சமீபித்து விட்டதை உணர்ந்தான்; ஆதலால், தன் திரண்ட செல்வத்தைத் தன் மூன்று பிள்ளைகட்கும் பகிர்ந்து கொடுத்தான்; விலையுயர்ந்த ஓர் இரத்தினத்தை மட்டும் தான் வைத்துக் கொண்டான். ஒரு நாள், அவன் தன் மூன்று குமாரர்களையும் அழைத்து, ‘என் அருமைச் செல்வர்களே! இன்று முதல் மூன்று மாதங்களுள், உங்களுள் எவன் ஒருவன் பிறர் செய்தற்கு அரிய செயலைச் செய்து முடித்து, என்னிடம் சொல்லுகின்றானோ, அவனே என்னிடம் உள்ள மாணிக்கத்தை அடைவான்,’ என்று மொழிந்தான்.
நாட்கள் கழிந்தன; மாதங்கள் மறைந்தன. ஒரு நாள், மூன்று பிள்ளைகளும் தந்தையிடம் சென்றார்கள். மூத்தவன் தன் தந்தையை நோக்கி, ‘அப்பா, எனக்கு அறிமுகமில்லாத ஒருவன் தன் திரளான பொருளை என்னிடம் கொடுத்து வைத்திருந்தான். பல நாட்கள் கழிந்த பின்னர், அவன் தன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி என்னைக் கேட்டான். அவன் என்னிடம் பணம்
கொடுத்த போது, சாட்சியில்லை; கொடுத்ததை உண்மைப்படுத்தக் கடிதமும் இல்லை. ஆதலால், அவன் பணத்தைக் கேட்ட போது, நான் ‘இல்லை’ என்று சொல்லியிருந்தால், அவனால் என்னை ஒன்றும் செய்ய இயலாது.
17