உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயம்'

அதிசயம்' பெ. (அணி.) வியப்பு என்னும் அணி வகை. அற்புதம் சிலேடை அதிசயம் விரோதம் (தண்டி. 33).

அதிசயம் + பெ. யாக்கையின் பதினெண் குற்றங்களுள் ஒன்று. அதிசயம் மாயா யாக்கைக்குப் பதி னெண் குற்றம் (பிங். 447).

அதிசயமாலை பெ. அம்பலவாணதேசிகர் செய்த திரு வாவடுதுறைப் பண்டார சாத்திரத் தொன்றாகிய நூல். அதிசயமாலை அருள் எழுபானாறும் (அதிசயமாலை வெண்பா).

அதிசயமொழி அத்தோ, அந்தோ

பெ. வியப்புச்சொல். ஆஅ, ஓஒ, அதிசய மொழி (பிங். 2104).

...

அதிசயவுவமை பெ. (அணி) மிகையுவமை. (வீரசோ.

155 உரை)

அதிசயன் பெ. அருகன். அதிசயன் னும் அனந்தம் பெயரே (திவா.11).

...

அருகற்கின்

அதிசயி-த்தல் 11 வி. வியத்தல். அன்னப்பேடை அதிசயிக்கும் (நந்திக்கலம். 25). அலமந்தேங்கி அதி சயித்து (கந்தபு. 6,8,31). பேரிளம் பெண்ணீ தனைப் பேதைப் பருவத்தே யாரும் அதிசயிப்ப (மதுரைச் உலா 170).

அதிசயோக்தி பெ. (அணி) உயர்வு நவிற்சியணி. (அணி. 13)

அதிசரம்' பெ. நெட்டுயிர்ப்பு. (சங். அக.)

அதிசரம்' பெ. நிலைபெற்றது. (முன்.)

அதிசரி-த்தல் 11 வி. கடந்து போதல். கிரகங்கள் அதி சரித்து வக்கிரிக்கின்றன (வின்.).

அதிசனசி (அதிசநசி) பெ. கொடிவேலி என்னும் குற்றுச்செடி. (மரஇன. தொ.)

அதிசாகரம் பெ. ஒரு தமிழ்க் கணக்கு நூல். (கணக் கதி. பாயி.)

அதிசாமியை பெ. வெண்குன்றிச் செடி. (சங். அக.)

அதிசாரசன்னி பெ. சன்னிவகை, (செ. ப. அக.)

அதிசாரசுரம் பெ. சுரவகை. அதிசார சுரநோய் எல் லாம் ஓடும் (போகர் 700, 357).

...

19

28

அதிசாரணம் பெ. மாவிலிங்கம்.

14)

அதிசூரன் 1

(வைத். விரி. அக. ப

அதிசாரபேதி பெ. சீரணக் குறைவால் அடிக்கடி வரும் பேதி. (செ.ப. அக.)

அதிசாரம்1 பெ. பேதிவகை. குன்ம மதிசார

வெப்

புக் கொடுஞ் சூலை (சிவாநந்த மாலை/ சங். அக.) நாவல் வித்தும் புளியம் நாக்கும் ... மோரில் அரைத்துக் குடிப்பீரேல் மன்னா அதிசாரமே (தேரை. வாகட

439).

அதிசாரம்" பெ. அதிமதுரம். (இராசவைத். செ.ப.அக.) அதிசாரம்' பெ. மிகச் சிறிய ஒரு பின்ன எண். (நான். பாவ.)

அதிசாரம் பெ.1 கிரகங்களின் வழக்கத்திற்கு அதிகமான நடை. (செ. ப. அக.) 2. சூரியன் சந்திரன் என்னும் கோள்கள் தவிர மற்றைக் கிரகங்கள் வலமாகச் செல்கை. (சோதிட சிகா. ப. 78)

அதிசாரம் பெ. கல்லுப்பு.

(வைத். விரி. அக.ப.16)

அதிசாரவக்கிரம் பெ. கிரகம் வேகமாய்ப் பின் திரும்புகை.

(விதான.கோசா. 15 உரை/செ. ப. அக).

அதிசீக்கிரம் பெ. மிக்க விரைவு.

மிக்க விரைவு. அதிசீக்கிரம் வீட்

டுக்கு வந்துவிடு (நாட்.வ.).

அதிசீதம்1 பெ. மிக்க குளிர்ச்சி. அதிசீதமண்டலம்

(அருகிய வ.)

அதிசீதம்' பெ. நரகங்களுள் ஒன்று. (சிவதரு. 7,112) அதிசுட்கம் பெ. வயிற்றுத் தீயின் (சமாக்கினியின்) குறைவால் உடம்பு மெலிவடையச் செய்யும் நோய். (சாம்ப. அக.)

அதிசுரம் பெ.

கடுங்காய்ச்சல். (முன்.)

அதிசுழுத்தி பெ.

(சமய வ.)

மயக்கத்தோடு

கூடிய

தூக்கம்.

அதிசூக்குமதேகம் பெ. பூதம் தன்மாத்திரை ஞானேந் திரியம் கன்மேந்திரியம் அந்தக்கரணம் குணம் மூலப் பகுதி கலாதி என்பவற்றில் ஒவ்வொன்று கொண்ட நுண்ணுடல். (சி. போ. பா. 2,3 ப.194)

அதிசூக்குமம் பெ. மிக நுண்ணியது. (சி.போ.பா. 2,3) அதிசூரன் 1 பெ. சிவன் அடியரான ஏனாதி நாதரை வஞ்சனையாற் கொன்றவன். புலியேறு அன்னவர்தம்