உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறைவீடு

அறைவீடு பெ. 1.அறை. (வின்.) 2. மகப்பேற்றறை. (சாம்ப. அக.) 3. 3.சமையலுக்கான பலசரக்கு வைக்கும் உள்ளறை. அஞ்சறைப்பெட்டி அறைவீட்டில் இருக் கிறது (திருநெல். வ.). 4. மடைப்பள்ளி. (செ. சொ. பேரக.)

...

அன்1 கு. வி. அ. 1. (அன்னன், அன்னள், அன்னது முதலிய குறிப்புவினைமுற்று வடிவங்களின் முதல் நிலை) அத்தன்மை என்னும் ஒப்புமை நயம் பயப்பது. ஆஅங்கு அன்னவை தோன்றின் (தொல்.சொல். 171 சேனா.). யாமே புறஞ் சிறை இருந்தும் பொன்னன்னம்மே (புறநா. 84, 2 யாம், அவனுடைய சிறைப்புறத்திருந்தும் .... பொன் போலும் நிறத்தையுடையேம் ப. உரை). உயிர்க்கு உயிர் அன் னர் ஆகலின் (குறுந். 218). மாரிக் குன்றத்துக் காப் பாள் அன்னன் (ஐங்.206). இளையோன் முன் னுறப் பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான் அன்னேன் (அகநா. 203, 11-12). ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே அன்னாய் நின்னொடு முன் னிலை எவனோ (மதுரைக். 205-206 அன்னாய் அத் தன்ன யுடையதாய். நச்.). அன்னை என நினைஇ நின் னடி தொழுதனம் (பரிபா. 13,61). 2. ஓ என்னும் இடைச்சொல் ஏற்றுவரும் ஒரு சொல். அன் ஈற்று ஓவும் ... குறிப்பொடு கொள்ளும் (தொல். சொல். 277 அன்னோ அன்னோ -இளம்.).

...

S

அன்' இ. சொ. 1. உயர்திணைப் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி. அன் ஆன் அள் ஆள் என் னும் நான்கும் படர்க்கைச் சொல்லே (தொல்.சொல். 205 சேனா.). மூதூர் வாயில் உண்டுறை நிறுத் துப் பெயர்ந்தனன் (குறிஞ்சிப். 237). 2. தன்மை ஒருமை வினை விகுதி. அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற ஒருமைத்தன்மை (நன். 331). அன்மைக் கண்ணும் அன் விகுதி கொள்ளாதொழியின் பாவினங் கூறுவன் என்றற் றொடக்கத்தன அமை யா என்க (முன். சங்கரநமச்.). 3. ஆண்பால் பெயர் (வினையாலணையும் பெயரினும் வரும்) விகுதி. அன் என்னும் பெயர் இறுதி ஆவாய் விளியேற்கும் (தொல். சொல். 127 இளம்.). துறைவன் (அகநா. 40, 16). 4. ஒருசாரியை, அன்என் கிளவி உளப்படப் பிறவும் அன்னசாரியை மொழியே (தொல். எழுத் 120 இளம்.).வந்தனன் (புறநா. 79, 4. கண்டனன் (சிலப். பதிகம் 26)

அன்3 பெ. பெ.

(அன்னை என்பதன் என்பதன் கடை குறைந்து வந்த வடிவம்) தாய். அன்னொப்பானை (தேவா.

5, 3, 8).

பெ. சொ . அ 1-33 அ

515

அன்பனாதி

அன்பகம் (அன்பகர், அன்பர் 2) பெ. கடற்பாலை என் னும் பூண்டு. (சங். அக.)

அன்பகர் (அன்பகம், அன்பர்2) பெ. கடற்பாலை என்னும் பூண்டு. (வைத். விரி. அக. ப. 25)

அன்பகன் பெ. நல்ல இதயமுள்ளவன். (கதிரை'. அக.) அன்பர்' 1. பெ. (அன்பு பூண்டு ஒழுகும்) தோழர். அடியார்க்கு அன்பர் (தேவா. 2,63,5). எற்கு அன்பர் நினக்கு அன்பர் ஆயினார்

...

(கம்பரா.

6, 3, 172). இவரே என் அன்பர் (விலிலி. மத்தேயு 12,18). காளியும்... தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள் (பாரதி. தேசியம் 42, 104-105). 2. அடியார், பக்தர். அன்பர் முன்னாகச் செஞ் சடை வேதியர் மன்னும் (பெரியபு.28,293). பாம் பணைப் பள்ளியான் அன்பர் (திருவரங். கலம். 4).

அன்பர்2 (அன்பகம், அன்பகர் ) பெ. கடற்பாலை என் னும் பூண்டு. (மரஇன. தொ.)

அன்பரீசப்பூ பெ. மலர்ந்த கிளிஞ்சில்

(சாம்ப. அக.)

அன்பரீசம் பெ. கிளிஞ்சில். (முன்.)

சுண்ணாம்பு.

அன்பளிப்பு பெ. 1. அன்பின் அடையாளமாகத் தரும் பொருள். நண்பன் பிறந்தநாளுக்கு இது என் அன் பளிப்பு (புதிய வ.). 2. நன்கொடை. ஆசிரியர் பள்ளி வளர்ச்சிக்கு அன்பளிப்பு ஆயிரம் ரூபாய் அளித் தார் (செய்தி.வ.).

அன்பன் பெ. 1. அன்புடைய நண்பன். அதிரல் அங் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் (பரிபா.20,81). ஆரூரன் மதியாது சொன்ன அன்பனை (தேவா. 7, 38,10). யாழ் பயில் பாணபத்திரன் தன்போல் என் பால் அன்பன் (திருவால. பாசுரம்). 2. (அன்புடைய) கணவன். அன்பனைக் காணாது அலவும் என் நெஞ் சன்றே (சிலப். 18, 17). தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார் (கம்பரா. 4,9, 81). தம் காதல் அன்பன் இறை என்ன மாதர் சந்ததமும் தொழுவாம் (சிலையெழு. 33). 3. அடியவன், பக்தன். குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடைந்தவர்கட் கெல்லாம் அன்பன் (மதுரகவி. கண்ணி. 11). நீண்ட வன் அன்பன் உற்ற நெடுந்துயர் போக்க எண்ணி (எதுமலை. பு. 7).

அன்பனாதி பெ. கணவன் மேலுண்டாகும் காமமேலீட்டி னாலும், என்றுங்கலவியிலேயே எண்ணங் கொண் டிருப்பதனாலும், பெண்டிர்க் குண்டாகும் சுரநோய். (செ. சொ. பேரக.)