உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவுத்திரி

அவுத்திரி பெ. அக்கினி வளர்த்து ஓமத்தோடு செய்யும் சிவதீட்சை. அவுத்திரி இரண்டுதிறனாம் (சி. சி. சுபக். 8, 3). மீக்கூறும் அவுத்திரிதான் (சிவஞா. காஞ்சி. தழுவக். 53).

அவுதசியம் பெ. பால்.

அவுதா பெ. அம்பாரி.

(இராமநா. 6, 72 தரு 1).

(தைலவ.53/ செ.ப.அக.)

அவுதாக்கள் முத்துக்குடை

அவுதானம் (அவதானம்) பெ. (ஒரே சமயத்தில் பல பொருள்களைச் சார்ந்து காணும்) நினைவாற்றல். அவுதான வித்தை சொல்ல ஆர்க்கும் அரிதாம்

(சங்கமே. விறலி. தூது 156).

அவுதானி (அவதானி) பெ. 1. கவனிப்புள்ளவன். (பே.வ.) 2. வேதங்களில் தேர்ச்சிபெற்றவன். (பே. வ.) 3. ஒரே நேரத்தில் பலவகை வினாக்களுக்கும் தன்னினைவாற்றலால் விடைகளை வரிசையாகக் கூறுப வன். அட்டாவுதானி அருமைத்தமிழ் பாட (சங் கமே. விறலி. தூது 133).

அவுதும்பரம் பெ. (மருத்.) செம்பு. (குண. 2 ப. 84) அவுபலபாடாணம் பெ. பிறவிப்பாடாண வகை. (சங். அக.) அவுபாசனம் பெ. காலை மாலைகளில் திருமணமான பிராமணன் ஓமத்தீயோம்புகை. அவுபாசனமும் மாத்தியானிகமும் பண்ணியிடார் பவமும் தனுக் கோடியில் தீரும் (சேதுபு. சேதுபல. 133).

அவுரி (அவிரி) பெ. நீலிச்செடி. அவுரி அவுரி பத்தியம் நீலியாகும் (பிங்.2876). காராளர் அவுரி பயிர் செய்க என்று கட்டாயப்படுத்துவது கயமை (காந்தி காதை. 4, 2, 23). நிலச்சுவான்தாருக்காக 2,23). அவுரி செய்தாக வேண்டும்

யைக் கட்டாயம் பயிர்

(சத்தியசோ. அத். 12).

அவுரி பெ. கொளுஞ்சி.

(மரஇன.தொ.)

அவுரி' பெ. மீன்வகை. (செ. ப. அக. அனு.)

அவுரி பெ. நெல்தூற்றும் மரத்தட்டு. (இலங். வ). அவுரிச்சால் பெ. வாயகன்ற பெரிய சால். (செ.ப. அக. அனு.)

அவுரிநீலம் பெ. கருநீல நிறம். (வானவி. க.சொ. ப. 6).

அவுரிநெய் பெ

அவுரிவேரினின்று இறக்கும் ஒருவகை

நெய். (சாம்ப. அக.)

அவுரிப்பச்சை பெ. பச்சைக் கருப்பூரம். (செ. ப. அக.அனு.)

444

அவை

அவுல்தார் (அவால்தார், அவாலுதார், அவில்தார்) பெ. சிறுபடைக்குத்தலைவன். (செ. ப. அக.)

அவுலியா பெ. (இசுலா.) ஞானி. துரமுறும் அவு லியாவாய்த் தோன்றின பேர்க்கு (சீறாப்பு. 1, 1, 16).

அவுழ்தம் (அவிடதம், அவிழ்தம், அவுடதம், ஒளடதம்) பெ. மருந்து. மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் (தாயுமா. 44, 47).

அவுளிமீன் பெ. ஒருவகைக் கடல் மீன். (சாம்ப. அக.) அவுளியா பெ. வவ்வால் மீன். (செ. ப. அக.)

அவுறு -தல் 4 வி. கட்டுநெகிழ்தல். வேட்டி அவுறுது

(கோவை வ.),

அவுறுதம் பெ. 1. பித்தநோய்வகை. (வின்.) 2. கிரந்தி நோய்வகை. (முன்.)

அவெளி பெ. நரிவிளாமரம். (சங். அக.)

அவேத்தியன் பெ. அறியப்படாதவன். சிவன் அவேத் தியனுமல்லாமல் சத்சித் சொரூபனாகி நிற்பான் (சி. சி. 6, 1 சிவாக்.).

அவேளை பெ. வேளையல்லாத வேளை. (செ.ப. அக.) அவை 1-த்தல் 11 வி. 1. (நெல் முதலியவற்றைக்) குற்றுதல். அவையா அரிசி அம்களித்துழவை (பெரும் பாண். 275). தீங்கரும்பு நல்லுலக்கையாகச் செழு முத்தம் அவைப்பார் (சிலப். 29 வள்ளைப்.). 2.(கையால்) குத்துதல். ஆவி அயர்ந்து உனது அங்கை அவைத்தலின் (சேதுபு. தேவிபுர. 61).3. நெரித் தல். இறை விரலால் அவைத்து (தேவா. 6,55,11).

...

அவை'-த்தல் 11 வி. அவித்தல். அவைத்தலும் அவியலாகும் (பிங். 1833).

...

அவை3 சு. பெ. அஃறிணைப் படர்க்கைப் பன்மைச்சுட்டு. அவை இவை உவை என வரூஉம் (தொல். சொல். 167 சேனா.). அவையெல்லாம் விரித்துரைப்பிற் பெருகும் (இறை. அக. 1 உரை). அவை அல்லையாய் (திருவாச. 22,6). அவையெலாம் வந்து இயைந்தன (கம்பரா. 1,9,21). அவையே தானே யாய் ... நீக்க மின்றி நிற்கும் (சி. போ. 2).

...

அவை பெ. 1. அரசன் வீற்றிருக்கும் மண்டபம், நாளோலக்கம். அவைபுகு பொருநர் பறையின் கழறுப (அகநா. 76, 5). இசைபெறு திருவின் வேந்து அவை ஏற்ப (மலைபடு. 39). செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் (புறநா. 54,3). முடிகெழு