உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கொப்புளம்

அணுக்கொப்புளம் பெ. மிகச் சிறிய கொப்புளம். (சாம்ப.

அக.)

அணுகம்

பெ. சிறுமை. (சங். அக.)

அணுகலர் பெ. பகைவர், அயலார். (முன்.)

அணுகன்1 பெ. திறமைமிக்கவன்.

(நாநார்த்த.278)

அணுகன்2

பெ. அற்பன். (முன்.)

அணுகார் பெ. பகைவர். (சங். அக.)

அணுகாரணவாதம் பெ. பரமாணுக்களே

பிரபஞ்ச

காரணம் என்னும் மதம். (சி. சி. 1, 11 சிவஞான.)

அணுகு-தல்

1. 5 69.

நெருங்குதல். தாள் நிழல் மருங்கின் அணுகுபு (பொருந. 149). அந்தம் இல்ல தோர் இன்பம் அணுகுமே (தேவா. 5, 60, 10). அருணன் இந்திரன் திசை அணுகினன் (திருவாச. 20, 2). அனையவன் தன்னைக் கொண்டு...அணு குதி அன்ப (கம்பரா. 6, 16, 4). அடிகளை அணு கினன் அடிகள் போற்றியே (கந்தபு. 6, 8, 4). நிரைப்படச் சரிக்குங் கானகத்தில் அணுகி (குசே. 83 ). 2. (நூல், சமூகச் சிக்கல் போன்றவற்றைச் சில கொள்கை வழி) ஆராய்தல். (புதிய வ.)

அணுசகம் பெ. சந்தனம். (வைத். விரி. அக. ப. 14)

அணுசதாசிவர் பெ. சுத்தமாயா தத்துவத்தில் இருக் கும் சுத்தமான ஆன்மாக்களான ஆணவமலம் ஒன்றே உடையவர்கள். நிலையாப் புகழ் சுத்த அணுசதா சிவர்கள் (தத்து. பிர. 45).

அணுசாத்திரம்

(புதிய வ.)

பெ. அணுக்களைப் பற்றிய நூல்.

அணுசிதம் பெ. சத்தி செயல். (உரி.நி.8,8,1)

அணுசைவம்

பெ. சைவம்

(சங். அக.)

பதினாறனுள் ஒன்று.

அணுத்தத்துவம் பெ. நுண் அணுவின் உண்மையை விளக்கும் ஒரு நூல். (சாம்ப. அக.)

அணுத்திரள் பெ. நுண்பொருள் தொகுதி. மொழி முதற் காரணம் ஆம் அணுத்திரள் (நன். 58). தனிமையாகத் தோற்றமளிக்கும் அணுக்கூட்ட மாகிய பொருள் (சாம்ப. அக.).

17

1

அணுயுத்தம்

அணுத்துவம் பெ. நுண்மை. சூக்கவழிச் செல்கைக் கும் தூலமாய் விண்தன்னை நிறைகைக்கும் அணுத் துவத் தூலத்துவம் உடற்குத் தருமாறு எங்ஙன் (ஞானவா. உபசாந்தி. சிகித்து. 56).

அணுதரிசினி பெ. நுண்பொருளைப் பெரிதாய்க் காட் டும் கருவி. (செ. ப. அக. அனு.)

அணுநுட்பம் பெ. நுண் அணு. (சாம்ப. அக.)

அணுப்பீச்சி பெ. நுண் துளி சிதறுங் கருவி. (முன்.) அணுபட்சம்1 பெ. அசுத்தப் பிரபஞ்சத்தில் தொழில் புரியும் சிவபேதங்கள். (சி.போ.பா.2, 4)

அணுபட்சம் 2 பெ. ஆன்மாக்கள் தாமே பக்குவப்பட்டு இறைவனை அடையும் நெறி. ஆனநெறியாஞ் சரியை யாதி சோபானமுற்று அணுபட்ச சம்புபட்ச மாமிரு விகற்பமும் (தாயுமா. 5, 5).

அணுபரிணாமவாதம் பெ. அணுவிலிருந்து எல்லா உலகமும் உண்டாயிருப்பதாகக் கூறும் கொள்கை. (செ.ப.அக. அனு.)

அணுபவை பெ. காட்டுப் பயறு. (சாம்ப. அக.)

அணுபேதம் பெ. ஆன்மபட்ச வேறுபாடு. சிவபேதம் அணுபேதம் எனப் பிரமாதி (சி. சி. சுப. 2, 27

ஞானப்).

அணுபை பெ. மின்னல். (சங். அக.)

அணுமூலுதுவரை பெ. போகர் நிகண்டில் குறிப்பிடப் படும் ஒரு துவரை வகை. (சாம்ப. அக.)

அணுமை1 பெ. அருகு. அவ்விட அணுமை பற்றி அதன் உவமையை அம்மதில் மேலதாகக் கூறிற்று (பதிற்றுப். 16, 2 ப. உரை). ஓசை கேட்கும் அணுமை யினாலே (கலித். 108, 35 நச்.).

அணுமை2 பெ. அனுமானப் பிரமாணம். புனைவு

சேரணுமை (நீல. 119).

அணுயுகம் பெ. அணுவின் ஆற்றலைப் பயன்கொள்ளும் அறிவியல்காலம். (புதிய வ.)

அணுயுத்தம் பெ. அணுவின் ஆற்றலைப் பயன்படுத்திச் செய்த ஆயுதங்களைக் கொண்டு புரியும் போர். (செய்தி. வ.)