உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாரிச்சி

அதிகாரிச்சி பெ. 1. அதிகாரியின் மனைவி. திரை லோக்கியமுடையார் அதிகாரிச்சி முத்தான் பொன்னங்கை சாத்தி அருள (தெ.இ.க. 5,512). 2. அரசாங்கப் பதவி வகிக்கும் பெண். அதிகாரிச்சி சோமயன் அமித்திரவல்லியும் (தெ.இ.க. 5,520).

அதிகாரிசோடி பெ. அரசு அலுவலர்க்காக வசூலிக்கப் பெறும் வரி. சிவிதம் அதிகாரிசோடி கரணிக்கர் சோடி ஓலை எழுத்து வந்தனை (தெ.இ.க.8,

293).

அதிகாலங்காரம் (அதிகவலங்காரம்) பெ. (அணி) பெருமையணி. (அணி. 41)

அதிகாலம் (அதிகாலை) பெ. 1. விடியற் காலம். அத்தினங் கழிந்தமற்றை அதிகாலந் தன்னில் (மச்சபு. பூருவ.69,18). 2. நெடுநேரம். (சாம்ப. அக.)

அதிகாலை (அதிகாலம்) பெ. விடியும் நேரம். அதி காலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது (பழமொழி). அதிகாலை விழிப்பின் குணத்தைக் காண் (பதார்த்த. 1309) அதிகாலை எங்கள் வழி பாடியற்றி அரிதாள் வணங்க வணங்க மறவாய் (காந்தி காதை. 1, 4, 108).

அதிகிருச்சிரம் பெ. பன்னிரண்டு நாட்கள் கடைப்பிடிக்கும் ஒரு நோன்பு. (செ. ப. அக.)

அதிகுகம் பெ.

பேராமல்லி. (சாம்ப. அக.)

அதிகுணம் பெ. மேலான குணம். அதிகுணம் நல்ல நல்ல (தேவா. 2,85,4).

அதிகுணன் பெ. 1. மேலான

குணமுள்ளவன். களிறது பிளிறிட உரிசெய்த அதிகுணன் (தேவா. 1,22,5). 2.அருகன். அதிகுணன் அருகற்கின் னும் அநந்தம் பெயரே (திவா. 11). 3. கடவுள்.

(செ.ப. அக )

...

அதிகும்பை பெ. கரிசலாங்கண்ணி. (மலை அக.)

அதிகை பெ. அட்டவீரட்டங்களுள் திரிபுரசம்மாரம் நடந்ததும் அப்பருக்கு அருள்புரிந்ததுமாகிய ஊர். அதிகைக் கெடில வீரட்டானத் துறை அம்மானே (தேவா. 4,1,1). விரிபுனல் சூழ் திருவதிகை வீரட் டானத்து அமுதை (பெரியபு. 21, 144).

அதிகோரம் 1 பெ. 1. நரகங்களுள் ஒன்று. கோரம். அதன்முன் அதி கூட்டிக் கூறின் மூன்றாம் நரகம் (சிவதரு.7, 107). 2. மிகுந்த கொடுமை. (பே.வ.)

1

97

அதிசயம் 2

அதிகோரம்' பெ. நெல்லி. (செ.ப.அக.அனு.)

அதிகோலம் (அதிகோவம்) பெ. அழிஞ்சில். (செ.ப.

அக.)

அதிகோவம் (அதிகோலம்) பெ. அழிஞ்சில். (மரஇன.

தொ.)

அதிங்கம்' (அதிங்கு) பெ.

கவளங் கொண்டால்

அதிமதுரம். அதிங்கத்தின்

(சீவக. 750).

அதிங்கம்' பெ. குன்றி. (மரஇன.தொ.)

அதிங்கு (அதிங்கம்') பெ. அதிமதுரம். அரக்கும் அதிங்கும் அரும்பெறற் பயினும் (பெருங். 2,18,46).

அதிச்சத்திரம் பெ. காளான். (மலை அக.)

அதிசங்கலிதம் பெ. ஒன்று

முதலிய

எண்களை

இரட்டித்துப் பெருக்க வரும் தொடரெண். (வின்.)

அதிசங்கை பெ. வீண் சந்தேகம். இளைய

பெரு

மாளைச் சீ குகப் பெருமாள் அதிசங்கை பண்ண

(சிரீவசன. 251).

அதிசந்தானம் பெ. பொய். (யாழ். அக. அனு.)

அதிசநசி (அதிசனசி) பெ. கொடிவேலி என்னும் குற்றுச்செடி. (சங். அக.)

அதிசயச் சொல் பெ. வியப்பாகப் பேசுகை. (செ.ப.

அக.)

அதிசயம்1 பெ. வியப்பு. சிற்றம்பலத்தே அதிசயம் பொலிய நின்று (தேவா. 4, 22, 11). அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண் டாமே (திருவாச. 26, 4). மழலைத்தும்பி அதிசயம் எய்திப் புக்கு வீழ்ந்தன (கம்பரா. 1,16,9). அதி சயம் இதுவென அலர நக்கனன் (சூளா.1381). அவர் பயத்தினுடன் அதிசயமும் தாங்கு மகிழ்ச்சி யும் (பெரியபு.29,254).

அதிசயம்2

பெ. 1.(சைனம்) சகசாதிசயம், கர்மட் சயாதிசயம், தெய்வீகாதிசயம் என்னும் மூவகை மேன் மைகள். கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் (சீவக. 2813). 2. சிறப்பு. பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை (சிலப். 10,162). ஆடல் அதி சயத்தை ஆங்கு அறிந்து (பூந். திருவிசை. 2,10). அருளும் அதிசயம் ஆன்றோர் வியப்பது (வீரசோ.

165).