பாலஸ்தீனம்/பிரசுராலயத்தின் வார்த்தை
Appearance
பிரசுராலயத்தின் வார்த்தை
‘பிரபஞ்ச ஜோதி’ பிரசுராலயத்தில் இப்பொழுது ஏழு குழந்தைகள் தவழ்ந்து விளையாடுகின்றன. ஆனால் இதைக் கண்டு, இந்த ஆலயத்தின் ‘கொத்தனோ’, நாமோ மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை; திருப்தியும் அடைய மாட்டோம். ஏன்? தமிழர்களின் அறிவுப் பசி எவ்வளவு அதிகமாயிருக்கிறதென்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். வயிற்றுப் பசியோடு, அறிவுப் பசியையும் விரைவில் தணிக்க வேண்டுமென்ற ஆவல் எமக்கு அதிகமாயிருக்கிற போது, இந்த ஏழு குழந்தைகளைக் கண்டு மட்டும் நாம் எப்படி திருப்தியடைய முடியும்? ஆனால், அப்படி நாம் திருப்தியடைவது, எமது குழந்தைகளைத் தமிழர்கள் கையிலெடுத்துச் சீராட்டிப் பாராட்டுவதிலன்றோ இருக்கிறது?
இது காறும் எமக்கு ஆதரவு காட்டிய அன்பர்களுக்கு நன்றி; இனியும் காட்டப்போகும் அன்பர்களுக்கு எமது வணக்கம்.
பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்.