உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மாம்பச்சரிசி

அம்மாம்பச்சரிசி (அம்மான் பச்சரிசி) பெ. பாலுடைய சிறுபூண்டு. (மரஇன. தொ.)

அம்மாமி பெ. 1. மாமன் மனைவி, கணவன் தாய். அம்மாமி தன் வீவும் கேட்டாயோ தோழி (சிலப். 29, 5). 2. அந்தணர் பிற பெண்டிரைக் குறிப்பிடும் சொல். அடுத்த வீட்டு அம்மாமி வந்தார் (பே.வ.). 3. பழமைவிரும்பி. சரியான அம்மாமி இவள்

(முன்.).

அம்மாய் பெ. (அம்மா + ஆய்) தாயைப் பெற்ற தாய். (முன்.)

அம்மாயி பெ. தாயைப் பெற்ற தாய். (முன்.)

அம்மார் பெ. கப்பற் கயிறு. (செ.ப.அக.)

அம்மாரம் பெ. அலரிச்செடி. (பச்சிலை. அக.)

அம்மாலைத்தேவர் பெ. கள்ளர்குலத்துப் ஒன்று. (கள்ளர் சரித்.ப.96)

பட்டங்களுள்

அம்மாள்! பெ. 1. தாய். என் அம்மாளைக் கூப்பிடு கிறேன் (பே. வ.). 2. பொதுவாகப் பெண்களின் பெயர் இறுதியில் சேர்த்து மரியாதையோடு சொல்லும் சொல். செல்லத்தம்மாள் (முன்.). 3. தாய் போல மதிக்கப்படுபவள். ஒவ்வொரு பெண்ணையும் என் அம்மாளாக மதிப்பேன் (முன்.). 4. பார்வதி.

(சேந். செந்.20)

அம்மாள்' பெ. வடகலை வைணவ ஆசாரியருள் ஒருவரும் வேதாந்த தேசிகரின் ஆசாரியருமான நடாதூரம்மாள். அம்மாள் அந்தத் திருமொழியை மீளா ஐயர்க்கு அறிவுறுத்த (திவ்விய சூரி. 29,14).

தந்தையாகும்)

அம்மான்1 பெ. 1. (உயிர்களுக்குத் கடவுள். அம்மானுக்கு ஆட்பட்ட அன்பு (காரை. இரட்டை. 16). ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே (தேவா. 7, 39,1). ஆழியங்கைக் கருமேனி அம்மான் (திருவாய். 5, 1,6). அருளிட வேண்டும் அம்மான் போற்றி (திருவாச. 4, 168), 2.தந்தை. மலரோன் அம்மானும் அருத்தியன் ஆயினனால் (கம்பரா. 3, 8,50). 3. தலைவன். அம்மானுக்கு ஆளானேன் அலையேன்மின் நீர் (பெரியபு. 21,423).

அம்மான்2 பெ. 1. தாய்மாமன். மாதுலன் அம்மான் மாமன் பெயரே (பிங், 908). வடத்தின் இலையில் துயின்றானை அம்மான் ... எனும்குமரா (திருவிரிஞ்.