உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அராபியர்களின்‌ தேசீய இயக்கம்‌

21

அராபியர்கள் நல்ல சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொண்டார்கள். இதற்கு பிரிட்டனும் உதவியாயிருந்தது. துருக்கிக்கு விரோதமாக அராபியர்களைக் கிளப்பி விடுவதில், பிரிட்டிஷார் சிரத்தை காட்டினர். டி.இ. லாரென்ஸ் என்பவன், பிரிட்டனின் கையாளாயிருந்து, துருக்கிக்கு விரோதமாக அராபியர்களிடையே பிரசாரஞ் செய்து வந்தான். அதனோடு, அவர்களுடைய சுதந்திர ஆவலையும் அதிகரிக்கச் செய்தான். எப்படியும் துருக்கிக்கு ஆதரவாக அராபியர்கள் இருக்கக் கூடாதென்பது பிரிட்டனின் கவலையாயிருந்தது.

1915ம் வருஷம், அப்பொழுது எகிப்தின் ஹை கமிஷனராயிருந்த ஸர் ஹென்ரி மக்மோஹன் என்பவன் மூலமாக, மெக்கா நகரத்தின் அப்பொழுதைய ஷெரிப்பாக (அதிபதியாக) இருந்த ஹுஸேனுக்கு பிரிட்டன் கொடுத்த வாக்குறுதியின் மூலம், அராபிய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரமானது, ஓர் ஒப்பந்தத்தின் மூலம் ஊர்ஜிதம் செய்யப் பட்டது. இஃது, அராபியர்களுக்கு ஒரு வித உற்சாகத்தையும், நம்பிக்கையையும் உண்டு பண்ணியதோடு கூட, பிரிட்டனிடத்தில் ஒரு நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தி வைத்தது. மேற்படி ஒப்பந்தத்தில், பாலஸ்தீனமும், சுதந்திர அராபியாவில் சேர்க்கப் பட்டிருக்கும் என்று குறிப்பாகச் சொல்லப்படவில்லை. பாலஸ்தீனம் ஒரு தனி நாடாக இல்லாமையினாலும்,, அராபியாவுக்குட்பட்ட பிரதேசமா யிருந்தபடியாலும், எப்பொழுது அராபியாவின் சுதந்திரம் அங்கீ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/31&oldid=1671386" இலிருந்து மீள்விக்கப்பட்டது