உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அருங்கலம் +

அருங்கலம் + பெ. சங்கு, தனு, தண்டு, வாள், ஒளிவிடும் மணி (இரத்தினம்) ஆகியவை. தோன்றல்பால் அருங்கலம் ஒழிந்தவும் அடைந்த என்பவே (சூளா.

1501).

அருங்கலம் 5 பெ. மங்கல அணியான தாலி. அருங் கலம் பூட்டும் தகுதி (கப்பற்கோ.81).

G

அருங்கலம் பெ. அணிபோலிருப்பது, அழகுசெய்யும் பொருள். பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை (தேவா. 4, 11, 2), மன்னருள் பிறந்த மக்களுள் அருங்கலம் (பெருங். 1,36,25).

அருங்கலம் பெ. பவழம், முத்து முதலிய அரியமணி கள். விஞ்சையர் விமானம் தோற்ற மேல் அருங் கலங்கள் ஏற்றி (சூளா. 678).

அருஙகலம்பூட்டு-தல் 5வி. தாலிபூட்டுதல். சான் றோரை முன்னிட்டு அருங்கலம்பூட்டும் தகுதி (கப்பற்கோ.81).

அருங்கலவுயர்வு பெ. மாணிக்கச் சிறப்புரைப்பதாகிய உயர்வு உவமைவகைகளுள் ஒன்று. (வீரசோ. 157 உரை)

அருங்கலைநாயகன் பெ. புத்தன். அண்ணல் வாமன் அருங்கலைநாயகன் (திவா. 12).

அருங்கலைவினோதன் பெ. அரிய கலையாராய்ச்சியே பொழுதுபோக்காக உள்ளவன். அருங்கலை வினோ தன் அமராபரணன் (நன். சிறப்புப்.).

அருங்கவி பெ. 1. மாலைமாற்று முதலிய கவி.(யாப். வி. 96 உரை) 2. மாலைமாற்று முதலிய அருங்கவி பாடும் சித்திரகவி. (முன்.)

அருங்காட்சியகம் பெ. கிடைத்தற்கரிய பொருள்களைக் காட்சிக்கு வைத்திருக்கும் இடம். (செய்தி.வ.)

அருங்காவல் பெ. கடுஞ்சிறை. (செ.ப.அக.)

அருங்கிடை பெ. 1. கடும் பட்டினி. (நாட். வ.). 2. நோயால் படுத்த படுக்கையாயிருக்கை. (பே.வ.)

அருங்கு பெ. அருமை. உறல் அருங்கு உண்மையின் (தொல். பொ. 146, 35 நச்.).

அருங்கோடை பெ. 1. கடும் வெயிற் காலம். (நாட்,வ.) 2. வறட்சிக் காலம்.

(all cir.)

அருங்கோலம் பெ. அழிஞ்சி. (வாகட அக.)

56

அருச்சி-த்தல்

அருங்கோவை பெ. அப்பைக் கோவைக்கொடி. (மர இன. தொ.)

அருச்சகன் (அர்ச்சகன்) பெ. கோயில் பூசை செய் வோன். ஆதி சைவனாம் அருச்சகன் ஒருவன் (திரு விளை.பு.58,25). பஞ்சராத்திர மந்திரத்துண்மை பயிலும் நீதியருச்சகர் (குருகூர். பவனி. 11).

அருச்சந்தம் ! பெ. பித்தளை. (புதுவை வ.) அருச்சந்தம் 2 பெ. செம்பு. (ராட். அக.)

அருச்சன் பெ. பெரு ஏலம். (வாகட அக.)

அருச்சனம்1 பெ.

நெல்வகை. (பறாளைப்பள்ளு 23)

வழிபாடு. (சேந். செந்.38)

அருச்சனம் பெ. வழிபாடு.

அருச்சனம்3 பெ. எருக்கு. (மரஇன. தொ.)

அருச்சனாவிதி பெ. தெய்வத்தைப் பூசிப்பதற்கான விதி. அருச்சனாவிதியொடு தெரிச்ச ஆகமத்தொழில் (மெய்க். சோழர் 2,90)

அருச்சனை (அர்ச்சனை, அரிச்சனை) பெ. வழிபாடு, பூசை. அரா அந்தாணத்து அருச்சனைக் கம்பலும் (பெருங்.2,2,138). பாங்குடைய எழில் அங்கி அருச் சனை முன்விரும்ப (தேவா. 6, 88, 5). கமலச்சரண் அருச்சனை செய்து (கம்பரா. 1, 6,6). அருச்சனை வயலுள் அன்பு வித்திட்டு (திருவாச. 3,93). அருச் சனை புரிய ஆதரித்தாள் பெண்ணின் நல்லவள் (பெரியபு. 19,51). அருட்குறி நிறுவி அருச்சனை செய்த (கல்லாடம் 12, 17). அத்தமலர் இட்டு அருச் சனை புரிந்தாள் (இரகு. தேனுவ. 20). அடியிணை அருச்சனைக் காகும் கடிமலர் (மனோன்மணீ. 1, 1, 3). அருச்சனைப்பாகம் பெ. வழிபடும் முறைக்குக் கொடுக் கும் மானியம். (கல்வெட்டு)

அருச்சனைப்புல் பெ. தருப்பைப்புல். (குண. 1 ப.359) அருச்சனைவடிவு பெ. வழிபாட்டுக்குரிய மூர்த்தி வடி வம். இந்திரைவாழ் மார்பன் அருச்சனை வடிவிற் கெல்லாம் தமிழ இனிது உரைத்தி என்றான் (அரிசமய. 4, 47).

அருச்சி -த்தல் 11 வி. 1. (பொதுவாக) வழிபடுதல். ஐ அமர் அடுகென அருச்சிப்போரும் (பரிபா. 8, 108). அண்ணலங் கோமகன் அருச்சித்தாயிடை (சூளா.213). மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள் வணங்கி (பெரியபு. 28, 412). வேதம் அருச் சித்துக் காப்பு அமைத்த திருவாயில் (ஆச்சா.பு. கந்தமாதனத்தில் அருச்சித்து ஏத்தும்

10, 112).

100