உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனத்து - தல்

அனத்து-தல் 5 வி. நோயால் முனகுதல். சேர்ந்து களை வெட்டையிலே அகழுக்குள்ளே நின்னுக்கிட்டு அனத்துதம்மா கொம்பானை (மலைய. ப. 32). காய்ச் சலில் அனத்துகிறான் (நாட். வ.).

அனத்துச்சீவன் பெ. ஆனைச் செவியடிப்பூடு. (மரஇன.

தொ.)

அனதிகாரி

பெ. (அன்+அதிகாரி) உரிமை பெறாத வன். மேல்வினை கூடாது அனதிகாரி யாதலினால் (வேதா. சூ. 162)

அனந்தகம் பெ. குப்பைமேனிச்செடி. (மரஇன. தொ.)

அனந்தசத்தி பெ. (இறைவன் எண்குணங்களிலொன் றாகிய) வரம்பிலாற்றல். சுதந்திருதை குறையா மல் வளர்சக்தி அனந்தசத்தி (கூர்மபு. உத்தர. 8, 6).

அனந்தசதுட்டயம் பெ. (சைனம்) அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அனந்த சுகம் என்னும் நான்கு குணங்கள். பெற்ற பயன் அனந்த சதுட்டயங்கள் (சீவக. 2846 நச்.). அனந்த சதுட் டயம் அவை எய்த (யாப். வி.13 மேற்.).

பூசித்தற்குரிய

அனந்தசதுர்த்தசி பெ. திருமாலைப் சுக்கிலபட்சச் சதுர்த்தசிநாள். (செ . ப . அக.)

ஆதிசேடனாகிய படுக்கை.

அனந்தசயனம் பெ. 1.

ஏகநாயகி அனந்தசயனத்து இனிது இருந்தருளியே (தக்க. 167). அனந்தசயனத்தெம் மாயனை

கனை

அரங் வணங்கி (திருவரங். கலம். 13). அனந்த சயனத்தலத்தை யானறிந்து கொள்ளேனோ (கூளப்ப.

காதல்

210). 2. நாகணைப்பள்ளியில் எழுந்தருளி யுள்ள திருமாலின் கோயிலுள்ள திருவனந்தபுரம். சீதரன் மால் அனந்தசயனத்தாதி பத மலரிற் சிந்தைசேர்த்தி (அரிசமய. 13, 50). அனந்தன் மிசைத் துயில்வானை அனந்த சயனத்து இறைஞ்சி (சீவல.

கதை 827).

அனந்தசயனன் பெ.

(ஆதிசேடன்மேல் அறிதுயில் கொள்வோனாகிய) திருமால். ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் (பெரியாழ். தி. 1, 8,2).

அனந்தசாயி (அநந்தசாயி) பெ. அனந்தசயனன். கருநிறத்தன் அனந்தசாயி இளவலோடு கடுகினான் (பாரதம். 7, 5, 8).

53

2

அனந்தம் 1

அனந்தசுகம் பெ. 1. ( சைனம்) நிறைவான இன்பம். இன்பநிறை கடல்-அனந்த சுகம் (சீவக. 375 நச்.). 2. இறைவன் குணங்களுள் ஒன்றான முடிவற்ற இன் பம். அனந்த ஞானம் அனந்தசுகம் (முன். 3082 நச் ).

அனந்தஞானம் பெ.

...

(சைனம்) இறைவன் குணங்க ளுள் ஒன்றான முடிவில்லா அறிவு. (முன். 2846 நச்.)

அனந்தஞானி பெ. 1. அருகன். நிரம்பரன் அனந்த

ஞானி தீர்த்தன்

...

.

(சூடா. நி. 1, 4). 2.கடவுள்.

(கதிரை. அக.) 3. பார்வதி. (முன்.)

அனந்ததரிசனம் பெ. (சைனம்) இறைவன் குணங்களுள் ஒன்றான முடிவிலாக் காட்சி. (சீவக. 2846 நச்.)

அனந்ததேவன் பெ. (தத்துவம்) அசுத்தமாயையைக் கலக்கிச் செயற்படுத்தும் சிவமூர்த்தி. அனந்ததேவன்... உபாதான மாயைதனைக் கலக்கும்

சத்திகளால்

...

(சிவப்பிர. விகா. 188).

அனந்தநாதன்1 பெ. உழைமண். (ராட். அக.)

அனந்தநாதன் 2 பெ. (முடிவற்ற அறிவுடைய) இறை வன். (கதிரை. அக.)

...

அனந்தநாள் பெ. பலநாள். கூடல் சங்கமத்துள் அனந்த நாள் இருப்போம் (வசவபு. திருவவ. 54).

அனந்தநான்மை பெ. (சைனம்) இறைவன் நாற்குணங் கள், அனந்த சதுட்டயம். ஆடெழில் தோளினாய் அனந்த நான்மையே (சீவக. 2846).

அனந்தபத்மநாபன் பெ. திருவனந்தபுரத்தில் வீற்றிருக் கும் திருமால். (வைண.வ.)

அனந்தபீதம் பெ. மருக்கொழுந்து. (பச்சிலை. அக.)

அனந்தபுரம் பெ. திருவனந்தபுரம் என்னும் வைணவத் தலம். தடமுடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே (திருவாய். 10, 2, 1). திசைமுகத்தான் போற்றும் அனந்தபுரம் எந்தைபிரான் துயில்கூரும் அனந்தபுரத்தினை யணைந்தார் (சீவல. கதை 826).

நூற்று.

அந் 59).

அனந்தம் (அநந்தம்) பெ. 1. முடிவு இன்மை. ஆதி அந்தம் அனந்தம்.. வானவர்தம்பிரான் (பெருமாள்தி.