசை.

4, 7).

அருக்கர் 2 பெ. கதிர்க்கடவுள், சூரியன். வாம்பரி அருக்கர்தாம் பன்னிருவரும் (பட்டினத்துப். திருவிடை. மும். 28, 22). திருக்காமக் கோட்டந் திகழ்வித்து அருக்கர் (குலோத். உலா 112). காயும் அருக்கர் இர தம் (திருவாரூருலா 107). சோதியால் திரண்ட அருக் கர் போல் தோன்றி (திருவிளை. பு. 46, 2).

அருக்கர்' பெ. எருக்கம்பூ. அறுகு இதழி அருக்கரை (கல்வளை அந். 55).

அருக்கராகம் பெ. சூரியன் போன்ற செம்மை நிறம். திரணாசனனார்தம் அருக்கராகம் அரக்கஉரு ஒழித்த அம்மான் (திருப்பூவண. உலா 19).

அருக்கவிக்கேபம் பெ. சூரியனுடைய குறுக்குக் கோடு, அருக்கவிட்சேபம். (வின்.)

அருக்களி-த்தல் 11 வி. பயப்படுதல். (முன்.)

அருக்களி 2 -த்தல் 11 வி. அருவருத்தல். (நாட். வ.)

அருக்களிப்பு பெ.அருவருப்பு. (முன்.)

அருக்கன் 1 பெ. 1. சூரியன். அருக்கன் அணிநிறமும் கண்டேன் (இயற். மூன்றாம் திருவந். 1). அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் (தேவா. 5. 100,8). அருக்கன் எயிறு பறித்தல் பாடி (திருவாச.9,18). ஆழியின் நடுவண் தோன்றும் அருக்கனே அனை யன் (கம்பரா. 5, 8, 16). அன்று அருக்கனைப் பல் இறுத்து (சேதிரா. திருவிசை. 9). அயன் தலையறுத் தல் பாடி அருக்கனை அடர்த்தல் பாடி (திருவால பு.56,9). அந்தரம் அறுத்தொளிர் அருக்கனும் ஒளிப்ப (செ. பாகவத. 4, 2, 49). அடியார்கள் சிந்தை முளரிக்கு அருக்கன் (கருவைப்பதிற். அந். 54). 2.சூரிய குலத்தனாகிய சோழன். சூரனாம் அருக்கன் பணிந் ததும் (செவ்வந்திப்பு. 1, 54 உரை).

அருக்கன் 2 பெ. இந்திரன். (நாநார்த்த. 674) சாரும் அனல் உரும் அருக்கன் துயர் தீர்த்து (திண்ண. அந். 88).

அருக்கன் 3 பெ. தமையன். (முன்.)

அருக்கன் * (அருக்கம்', அருக்கு!1) பெ. எருக்கு. (மரஇன. தொ.)